(Reading time: 17 - 33 minutes)

"ம்...காது கேட்கலை!என்ன சொன்ன?"-என்றான் சாதாரணமாக.

அவர் மீண்டும் மீண்டும் அழுத்தினார்.பலனில்லை...

"என்ன உனக்கு மட்டும் தான் சன்பென்ஸ் தர தெரியுமா?எனக்கு தெரியாதா?எங்கே சுடு!!சீக்கிரம் டைம் இல்லை!கதையை முடிக்கணும்!"-அங்கிருந்த இருவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

"உன்னிடமும் நல்லவங்க இருக்காங்க!"-என்பதில் இருந்து குண்டு தொலைந்ததன் காரணம் விளங்கியது.

ரகுவரன் ராகுலை தாக்க வர அவன் சற்று விலகி அவன் கரத்தைப் பற்றி முறித்தான்.

"எத்தனைமுறை எச்சரித்தேன்?கேட்டியா?"-அவர் வலியில் துடித்தார்.

அவன் அவரை இழுத்து அங்கிருந்த கம்பியில் மோத வைத்தான்.தலையிலும் அடிப்பட்டது.

"என்ன செய்ய போறான்னு நினைத்தாயா??ராகுல்...சொல்லிட்டு செய்யுற பழக்கமே இல்லை!!"-அவர் அரை மயக்கத்தில் சாய்ந்தார்.

"பெத்த பொண்ணே தற்கொலை செய்ய தூண்டுதலா  இருந்திருக்க!நீயெல்லாம் ஒரு அப்பாவா??"-அதைக்கேட்டதும் துடித்து போனார் ரகுவரன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

"இதோ எழுதி வைத்திருக்காப் பார்!உன் பொண்ணு!"-என்று ஒரு காகிதத்தை நீட்டினான்.

"டாடி!ஸாரி! செய்த பாவம் எல்லாம் போதும்! பலரோடு கண்ணீரை சேர்த்து வைத்து ஆண்ட வாழ்க்கை வேணாம்!நான் போறேன் டாடி!எனக்கு இந்த வாழ்க்கை வேணாம்!என் பாவங்களுக்கு தண்டனையை ஏத்துக்கிறேன்! இனி,உங்க இந்த வாழ்க்கை எனக்கு வேணாம்!அம்மா இருந்திருந்தா இந்த நிலை இல்லை.நான் போறேன்...அக்ஷயா ரகுவரனா இல்லை....அக்ஷயாவா அம்மாக்கிட்ட போறேன்!"-படித்தவர் கண்கள் குளமாயின.

"போதுமா??நீ மட்டும் இந்த கேவலமான வேலையை செய்யலைன்னா கவுரவமா அவ வாழ்ந்திருப்பா!திருப்தியா உனக்கு?"

"இப்போதும் எதவும் கெட்டு போகலை!தண்டனையை ஏற்றுக்கொள்.உன் மகளோட ஆத்மா சாந்தி அடையட்டும்!"

"டேய்!என் பொண்ணு சாகுற அளவுக்கு கோழை இல்லடா!என்ன ஏமாற்ற நினைக்கிறீயா?"

"உன்னைப் பற்றி சொல்லி என்னை வரவழைத்ததே உன் பொண்ணு தான்டா!உன் சொத்து எல்லாத்தையும் சீஸ் பண்ணியாச்சு!உன்னால எங்கேயும் தப்ப முடியாது!"

"என்னை உன்னால அழிக்க முடியாது!"

"உன்னால இப்போ தப்பிக்க முடியாது!"

"ம்...அதை நீ சொல்லாதே!"-என்றவர் அருகிலிருந்த கூர்மையான கத்தி போன்ற ஆயுதத்தை எடுத்து அவன் எதிர்நோக்கா சமயம் தன் கழுத்தில் செறுகி கொண்டார்.

"ஏ..!"

"என்னை உன்னால என்னிக்கும் ஜெயிக்க முடியாது!"-என்றப்படி சரிந்தார்.

ரகு குனிந்து அவரை தாங்க அதற்குள் அவரது உயிர் பறிப் போயிருந்தது.

மாதங்கள் ஓடின..

"பிரபல கடத்தல் தொழில் புரிந்து வந்த நிழல் உலக தொழிலதிபர் தற்கொலை வழக்கு!அவரது சொத்துக்கள் யாவும் முடக்கம்..!பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்தம் பெற்றேரிடம் ஒப்படைப்பு!"

தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த ரகு பெருமூச்சுவிட்டார்.

"அப்பா காப்பி!"

"தேங்க்ஸ்மா!"-ராகுல் தன் தந்தையோடு இணைந்ததால் மீண்டும் அவரோடு வாழ்வதில் நமக்கு ஐயமில்லை.ஏதோ சிந்தனையில் இருந்தவரின் அருகே வந்து 'தொப்!'என்று அமர்ந்தான் ராகுல்.

அவன் மேல் 'தொப்!'என்று குதித்தான் தேஜா!!

"ஐயயோ!முடியாதுடா!நீ ஆளை விடு!"-என்று அவனிடம் விளையாட கெஞ்சிய அந்த ஜீவனை விரட்டினான் ராகுல்.அது பாவமாய் அவனை பார்த்தது.

"தேஜா!"-தோட்டத்தில் இருந்து தீக்ஷா குரல் தர,அது,அவனை ஒதுக்கிவிட்டு ஓடியது.ராகுலின் கவனம் வாட்டமாய் இருந்த ரகுவை நோக்கி சென்றது.

"என்னப்பா?"

"பாவம்டா அந்தப் பொண்ணு!அநியாயமா இறந்துட்டா!"

"யாரு?"

"யாரை சொல்றீங்க?"

"அக்ஷயா!"

"அவ சாகலைப்பா!"

"எ..என்ன?நீதானே அன்னிக்கு?"

"தற்கொலை முயற்சி பண்ணா!ஆனா,உயிரோட தான் இருக்கா!"

"என்னடா சொல்ற?"

"அன்னிக்கு அவ அனுப்புன மெயில்ல எனக்கு சந்தேகம் இருந்தது!உடனடியா அவ வீட்டுக்கு பாேனேன் மயக்கமா இருந்தா!அம்மாக்கு போன் பண்ணி  விவரத்தை சொல்லி,ஹாஸ்பிட்டல்ல சேர்த்தேன்!இப்போ அவ நல்ல இருக்கா!'

"எங்கேடா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.