(Reading time: 16 - 32 minutes)

வனிடம் ஒரு வார்த்தை பேசாமலே அவளுக்குள் பல வார்த்தகளை கோர்த்து வைத்தாள்..

“ ஹேய் என்னடீ ஒன்னுமே சொல்லல?”

“ ப்ச்ச்ச் சும்மா வாய மூடிட்டு வா மாமா… நானே குழப்பத்துல இருக்கேன்”

“உனக்கு என்ன குழப்பம்?இல்லாத மூலையை எதுக்கு கசக்குற?”

“ ஆமா,நமக்குள்ள யாரும் இல்லாதப்போவே எங்கிட்ட பேசுறதுக்கு உங்கிட்ட பெர்மிஷன் கேட்கனும்.. இன்னும் சிலமாசத்துல உன் பொண்ணு வந்துட்டா , நான் ஈமெயில்தான் அனுப்பனுமோ? “ என்று மித்ரா கூறி முடிக்க, ஸ்தம்பித்து அப்படியே நின்றான் ஷக்தி.. நடையை நிறுத்திவிட்ட கணவனின் முன் அவள் எதையோ சாதித்தது போல முகத்தில் மலர்ச்சியுடன் காதலுடன் இருந்தாள்.. ஷக்திக்கு இது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி என்பது அவளுக்கு மிக நன்றாகத் தெரியும்.. அவன் மனதில் கிளரும் ஒவ்வோர் உணர்வுகளையும் பார்வையாலேயே உள்வாங்கினாள்.. பேச்சற்று போனவன், விழிகளில் நீர் கோர்க அப்படியே நிற்க அவனை இறுக அணைத்து கொண்டாள் சங்கமித்ரா..

“மிது”

“ம்ம்ம்ம்”

“ ஐ லவ்யூ டீ “ கமறிய குரலில்பேசிக்கொண்டே அவளின் முகமெங்கும் முத்தமிட்டான் அவன்.. அவனின் பானியிலேயே “ம்ம்ம்ம்,தெரியும்” என்றவள் அவன் தந்த முத்தங்களை இரட்டிப்பாய் அவனுக்கே தந்தாள்.. அவன் உணர்ச்சி பெருக்கில்  இருப்பதை உணர்ந்து கேலியாய் “ இருந்தாலும் அநியாயம் மாமா நீ, உனக்கு பாப்பா வருதுன்னதும் தானகவே எனக்கு ஐ லவ் யூ சொல்லுற” என்று அவள் குறைபடுவதுபோல் கூற, அவள் நெற்றியில் முட்டியவன்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்...

“லூசு , சொன்னாத்தான் உனக்கு தெரியுமா ?” என்றான் .. அவனின் பதிலில் முகம் மலர்ந்தவள் தாய்மையுடன் அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.. (சரி அவங்க கொஞ்சிகட்டும்.. ஆல்ரெடி மதி அண்ணா நிலா நினைவில் உருகி போயிருக்கார்..அவரை கொஞ்சம் கவனிப்போம்)

அம்மு பாட்டி,மனோ ,பாக்கியம்,மலர் வாசு,லக்ஷ்மி, நாராயணன், தேவசிவம் சித்ரா என பெரியவர்கள் குழுமியிருக்க, ஷக்தி-மித்ரா, கதிர்-காவியா, ஆதி- வைஷ்னவி, அன்பெழிலன்-முகில்மதி அனைவரும் ஆர்பரிக்க, ஷாந்தனு உரிமையாய் நிலாவின் மடியில் அமர்ந்திருந்தான்..

ஒரு காலத்தில் மதியின் செல்லமாய் இருந்தவன்,இப்போது நிலாவின் மடியில்..

“ அழகா”

“சொல்லுங்க பெரிய மனுஷா” ஷாந்தனுவை பார்த்து கேட்டான் மதி..

“ நிலாவை நீ கல்யாணம் பண்ணிக்க போறியா ?”

“ ம்ம்ம்ம் ஆமா கண்ணா”

“ஆனா,நிலாஎன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னியே நீ” என்றோ அவள் சொன்னதை நினைவுபடுத்தினான் ஷாந்தனு..

“ ஆமால ? அப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ?”மதியழகனை பார்த்துகொண்டே அவனைக் கேட்டாள்.. உடனே பதறினான் மதியழகன்…

“ஷாந்தனு,உனக்கு எவ்வளோ சாக்கி வேணும்னாலும் நான் வாங்கி தரேன்..நிலா மட்டும் எனக்கே எனக்கு” என்று அவன் பேரம்பேச,

“அதே சாக்கி நான் தரேன்..நிலா எனக்கே எனக்கு “ என்றான் ஷாந்தனு.. இருவரையும் ரசித்து கொண்டிருந்தாள் தேன்நிலா.. அடர்பச்சை மற்றும் சிகப்பு வண்ணபுடவை அணிந்து அப்சரசாய் அவள் அவனை மயக்க, அவளுக்கு இணையாய் அழகே உருவாய் நின்றான் மதியழகன்..

“சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே

உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணெ” அந்த சிட்டிவெஷன் பாடலை போட்டது வேற யாருமில்ல, நம்ம புவனாத்தான்.. எத்தனையோ முயன்றும் முடியாமல் நாணி முகம் சிவந்தாள் தேன்நிலா.

நல்லநேரம் பார்த்து அவள் விரலில் மோதிரத்தை அணிவித்தான் மதியழகன்.. அதே போல் அவன் விரலில்மோதிரம் அணிவிக்க வந்தவள்லேசாய் அவனை கிள்ளினாள்…

“ஸ்ஸ்ஸ் ஆ” என்று அவன் அலறவும்

“ நேத்து உன் தங்கச்சி கூப்பிட்டதும் நீ பாட்டுக்கு போயிட்டல ?” என்று நிலா சிரிக்க, முகத்தை சோகமாய் வைத்துகொண்டு அருகில் வந்த மதியழகன் எதிர்பாரா நேரத்தில் அனைவரின் முன்னிலையும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான் .. தேன்நிலா அவனின் திடீர் தாக்குதலில் அப்படியே நிற்க

“ என்ன பேபி நீ, சும்மா ஐ லவ் யூ சொன்னதுக்கே உம்மாகொடுத்து கலக்குன.. ஆனா இப்போ பேன்னு முழிக்கிற? ரொம்ப லேட்டு பேபி நீ” என்று மதியழகன் சலிப்பாய் கண்ணடித்தான்..

“ அட என்னடா இது நிலாவுக்கு வந்த சோதனை” என்று தனக்குள்ளேயே சொல்லி கொண்டாள் நிலா.. சுற்றி அனைவரும் அவளின் பதிலுக்காய் காத்திருக்க, நாமளும் காத்திருப்போம் ;)  

தொடரும்

Episode # 34

Episode # 36

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.