(Reading time: 16 - 32 minutes)

நீங்க ரெண்டு பேரும் எப்போ கல்யாணம் பண்ணிக்க போறிங்க ?”

“ இப்போ என்ன அவசரம் ஷக்தி ?” –நிலா

“ ரெண்டு பேருக்கும் வாயசாகுதுன்னு தெரியலையா ? இது என்ன கேள்வி ?”

“ அடுத்த வருஷம் பார்க்கலாமே ஷக்தி “ என்றான் மதி..

“ ஏன் ?”

“..”

“ ரெண்டு பேரும் லவ் பண்ணிங்க.. ரெண்டு வீட்டுக்கும் தெரியும்.. ஒரு ப்ரச்சனையும் இல்ல ..உங்களுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கிற லிஸ்ட்ல யாரும் இல்ல..அப்பறம் என்ன ?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்...

“ எனக்கு வேலைல கொஞ்சம் பொறுப்பு இருக்கு ஷக்தி… இப்போவே என்னால நிலாகூட அதிக நேரம் ஸ்பெண்ட் பண்ண முடியல .. லவ் பண்ணுற முன்னாடி கூட அடிக்கடி இவளை பார்த்தேன்.. இப்போ ரெண்டு பேருக்குமே ரொம்ப வேலையும் பொறுப்பும் இருக்கு..எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு செய்யுற அளவுக்கு இப்போ எந்த அவசியமும் வரலையே ..” நிலாவின் விருப்பம் என்று அவளை கை காட்டாமல் விட்டு கொடுக்காமல் பேசினான் மதியழகன்.. அதை அவளும் உணராமல் இல்லை ..

ஆனால்,அவள் அதை எதிர்த்து பேசவோ, அல்லது சரி சொல்லும் நிலையிலோ இல்லை.. ஷக்தியின் இடத்தில்தனது  தந்தையோ அன்னையோ இருந்திருந்தால் கூட உடனே மறுத்து பேசி இருப்பாள்.. ஆனால் ஷக்தியிடம் அவளால் அப்படி பேச முடியவில்லை.. தோழியின் கணவன் என்ற உறவையும் தாண்டி ஷக்தி அவர்களின் நலம்விரும்பி.. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அவன் பேசும்போது அதை எப்படி தட்டி கழிப்பது என்ற அவளுக்கே புரியவில்லை..மேலும் ஷக்தியின் பேச்சுத்திறன்..தனது கூற்றில் தவறில்லை என்ற பட்சத்தில் நேர்பார்வையோடு, உரிமையாய் அவன் கேட்ட விதத்தில்மௌனமாய் த்தான் இருந்தாள் அவள்.. சங்கமித்ராவுமே எதுவும் பேசாமல் கணவனை பார்த்தாள்.. பொதுவாக எதிர்காலத்தை பற்றி ஏதேனும் பேசும்போது, “சீக்கிரமா அண்ணாவை தேனு தலையில் கட்டனும் மாமா” என்பாள் அவள்..அப்போதெல்லாம் அமைதியாய் தலையசைப்போடு அந்த பேச்சை முடித்துவிடுவான் ஷக்தி.. ஆனால், இன்று அந்த பொறுப்பை தானே கையில் எடுத்து கொள்வான் என அவளே எதிர்பார்க்கவில்லை.. (இதுதான் ஷக்தி..! எப்போ என்ன செய்வார்ன்னே அவருக்கே தெரியாது ..ஹீ ஹீ )

“ அண்ணா, பொறுப்பும் கடமையும் எப்பவும் இருக்க வேண்டியது தானே? கல்யாணம் பண்ணினாலும் தான் பொறுப்புகள் வரும்.. எப்பவும் பிசியா ஓடிக்கிட்டே இருக்குறது தானே லைஃப் ?”

“அதில்லை ஷக்தி … நான் கொஞ்சம் என் வேலையில் ரிசர்ச் பண்ணுறேன்..அதுனாலத்தான் நான் மது கிட்ட டைம் கேட்டேன்” ஒருவழியாய் வாயைத் திறந்தாள் தேன்நிலா..

“ கல்யாணத்துக்கு பிறகு டாக்டரா இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டிங்களா ?” சுற்றி வளைக்காமல் கேட்டான் அவன்..

“அது…”

“இல்லைல? எங்கே ஓடிரும் உங்க ஹாஸ்பிட்டல்?” .. முதல்முறையாய் ஷக்தியை கேள்வியாய் பார்த்தான் மதியழகன் ..

“ என்ன ஷக்தி திடீர்னு இதுல இவ்வளவு தீவிரம் ?”

“ தீவிரம் இல்ல அவசியம்!”

“அதான் என்ன அவசியம் ?”

“ அண்ணா,நான் காரணம் இல்லாமல் எதுலயும் உரிமை எடுத்து பேச மாட்டேன்..தெரியும் தானே?”

“அதுனாலத்தான் என்னன்னு கேட்குறேன்..”

“ என்னன்னு என்னால சொல்லமுடியாது… “

“..”

“சரி எனக்கு மனசுல பட்டதை கேட்டுட்டேன்..அதுக்கு அப்பறம் உங்க இஸ்டம் “ என்றவன் அதன்பின், அந்த பேச்சையே மாற்றி விட்டான் ..

“ஹப்பாடா தப்பித்தோம்” என்ற நிம்மதியே இல்லாமல் இருந்தனர் தேன்நிலாவும் மதியழகனும்.. சங்கமித்ராவிற்கு ஒன்று மட்டும் நன்றாய் விளங்கியது..!ஷக்தியின் இந்த தூண்டுதலுக்கு பின் ஏதோ ஒரு முக்கிய காரணம் இருந்தது..!

அந்த காரணம் என்னவென்று அவளும் கேட்கவில்லை..அவள் கேட்டு அவனால் சொல்ல முடியாமல் போய்விட்டால் தேவை இல்லாத மனமுரண்பாடுகள் வரலாம்.. மேலும், சரியான வேளையில் அவனே சொல்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.. அதனால் அவனின் முடிவிற்கு அமைதியாய் தோள் கொடுத்தாள்..

இப்படியாகவே ஆறு மாதங்கள் உருண்டோடிவிட்டன .. இந்த ஆறு மாதத்தில் கதிருடன் புதிய வீட்டில் குடி பெயர்ந்தனர் ஷக்தியும் மித்ராவும்.. முகில்மதியும் தனது மேற்கல்வியை சென்னையில் தொடர்வதற்கு திட்டம் தீட்டி இருந்தாள்..

இந்த ஆறு மாதத்தில் அறுபது முறையாவது நிலா,மதியழகனின் திருமணத்தை பற்றி பேசி இருந்தான் ஷக்தி.. பல ஆலோசனைக்கு பிறகு, முதலில் நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று இருவருமாய் முடிவெடுக்க,ஷக்தியும் மலையிறங்கி வந்துவிட்டான் ..

“ காவியா”

“ ஹாய் மித்ரா”

“என்னமா, வீட்டு பக்கம் வரவே இல்லை”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.