(Reading time: 11 - 22 minutes)

ந்த பேச்செல்லாம் காதில் விழுந்தாலும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தரம் 

 "கிளம்பு அனு, நேரமாகிறது, உன் அப்பாவும் , அண்ணனும் வரும் நேரமாயிடுத்து“ என்று கிளம்பினார்கள் இருவரும்

ஓ! உன் பெயர் அனுவா! ரொம்ப நல்ல பெயர், என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்

 உடனே சுந்தரமும் அவர்களுக்கு தெரியாமல் அவர்களை பின்தொடர்ந்தான். அவர்கள் வீட்டுக்குள் செல்வதை பார்த்துக்கொண்டான், சரி வீடு தெரிந்து விட்டது என்று சென்று விட்டான். வீடு சென்றும் அவனுக்கு அந்த பெண்ணின் ஞாபகமாகவே இருந்தது….

இது பற்றி தியாகராஜன் சார்கிட்ட நாளைக்கே பேசணும், என்று நினைத்துக் கொண்டு படுக்கப் போனான்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

றுநாள் தன்னுடைய நலம் விரும்பி தியாகராஜன் சாரை போய் சந்தித்தான் அவரிடம் அந்த பெண்ணை கோவிலில் பார்த்ததை சொன்னான். அந்த பெண்ணின் அழகில் தான் மயங்கியதையும் அவளையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும், அதற்கு, அவர்தான், அந்தப் பெண்ணின் வீட்டில் போய் பேசவேண்டும் என்று சொன்னான்.

தியாகராஜனுக்கு, சுந்தரத்தை நன்றாக தெரியும் அவன் எதை செய்வதற்கும் யோசிக்க மாட்டான். அதனால், அவன் முடிவு சரியாகவே இருக்கும். 

தியாகராஜன், சுந்தரம் படித்த ஸ்கூல் ஹெட்மாஸ்டர். சின்ன வயதிலிருந்தே சுந்தரத்தை ரொம்பவும் பிடிக்கும். நல்ல அழகு, அவருடைய தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஹார்ட் வொர்க்,எல்லாமே ரொம்பப் பிடிக்கும்.

தியாகராஜன் சிந்தனையில் ஆழ்ந்தார், பிறகு ‘அவர்கள் முகவரியை கொடு, நான் நாளை அவர்கள் வீட்டிற்கு போய் பேசுகிறேன்,” என்றார்.

சுந்தரமும் ஒரு சின்ன புன்னகையை வெளியிட்டு முகவரியை கொடுத்தான்.

அவர் காலில் விழுந்து ஆசி வாங்கி, “சார், நீங்கள் நாளை நல்ல செய்தியுடன் வருவீர்கள் என்று ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருப்பேன்.”

‘ஆண்டவன் உனக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார், எப்பொழுதும் நல்லதையே செய்வார்.நான் முன்னால நின்று உன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்” என்றார்.

சுந்தரம் கிளம்பி செல்வதையே பார்த்து கொண்டிருந்தவர் நினைத்துக்கொண்டார், ஒரு கம்பெனிக்கு முதலாளியாய் இருந்தும் என்ன ஒரு அடக்கம் இவனுக்கு..

றுநாள் வழக்கம் போல் எழுந்திருக்க முடியாமல், சுந்தரம் கஷ்டபட்டான். அவனுக்கு இரவு முழுவதும் அந்த பெண்ணையே, நினைத்து ரொம்ப லேட்டாக தூங்கியது ஞாபகம் வந்தது.மறுபடியும் அவள் நினைவு அவனை ஆட்கொண்டது. 

மணியைப் பார்த்தான், மணி ஏழாகியிருந்தது. ஆ! இவ்வளவு லேட்டாகி விட்டதே!! என்று மட மடவென்று பாத்ரூம் சென்று ரெடியாகி ஹாலுக்கு வந்தான். எப்பொழுதுமே சுந்தரம் காலை நாலரைகெல்லாம் எழுந்துவிடுவான். காலை ஜாகிங் செய்துவிட்டு, லோகம் வரும்போது, பேப்பர் படித்துக்கொண்டிருப்பான்,

ஆனால், இன்று என்ன ஆகிவிட்டது இன்னும் ஐயாவைக் காணோமே, என்று பார்த்துக்கொண்டிருந்தாள். 

மணி ஏழரைக்கு, அவரை பார்த்தவுடன், “என்ன உடம்பு சரியில்லையா ஐயா, ஏன் இவ்வளவு லேட்?” என்று லோகம் கேட்டுகொண்டே அவருக்கு காபி கொடுத்தாள்.

“ஒன்றுமில்லை இன்று கொஞ்சநேரம் தூங்கி விட்டேன் அவ்வளவுதான்” என்றான்.

காபியை குடித்துவிட்டு அவசரமாக கோவிலுக்கு சென்றான். அங்கு அவன் கடவுளிடம் மனதோடு பேசிகொண்டிருந்தான். நேற்று, உன் கோவிலில் எனக்கு காண்பித்த அந்த பெண்ணை என் வாழ்கை துணையாக்கவேண்டும். நீ கண்டிப்பாக செய்வாய் என்று எனக்கு தெரியும், என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டிருந்தான்.

வீட்டுக்கு வந்தான், லோகம் அவன் உள்ளே நுழைவதைப் பார்த்தாள் “டிபன் ரெடி ஆகிடுத்து சாபிடுகிறீர்களா” என்று கேட்டாள். அவனுக்கு மனது ஒரு நிலையில் இல்லை. “சரி,” என்று கூறி,டைனிங் டேபிளில் உட்கார்ந்தான், லோகம் அவனுக்கு

‘டிபன் பரிமாறினாள். அவனும் சாப்பிட்டவுடன் ஆபிசுக்கு கிளம்பி போய்விட்டான். 

ஒரு பத்தரை மணியளவில் சுந்தரத்தின் செக்ரட்டரி ஸ்ரீனிவாசன் வந்து “சார் உங்களை பார்க்க திரு. தியாகராஜன் இன்னும் இரண்டு பேருடன் வந்திருக்கிறார்” என்றார்.

 “உடனே அவரை…. ஏன் நேரே உள்ளே கூட்டிக்கொண்டு வரவில்லை” என்று கூறிக்கொண்டே எழுந்து வேகமாக வெளியே சென்றான்.

அங்கு அந்த மூன்று பேரையும் பார்த்து “வாங்க, உள்ளே வாங்க” என்று அவர்களை உள்ளே அழைத்து சென்றான்.

போகும்போதே ஸ்ரீனிவாசனை உள்ளே வரச்சொன்னார்.

அவர்களை உட்கார சொல்லிவிட்டு “என்ன சாபிடுகி றீர்கள்”

அவர்கள் ஒன்றும் வேண்டாம் என்றனர்.

 "சார் வந்து உங்களை பற்றி சொன்னார் அதான் பார்த்து பேசிவிட்டு போகலாமென்று வந்தோம்" என்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.