(Reading time: 17 - 33 minutes)

"ம்ம பிரஸ்ல பாரதின்னு ஒரு பொண்ணு ஜாயின் பண்ணிருக்கான்னு சொன்னேன்ல!"

"ஆமா..!"

"அது அக்ஷயா தான்!"

"என்ன?"

"தப்பு பண்ணவங்க யாரா இருந்தாலும் தவறை உணர்ந்தா மன்னிப்பு தரலாம்பா!அந்த காரியத்தை பண்ணாம இருந்ததால தானே நமக்குள்ள பிரிவே வந்தது!அதான் மறுபடியும் மன்னிக்காம அதே தப்பை நான் பண்ண விரும்பலை!"-ரகுவிற்கு என்ன கூறுவது என்றே புலப்படவில்லை.மனதில் கர்வம் குடிக்கொள்ள தன் மகனை அணைத்துக் கொண்டார்.

"நான் ஒண்ணு சொல்லட்டா!"

"என்னப்பா?"

"தப்பு செய்தவங்களுக்கு மன்னிப்பு தர சரி..தப்பே பண்ணாதவங்களுக்கு தண்டனை ஏன்டா தர?"-அவனுக்கு தூக்கி வாரி போட்டது. 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

'யாரை சொல்றீங்க?"

"உனக்கே புரிந்திருக்கும்!"-என்று எழுந்தவர்,

"தேஜா!வாக்கிங் போகலாம் வா!"-என்று நடக்க ஆரம்பித்தார்.

மனதில் சுருக்கென தைத்தது...

அவன் எதிர்காலம் நலமாக ஔி ஏற்றியவளை இன்னும் விலக்கி வைத்திருக்கிறான் அல்லவா??

"பாரதி!கொஞ்சம் உள்ளே வாயேன்!"-பாரதி என்று பெயர் மாற்றப்பட்ட அக்ஷயாவை அழைத்தான் ராகுல்.

"என்ன ராகுல்?"

"இப்படி உட்காரு!"-அவள் அமர்ந்தாள்.

"மச்சான்!நான் அப்பறம் வரேன்டா!"-அவள் அமர்ந்ததும் எழுந்தான் கார்த்திகேயன்.

"இரு மச்சி!எதுக்கு பி.பி.ஏறுது உனக்கு?"

"பாரதி...கார்த்திக் உன்கிட்ட ஏதோ சொல்லணுமாம் பார்..!!"

"என்ன?"

"அது...வந்துங்க!!"

"சொல்லுங்க!"

-ராகுல் இருவரையும் பார்த்தான்.

தன் கைப்பேசியை காதில் வைத்தவன்,

"சொல்லும்மா!ஆபிஸ்ல தான் இருக்கேன்!"-என்றப்படி வெளியே நகர்ந்தான்.

"அடப்பாவி..!"-என்று மனதில் எண்ணிய கார்த்திக் பாரதியை நிமிர்ந்துப் பார்த்தான்.

"சொல்லுங்க கார்த்திக்!"

"அது...எனக்கு...உங்களை பிடிச்சிருக்கு!ஐ லவ் யூ பாரதி!"-என்றான் தடுமாறியப்படி!!

அவள் முகம் இருண்டது.

"என்னைப் பற்றின உண்மைகள் உங்களுக்கு தெரியாதுங்க!தப்பா நினைக்காதீங்க!வேணாம்!"

"இல்லைங்க...எல்லாமே தெரியும்!"-என்றான் அவசரமாக!!!

அவள் கேள்வியாக பார்த்தாள்.

"மனதளவுல செய்த தவறை உணர்ந்தவங்க எல்லாரும் நல்லவங்க தாங்க!எனக்கு அக்ஷயா வேணாம்!என் பாரதியா வருவீங்களா?"-அவள் ஆடிப்போனாள்.

"பொறுமையா யோசிங்க!என் வீட்டிலயும் பேசி சம்மதம் வாங்கிட்டேன்!நீங்க மட்டும் தான் சம்மதிக்கலை!சம்மதித்து விடுவீங்கன்னு நம்பிக்கையில பிப்ரவரி 14 வரைக்கும் வெயிட் பண்றேன்!"

"அதுக்கு மேலே?"

"தப்பா நினைக்காதீங்க!அதுக்கு அப்பறமும் நீங்க சம்மதிக்கலைன்னா உங்க காதலுக்காக காத்திருப்பேன்! ஆனா,உங்க கணவனா!"-அவன் கூறியதன் பொருள் விளங்கியவள் திடுக்கிட்டாள்.

"ஏன்னா...எங்கம்மாவை சமாளிக்கிறது கஷ்டம்!சித்திரைக்குள்ள கல்யாணம் பண்ண சொல்றாங்க!இல்லை ஏழு வருஷத்துக்கு நான் பிரம்மச்சாரியாம்!!எதுக்கு வம்பு??கல்யாணம் பண்ணிட்டு வெயிட் பண்றேன் தப்பில்லை...பிப்ரவரி 14 வேலண்ட்டைன்ஸ் டே வேற அதான் ஒரு சென்ட்டிமன்ட்!"-அவள் இருக்கையைவிட்டு எழுந்தாள்.

"என்ன பதில் சொல்லாம போறீங்க?"

"அதான் பிப்ரவரி 14 வரைக்கும் டைம் இருக்கே!"-என்று கூறிவிட்டு நகர்ந்தாள் பாரதி!!!!

ஒருவனின் அடையாளம் என்பது அவன் ஆற்றும் பணிகளே ஆகும்!!!

செய்த தவறுக்காக யார் ஒருவர் மனம் வருந்துகிறாரோ!!அவர் நற்பணிகளை செய்யும் தகுதியுடையவராகிறார்!!அதன்பின்னும் அவருக்கு மன்னிப்பு அளிக்காமல் இருப்பது நமது தவறாகும் என்பதில் ஐயமில்லை!!!ஒருவரின் உன்னதத்தை புரிந்துக்கொண்டால் அவருக்கு வாழ வாய்ப்பளியுங்கள்!!!

மன்னிப்பு ஒன்றே மகத்துவத்தின் உச்சமாகும்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.