(Reading time: 16 - 32 minutes)

35. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Ithanai naalai engirunthai

தியழகன்,தேன்நிலா,கதிர் மூவரையும் ஒருமுறை முறைத்துப் பார்த்தான் ஷக்தி. அதே நேரம் தனது முகத்தை அண்ணார்ந்து பார்த்திடும் சங்கமித்ராவின்மேல் அவன் பார்வை பதிந்தது.. அவர்களை வீட்டிற்கு வரும்படி கட்டளையிட்டுவிட்டு, மித்ராவின் கரத்தை பிடித்து பைக்கை நோக்கி நடந்தான் அவன்..

அவனைப்போலவே தனது கரத்தை பிடித்த மதியழகனை செல்லமாய் நிலா முறைக்க,ஷக்தி தனது பைக்கைஉதைத்து அங்கிருந்து கிளம்பி இருந்தான் ..

“ அண்ணா, நிலாஅண்ணி,  உங்க காதல் பார்வையை அப்பறமா வெச்சுக்கோங்க..முதலில் கெளம்பலாமா ? எனக்கு ஏற்கனவே ஷக்தி என்ன சொல்லப் போறானோன்னு பயம்மா இருக்கு “ என்றான் கதிரேசன் பீதியுடன்..வயதில்பெரியவனாய் இருந்தாலும் மதியழகனுக்கே லேசாய் பயமாய்த் தான் இருந்தது…

ஷக்தி வார்த்தையால் வெளிப்படுத்தாமல்  போனாலும், அவன் மித்ராவின் பாதுகாப்பின் மீது எவ்வளவு அக்கறை கொண்டவன் என்பது அனைவரும் அறிந்ததே..அதனால்தான் அவன் இல்லாத நேரமாய் பார்த்து இப்படி இன்ப அதிர்ச்சி தரலாம்என்று நினைத்தனர் மூவரும்..அவர்கள் அங்கு அவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை..

ஷக்தி பைக்கை ஸ்டார்ட் செய்யும் வரை அவர்களுக்காத்தான் பரிந்து பேசி கொண்டிருந்தாள்மித்ரா..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“விடு மாமா..ஏதோ விளையாட்டுக்குத்தானே பண்ணினாங்க ?” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னரே அவளை முறைக்க ஆரம்பித்திருந்தான் அவன்… “வாய மூடிட்டு வாடி” என்றவன் அதட்டவும் சிறுபிள்ளை போல, ஒற்றைவிரலை உதட்டின்மேல்,வைத்து கொண்டாள் அவள்.. அதை பார்த்து அவனுக்கே சிரிப்பு வந்தாலும் அதை காட்டிகொள்ளாமல் சாலையை வெறித்தான்… அவளை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் எவ்வளவு தூரம் பயணித்து இருக்கிறோம் என்பதே அவர்கள்திரும்பி அதே சாலையில் செல்லும்போதுதான்  தெரிந்தது.. சற்றுமுன்  லேசாய் மட்டுப்பட்ட கோவம் மீண்டும் தலை தூக்கியது.. “இன்னைக்கு இருக்கு அவங்களுக்கு” என்று மனைவியிடம் சொல்லவந்தவன் , பைக் கண்ணாடியின் வழி அவள் முகத்தை பார்த்து தன்னையும் மறந்து புன்னகைத்தான்.. ஷக்தியின் தோளில் கை போட்டு கொண்டு, கண்களில் சந்தோஷம் பொங்கிட,இதழ்கள் ஏதோ பாடலை முணுமுணுக்க,அவள்  அந்த உலகத்திலேயே இல்லை…

“ அடிப்பாவி கேடி…என்பக்கத்துல  இருந்தா சுத்தி என்ன நடக்குதுன்னே மறந்துருவியா நீ ?” என்று மனதிற்குள் கேட்டவன், வேண்டுமென்றெ பைக்கை நிறுத்த

“ என்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தால் “ என்று மித்ரா பாடுவது தெளிவாய் கேட்டது.. சற்றுமுன் முகத்தில் எதிர்காற்று வீசியதால் அவளின் குரலும் காற்றோடு கலந்திருந்தது..இப்போதவன் பைக்கை நிறுத்தவும் அவளின் குரல் மட்டும் வேகமாய் கேட்ட அதிர்ச்சியில் பாட்டை நிறுத்தி அவனை பார்த்து விழித்தாள்..

“ என்னாச்சு மாமா ? வீடு இன்னும் வரலையே”

“ ஓஹோ நாம வீட்டுக்குத்தான் போறோம்ன்னு நியாபகம் இருக்கா உனக்கு ?”

“என்ன திடீர்னு இப்படி கேட்குற?”

“ இல்ல, எங்கெயோ தூரத்துல இருந்து பார்த்த முதல் நாளேன்னு பாட்டு கேட்டுச்சு” என்றவன் கூறவும் அவள் முகத்தில் அசடு வழிந்தது..

“ ஹீ … அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல …நீ வண்டிய எடு !”

“ ம்ம்ம்ம் அந்த பயம் இருக்கணும்.. இந்த பகல் கனவு காணுற வேலை எல்லாம் வேணாம்” என்று அவன் போலியாய் மிரட்ட, அவளும் போலியாய் பயந்தாள்… அடுத்த அரைமணி நேரத்தில் அனைவருமே ஷக்தியின் வீட்டில் கூடி இருந்தனர்..

ஷக்திக்கு இவ்வளவு நீளமாய் பேசத் தெரியும் என்பதே அன்றுத்தான் மதியும் நிலாவும் தெரிந்து கொண்டனர் .. அறிவுரை கேட்டே சோர்வடைந்தவர்களுக்கு ஜூஸ் கொடுத்துவிட்டு கள்ளத்தனமாய் சிரித்தாள் சங்கமித்ரா.. அவள் சிரிப்பை கண்டு ரகசியமாய் அவளை முறைத்தாள் தேன்நிலா.. தோழியர் இருவரும் பார்வையாலேயே பேசிக்கொண்டனர்..

“ என்னடீ இளிப்பு”

“ ஹீ ஹீ..ஒரே ஆனந்தமாய் இருக்கு தேனு”

“ ஹெல்ப் பண்ணாம சிரிக்கிறியா ? எல்லாம் என் நேரம்”

“ உன் நேரத்துக்கு என்ன ? அதான் ஓஹோன்னு போகுதே” என்று ஜாடை காட்டியவளுக்கும் அவர்களை பார்க்க பாவமாய் இருந்தது..

“ சரி சரி லன்ச் டைம் ஆச்சு … நான் சமைச்சாலே சுமாராத்தான் இருக்கும் .. இதுல ஆறிடுச்சுன்னா நல்லா இருக்காது …எல்லாரும் வாங்க சாப்பிடலாம்” என்று குரல் கொடுத்தாள் மித்ரா..

“ புருஷன் சட்டம் பேசி கொன்னான், பொண்டாட்டி சாப்பாடு போட்டு கொல்றாளே “ என்று சொல்ல வாய்வரை வந்த வார்த்தையை அப்படியே விழுங்கினாள் தேன்நிலா.. ஏதோ மழை பெய்ந்து ஓய்ந்தது போல இருந்தது..ஷக்தியும் நினைத்ததை எல்லாம் கொட்டி தீர்த்துவிட்ட திருப்தியில் இருந்தான் .. அதன்பின் மித்ராவின் உபயத்தில் மீண்டும் சூழ்நிலை இயல்பாகவே மாறியது ..!

சாப்பிட்டு முடித்ததுமே கதிர் வேலை விஷயமாய் கிளம்பிவிட, நிலா மதியிடம் பேச ஆரம்பித்தான் ஷக்தி..

“ அண்ணா”

“சொல்லு ஷக்தி “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.