(Reading time: 16 - 32 minutes)

வள் புன்னகையை போலவே அழகாய் புலர்ந்தது அன்றைய தினம்.. ஷக்தி, கதிர், அன்பெழிலன் ஆண்கள் மூவரும் காலையிலேயே வேஷ்டி சட்டையுடன் களமிறங்கி விட்டனர்.. மலர் இல்லமே கலகலப்பாய் இருந்தது.. காவியா, முகில்மதி இருவரும் நிலாவை அலங்கறித்து கொண்டிருக்க, மித்ரா பார்வையாலேயே ஷக்தியை தேடுவதை பார்த்து கேலி செய்து கொண்டிருந்தாள் புவனா..

“ ஹேய் முட்டகண்ணி என்னடீ தேடுற?”

“ப்ச்ச்ச் சும்ம இரு புவி”

“ உன் மாம்ஸ் மாடியில இல்ல “

“இதை முன்னவே சொல்றதுக்கு என்ன ?”

“ அதுனால்த்தான் என்ன தேடுறன்னு கேட்டேன்..நீதானே பதில்சொல்லல? சரி உன் முகம் ஏன் டென்ஷனாய் இருக்கு ..என்ன விஷயம் ?”

“ ஒன்னும் இல்ல..நான் மாமாகிட்ட பேசிட்டு வரேன்..”என்றவள் வேகமாய் ஷக்தியை தேடி ஓடினாள் .. மூச்சிறைக்க தன்முன் வந்து நின்றவளை கேள்வியுடன் பார்த்தான் ஷக்தி.. அவனுக்கு பிடித்த பச்சை நிறபட்டுப்புடவை அணிந்து அழகே உருவாய் இருந்தவளின் கண்களில் எல்லையில்லா பதட்டம்…

“ என்ன டீ “

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“ஷக்தீ”

“ ம்ம்ம் சொல்லு”

“மாமா”

“ சொல்லு டீ..என்ன விஷயம் …”

அந்த வீட்டை ஒட்டி இருந்த கடற்கரையை பார்த்தாள் மித்ரா.. அவன் முகத்தையும் கடலையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள்..

“என்னன்னு சொல்லு மிது”

“ ஒ …ஒன்னுமில்ல” ..தைரியம் வரவில்லை அவளுக்கு ..தைரியம் என்பதை விட, அவன் பரபரப்பாய் ஓடி கொண்டிருக்கும்போது இதை சொல்வதா ? என புரியவில்லை அவளுக்கு ..திரும்பி அவள் நடக்கவும்

“ஹேய் அத்தைபொண்ணு நில்லு டீ” என்றான் அவன்.. சற்று முன் அவன் குரலில் இருந்த அதட்டலும் வேகமும் இப்போது காணாமல் போயிருந்தது.. அவளின் முகத்தை வைத்தே அவளின் மனநிலையை புரிந்து வைத்திருந்தான் அவன்..

“மாமா”

“ம்ம்ம்”

“ஒரு அஞ்சு நிமிஷம், அப்படியே நடக்கலாமா ?”

“ என்னாச்சு மிது ? நிறைய வேலை இருக்கு..மணி எழாச்சு”

“அஞ்சே நிமிஷம் ப்ளீஸ்”

“ப்ளீஸ் சொல்லதன்னு எத்தனை தடவை சொல்றது ?”

“..”

“சரி வா” என்றவன் அழைக்கவும் மலர்ந்த முகத்துடன் அவன் கைக்கோர்த்துகொண்டு கடற்கரையோரம் நடந்தாள் மித்ரா..

அவள்..!

நம் காதல் தீட்டிய ஓவியம் அவள்!

நம் உணர்வுகள் மீட்டிய இசை அவள்!

உனக்கும் எனக்குமான சிறு உலகில்

பிஞ்சு பாதங்களால் தாளமிடும் தாரிகையவள்!

என் வாசற்கோலங்களைவிட, உன்

மார்பில் நேர்த்தியாய் கோலமிட உரிமைகொண்டவள்!

இனி அவ்வப்போது உரிமையாய்

என்னையும் பொறாமை கொள்ள வைப்பவள்!

உன் முதல்முத்தத்தை களவாடவிருக்கும் தேவதையவள்!

உன் இறுகிய அணைப்பை மென்மையாக்கிடும்

வித்தை கற்றவள்..!

உன் கரகர குரலில் சங்கீதம் சேர்க்கும்

தாலாட்டு அவள்!

உன் செயல்களை எல்லாம் பின்பற்றி காட்டிடும்

கண்ணாடி பிம்பம் அவள்..!

உன் அடர்ந்த கேசத்தில் புதையல் தேடி

சஞ்சலம் தீர்ப்பவள்

உன் வலுவான தோள்களில்

தனக்கென சிம்மாசனம் அமைப்பவள்..!

உன் கவிதைக்கு எல்லாம் தன்

பெயரை முகவரியாய் கொடுப்பவள்..!

உன் அதட்டலை எல்லாம்

ஐந்தே நொடி புன்னகையில் பொடிப்பொடியாக்குபவள்..!

உன் கண்ணீர் மறந்தவிழிகளுக்குள்

கருவிழியாய் திகழ்பவள்..!

உன் பாதத்தில் ஏறி,

பல்லாக்கு போல பயணிப்பவள்..!

உன்னுடன் சேர்ந்துகொண்டு

என் சமையலை சீண்டுபவள்..!

எனக்கான அன்பினில் அவளும்

அவளுக்கான அன்பினில் நானும்

பங்குகேட்டு உன்னை திக்குமுக்காட வைக்கும் தருணம்

வெகுவிரைவில்..!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.