(Reading time: 17 - 33 minutes)

21. சதி என்று சரணடைந்தேன் - சகி

Sathi endru saranadainthen

சில நேரங்களில் அடுத்தவர் ஆற்றும் தீய பணிகளின் பலனானது அப்பணி செய்தவரை அடைய தாமதமாகலாம்!!!ஆனால்,கர்ம வினைகள் என்பது மகத்துவம் நிறைந்தது!!எய்தியவன் பாதம் சேரும் தன்மையுடையது!!!அச்சம் கொள்ள வேண்டாம்!!தாம் யாருக்கு குழி தோண்டுகிறீர்களோ!அது தமது தோட்டத்தில் தோண்டப்படுகிறது என்பதை மறவ வேண்டாம்!!!

"சீக்கிரம் எல்லாப் பொண்ணுங்களையும் ஷிப்ல ஏத்துங்க!"-ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

சின்னஞ்சிறு பெண்கள் யாவரும் கதறி அழும் ஓசை செவிகளில் புகுகின்றது.

"நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டிங்க!!கடவுள்னு ஒருத்தன் இருந்தான்னா உன் வம்சமே அழிந்துப்போகும்!"-தைரியம் நிறைந்த பெண் ஒருத்தி சாபம் வழங்கினாள்.ரகுவரன் ஓங்கி அவள் கன்னத்தில் அறைய அவள் மயங்கி சரிந்தாள்.

"தூக்கி போங்கடா!வந்துட்டா பெரிய பத்தினித்தீ!!!"-கப்பல் கிளம்ப ஆயத்தமானது.

"எவ்வளவு பெரிய தவறிழைத்தேன்?காதலித்த நாட்களில் கௌதமுக்காக துளி நேரம் செலவிட்டது இல்லை.எவ்வளவோ ஆணவம் அவன் காதலை என்னிடமிருந்து தூரமாக்கியது.நல்லவேளையாய்,என்னை போல ஒருத்தியை விலக்கி அவன் வாழ்வை நல்ல பெண்ணோடு இணைத்துள்ளது காலம்!!மனதை வியாபித்த வேதனையை எவ்வாறு களைவேன்??தந்தை செய்யும் தவறுகளை அறிந்திருந்தும் தடுக்காமல் போனேனே!!!எத்தனை குடும்பங்கள் கதறி இருக்கும்?போதும்....அனைத்திற்கும் முற்றுப்புள்ளியை என்னால் மட்டுமே வைக்க இயலும்!!"-வழிந்த கண்ணீரை துடைத்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

தனது மடிக்கணினியை எடுத்தாள்.

"ராகுல்!!ப்ளீஸ் நீங்க இந்த மெயிலை பார்க்கிறது அவசியம்!!நான் அக்ஷயா ரகுவரன்! Propertier of akshaya foundations.நான் இதுவரைக்கும் என் அப்பா செய்த பல விஷயங்களுக்கு மறைமுகமா ஆதரவு தந்தேன்!இன்னிக்கு அவர் செய்த எல்லா தவறுகளையும் ஆதாரத்தோட உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்! எல்லாத்துக்கும் ஸாரி! கௌதமிடமும், அனுவிடமும் மன்னிப்பு கேட்டதாக சொல்லுங்க!இனி அவங்க வாழ்க்கையில வர மாட்டேன்!பாய்!"-என்ற மின்னஞ்சலை அனுப்பினாள் அக்ஷயா!!பெரிய மாறுதல் தான்!!!கௌதமின் நிரந்தர பிரிவே அதற்கு காரணம்!!!

"ஷிப் கிளம்பட்டும்!"-அறிவிப்பு கப்பலோட்டியை அடைந்தது...

கப்பலை கிளப்பியவரின் கழுத்தை உறுதியான கரம் இறுக பற்றியது.அது அவர் கழுத்தை நெறிக்கவும் அவர் மயங்கி சரிந்தார்.

"கப்பலை நிறுத்துங்க சார்!"-ராகுல் அழைத்து வந்திருந்த கப்பலை இயக்கும் வித்யையை அறிந்தவர் கப்பலை உடனடியாக நிறுத்தும் பணியில் இறங்கினார்.

கட்டுப்பாட்டு அறையை விட்டு வெளியே வந்தான் ராகுல்.

இருவர் அவ்வழியே நடக்க அவர்களிடமிருந்து மறைந்தான்.

யாவரும் அறியாதவண்ணம் அங்கு அடைத்து வைக்கப்பட்ட பெண்கள் இருக்கும் அறைக்கு சென்றான்.

அவனை கண்டதும் அனைவரும் அலறினர்.

ஒரு நொடி கண்கள் கலங்கின அவனுக்கு!!!

பெண்டிரை மனிதப்பிறவியாய் மதிக்கும்  எவருக்கும் கண்ணீர் வருவது சாத்தியமே!!!

"அமைதியா இருங்கம்மா!என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது!நீங்க நான் சொல்ற வரைக்கும் இங்கேயே இருங்க!பயப்பட வேண்டாம்!உங்களை பத்திரமா உங்க வீட்டில சேர்ப்போம்!"

"நாங்க எப்படி நம்பறது?"-அவன் பேச வாயெடுக்க அவன் தலையில் துப்பாக்கி வைக்கப்பட்டது.அனைவரும் பதறினர்.

ஆஜானுபாகுவான தோற்றமுடைய ஒருவன் அவன் பின் நின்றிருந்தான்.

அவன் ராகுலை சுட ஆயத்தமானான்.திடீரென யாரோ அவன் கழுத்தை நெறிக்க அவன் கரம் தளர்ந்து துப்பாக்கி கீழே விழுந்தது.

ராகுல் திரும்ப அவன் பின்னால் ரகு நின்றிருந்தார்.

"அப்பா!"

"சி.பி.ஐ.!பயப்படாதீங்க!உங்களுக்கு எதுவும் ஆகாது!"-என்று தன் ஐ.டி.யை காட்டினார் ரகு.

"ராகுல்!எல்லாரையும் வெளியே அனுப்பு!"

"ஆனா!"

"சரண் இருக்கான்டா!"-அவர் கூறவும் அனைவரையும் துரிதப்படுத்தினான் ராகுல்.

அனைவரும் வெளியே ஓடினர்.

ரகுவின் தலையில் பலமாக ஏதோ தாக்க அவர் தடுமாறி மண்டியிட்டார்.

"வாடா!!அப்பாவும்,பையனும் உருவத்துல கூட ஒரே மாதிரி தானா??"

"............."

"என் சாம்ராஜ்ஜியத்தையே அழிச்சிட்டீங்க!உங்களை உயிரோட விட மாட்டேன்!"-ரகுவரன் துப்பாக்கியை நீட்ட ரகுவிற்கு அரணாய் அவர் முன் நின்றான் ராகுல்.

"சுடு!"

"வா!ஹீரோ!கிளைமாக்ஸ்ல உன்னை எதிர்ப்பார்த்தேன்!"

"............."

"இரண்டுப்பேரும் ஒண்ணா போய் சேருங்க!"-அவர் டிரிகரை அழுத்தினார்.ஆனால்,அது வெடிக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.