(Reading time: 16 - 32 minutes)

கொஞ்சம் வேலை அதிகமாய் இருக்கு மித்ரா”

“ஹும்கும்.. 30 நாளும் ஆஃபிசையே கட்டிட்டு அழு நீ.. கதிர்கிட்ட உன்னபத்தி கேட்டா, எதுவுமே சொல்றது இல்லை” என்று சங்கமித்ரா குறைபட்டு கொள்ள,

“சொல்றதுக்கு ஒன்னும் இல்லை போல” என்றாள் காவியதர்ஷினி .. அவர்கள் செல்ஃபோனில் உரையாடி கொண்டிருந்தாலும், காவியாவின் குரலில் இருந்த விரக்தியை மித்ராவால் உணர முடிந்தது..அவளுக்கு சில நாட்களாகவே இதைபற்றி சந்தேகம் இருந்தது..இதை பலமுறை ஷக்தியின் காதுக்கு கொண்டு வந்தாள் அவள்.. அவனோ, அவள் தலையில் கொட்டி “ வரவர உனக்கு லைஃப்ல  ப்ரச்சனையே இல்லையா,அதான் இப்படி ஓவரா அடுத்தவங்கள பத்தி யோசிக்கிற”என்றான் ஷக்தி..

ஆனால், அவன் பேச்சுக்கெல்லாம் அடங்கி விட்டால் நம்ம லாயரம்மாவின் கெத்து என்னவாகும் ? அதனால்தான் இன்று அவளை சந்தித்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாள் மித்ரா..

“ உன்னை நேரில்பார்க்கனும் காவியா ..நிலா மதியண்ணாவுக்கு நிச்சயம் தெரியும்ல ? “

“ ஆமா, கதிர் சொன்னாங்க”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“என்னம்மா, ஏதோ செய்தி கேட்குற மாதிரி சொல்லுற..நீயும் நம்ம வீட்டு பொண்ணுத்தான் .. நமக்கு நிறைய வேலை இருக்கு..அதப்பத்தி பேசனும்.. வீட்டுக்கு வா”.. மறுக்கமுடியாமல் மித்ராவை சந்தித்தாள் காவியா… பேச்சின் ஊடே அவளுக்கும் கதிருக்கும் இடையில் நடந்ததுஎல்லாமே மித்ராவிற்கு தெரிய வந்தது.. ஷக்தியிடமும் இதைபற்றி கூறி விட்டிருந்தாள் அவள்.. அவனோ இதற்கு நாம் என்ன செய்ய முடியும் ? கதிர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றுவிட்டான்..

“ உங்க தம்பி அப்படி நல்ல முடிவு எடுத்துட்டாலும் … அண்ணனுக்கும் தம்பிக்கும் எதுல ஒத்து போகுதோ இல்லையோ ஆனா,இதுல நல்லா ஒத்து போகுது..எவ்ளோ லவ் இருந்தாலும் வெளில சொல்ல மாட்டிங்களே”

“மிது”

“என்ன?”

“நம்ம கதை வேற”

“என்ன வேற?”

“நான் சொல்லாமலே இருந்தாலும்  என் மனசுல நீதான் இருந்த.. அது உனக்கே ஓரளவு தெரியும்”

“ ம்ம்ம்”

“இதையே வெச்சு கதிர் மனசை எடைபோட முடியாது..இத காவியாத்தான் ஹேண்டல் பண்ணனும்”

“ஆனா,நாம அவளுக்கு உதவலாமே!”

“ காவியாவுக்கு உதவுறது, கதிரை வர்புறுத்துற மாதிரியாகிட கூடாது”

“ஷபா…மாமா, கதிருக்கு காவியாமேல விருப்பம் இருக்குன்னு நான் உங்களுக்கு ப்ரூவ் பண்ணினா, நீ சப்போர்ட் பண்ணுவ தானே?”

“ ம்ம்ம் பார்க்கலாம்..ப்ரூவ் பண்ணு” என்றான் ஷக்தி.. சங்கமித்ரா ஓரளவிற்கு திட்டம் தீட்டி வைத்திருந்தாள்.. கதிரின் மனதை ஷக்தியிடம் கோடிட்டு காட்டுவதற்கு , காவியாவும் கதிரும் சந்திக்கும் இடத்தில் ஷக்தி இருக்க வேண்டும்..ஆக, நிலா மதியழகனின் நிச்சயத்தில் இதை செயல்படுத்திவிடலாம் என்று முடிவுக்கு வந்தாள் மித்ரா. (இப்போ இந்த சீனை அப்படியே கட் பண்ணி,நாம நிலா மதியழகன் அன்னைக்கு மாடியில் பேசிட்டு இருந்த இடத்துக்கு போவோமா ?) 

“ என்ன ஹனிமூன் மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கு ?” என்றாள் புவனா.. அவர்களின் நிச்சயதிற்காக அவளும் வந்திருந்தாள்..

“ஒரு குரங்கு என்னை குரங்குன்னு சொல்லுதே எல்லாம் என் நேரம்டா மதியழகா “ என்று முணுமுணுத்தாள் நிலா..

“ ஹீ ஹீ .. கோபப்படாதே ஹனிமூன் , நாளைக்கு எங்கண்ணா ஸ்மார்ட் கிங் ஆ நிற்கும்போது நீ, தூங்குமூஞ்சியா இருந்தா நல்லாவா இருக்கும் ? நம்ம ஸ்லீபிங்பியூட்டி க்கு கொஞ்சம் தூங்குறதுக்கு டைம் கொடுக்கலாமேன்னு நல்லெண்ணம்தான்” என்றாள் புவனா..

“குட்டிச்சாத்தான், இந்த செண்டிமென் டைலாக் எல்லாம் உனக்கு செட் ஆவல..  நீ எப்பவும் போல ஜாலியாவே பேசு” என்று நிலாகண் சிமிட்டவும் அவளை கட்டிகொண்டு கண்ணத்தில் முத்தமழை பொழிந்தாள் புவனா..

“ஹேய், என்னடீ ?”

“ என்ன ஹனிமூன் , முத்தமெல்லாம் என் அண்ணாகொடுத்தா மட்டும் தான் உன் குழிவிழும் கன்னம் எடுத்துக்குமா? நானும் கொஞ்சம் முத்தம் கொடுத்து குழியை மூடிடலாம் நினைச்சேனே” என்று புவனா கண்சிமிட்ட

“ என் கன்னக்குழிலதானே  உன் அண்ணா விழிந்திருக்கான்…பார்த்தும்மா , உங்கண்ணாவுக்கு மூச்சு முட்ட போகுது” என்றாள் நிலா..

“தப்புதான்..தப்புதான் .. உங்கிட்ட வாய் பேசி ஜெயிக்கனும்னு நினைச்சது என் தப்புத்தான் போதுமா ?” என்று புவனா இரு கரங்களையும் கூப்பிட மலர்ந்து சிரித்தாள் தேன்நிலா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.