(Reading time: 23 - 45 minutes)

02. இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா - நீலா

iruvar kannukkum ore nila

துரையில் அந்த பிரபலமான தனியார் மருத்துவமனை வளாகம் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மதுரையின் புறநகர் பகுதியில் திடீரென ஏதோ ஒரு தொற்று நோய் ஆபாயம் இருப்பதால் நோயாளிகள் வந்த வண்ணம் இருந்தனர். அங்கேயிருந்த ஐசிசியு வில் இடம் பற்றவில்லை. அந்த அளவிற்கு ஜன நடமாட்டம் அதிகமாய் இருந்தது. 

அங்கிருந்த சிறப்பு ஐசிசியுவின் வாசலிலும் கூட்டம் அதிகமாய் இருந்தது. உள்ளேயிருந்து வயதில் மூத்த ஒரு ஆண் டாக்டரும் ஒரு இளம் வயது பெண் டாக்டரும் வெளியில் வந்தனர். அவர்கள் இருவரும் வருவதை பார்த்தவர்கள் பரபரப்பாய் அவர்களிடம் சென்றனர்.

அந்த கூட்டத்தில் இருந்த ஒரு முதியவர் அவசரமாய் அந்த டாக்டரிடம் ' தம்பி... இப்போ எப்படியிருக்கு???'

ஐயா..அவங்க உடல்னிலை பத்தி சொல்லனும்னா எங்களுக்கு இன்னும் 24 மணி நேரம் டைம் வேணும்..ஹார்ட் அட்டாக்...இப்போதைக்கு ஆபத்து நிலையிலதான் இருக்காங்க... இதை அவங்க தாண்டறது அவங்ககிட்டயேயும் அந்த கடவுள் கிட்டேயும் தான் இருக்கு! அவங்க மனசு வெக்கனும்... அவங்க மனசுல இருக்கற அழுத்தம் குறையனும்.... அப்போ தான் நாங்க அடுத்த கட்ட முயற்சிக்கு போக முடியும்...அவங்க மனசு யாரையோ தேடுது... அதை தீர்த்து வைக்கிற வழிய பாருங்க ஐயா... ' என்றுவிட்டு அவர் செல்ல அருகிலிருந்த அந்த பெண் மருத்துவர் மெதுவாக 'தாத்தா..' என்றழைக்க அந்த முதியவர் கண்களில் கண்ணீர்!

அம்மாடி...அம்மூ...' என்று அவர் தழுத்தழுக்க அவளோ அவசரமாய் வெள்ளை கோட்டையும் ஸ்டேத்தையும் கழற்றி அருகிலிருந்த நாற்காலியில் வைத்துவிட்டு அவர் கைகளை பிடித்துக்கொண்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

அம்மூ...நான் அவளை இப்படியாமா பார்க்கனும்? அவ இல்லாம...'

தாத்தா...ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க?

இல்லமா...அவளுக்கு இத்தனை வருஷமா கூட வாழுற புருஷன்கூட முக்கியமில்ல... அவ பேர பிள்ளைங்க... உங்களுக்காக வருத்தப்பட்டு அவ உடம்பை கெடுத்துக்கிட்டு எப்படி வந்து படுத்திருக்கா பாரு?? என்ன அவளுக்கு மட்டும் தான் உங்க மேல அக்கறையிருக்கா??? பாசமிருக்கா?? ஏன் எனக்கு இல்லையாடா அம்மூ... அப்ப நானும் நெஞ்சு வலினு படுத்துகிடவா???

அச்சோ சிவா... என்ன இப்படி பேசறீங்க?? உங்க செண்பா க்கு மேல இருப்பீங்க போல இருக்கே! முதல்ல அவங்க மனசை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக வைக்கனும்... அதுக்கு அவங்க விருப்பம் நிறைவேறனும்.... அதுக்கான முயற்சிகளை நாம எல்லாரும் எடுக்கலாம்... அப்புறம் நாங்க மருத்துவர்களா எங்க பணியையும் செய்யறோம்... நிச்சயமாய் அந்த பரம்பொருள் நம்மகூட இருப்பார்!' என்றாள் அவர் கூறிய அம்மூ.

அவ கேட்டது.. என்னனு உனக்கு தான் தெரியுமேமா! அத எப்படினு ...??

இதுக்கு பிள்ளையார் சுழி போட்டது நீங்க தானே!! சோ நீங்க தான் தாத்தா மறுபடியும் ஆரம்பிக்கனும்... எப்படினு தானே கேட்கறீங்க... முதல்ல லட்சுமி அம்மாகிட்ட பேசுங்க... பாட்டி இங்க படுத்துகிடக்கும் போது அவங்க அங்க இருந்து என்ன செய்ய போறாங்க.. லட்சுமிமா வும் தம்பியும் இங்க வந்தாங்கனா...அவங்க பேச வேண்டியவங்ககிட்ட பேசுவாங்க...அந்த பக்கம் நீங்க காயை நகர்த்துங்க இந்த பக்கம் மாமா நகர்த்துவாரு..' 

என்ன மாமாஸ் ஓகேவா??' என்று கேட்க அருகில் நின்றிருந்த இரு பெரியவர்களும் தலையை ஆட்டினர். 

அதான் நீ என்ன சொன்னாலும் தலையை ஆட்டதான் என் அண்ணனுங்க இருகாங்களே! அப்புறம் என்ன??' என்றார் அருகிலிருந்த பெண்மணி.

என்ன சித்தி? இப்படி சொல்றீங்க? நான் என்ன தப்பா சொல்லிட்டேன்??

ஒன்னுமில்லடா... அவளை விடு...நீ போ...' என்றார் அருகிலிருந்த இன்னோரு மனிதர்.

சரி சித்தப்பா...நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வந்திடுறேன்..பக்கத்து ரூம்ல இன்னும் நாலு ஹார்ட் பேஷண்ட் இருக்காங்க... அவங்களை பார்த்துட்டு வந்திடுறேன்.. அது வரைக்கும் டாக்டர் ஹரி பாட்டி பக்கத்துல இருப்பார்...' என்றபடி நகர்ந்தாள் தமிழ் நாட்டின் பிரபலமான இளம் பெண் கார்டியாலஜிஸ்ட் தேவமனோகரி பரமேஸ்வரன்!

டேய்... தேவி... எதாவது சாப்பிட்டு ரவுண்ட்ஸ் போடா... காலையில இருந்து எதுவுமே சாப்பிடலடா நீ...'

பத்து நிமிஷம் தான் அனி அத்த...வந்திடுறேன்..'

என்ன அண்ணி... அம்மா இப்படி இருக்கும் போது கூட ரவுண்ட்ஸ் போறேனு போறா.. அவளை கொஞ்சிக்கிட்டு நிக்கறீங்க...'

சரஸ்... சும்மா இருக்க மாட்டியா நீ??

ஆமாம்.. என்னை மட்டும் சொல்ல வந்திடுங்க...

பத்து நிமிடம் அங்கே அமைதி குடிக்கொண்டது. ரவுண்ட்ஸ்  முடித்து அவசரமாய் திரும்பிவிட்டாள் தேவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.