(Reading time: 8 - 15 minutes)

36. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Ithanai naalai engirunthai

தேன்நிலாவின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு , எதிர்ப்பார்போடு அவளை பார்த்தான் மதியழகன்.. கொஞ்சமும் அசராமல் அவனை பார்த்தவள், அவனின் செயலுக்கு எந்த ஒரு ப்ரதிபலிப்பையும் காட்டவில்லை…

அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினான் மதி..

“ ஹனீ”

“ ம்ம்ம்ம்ம் “

“நீ பிசிக்ஸ் (தேன்நிலாவின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு , எதிர்ப்பார்போடு அவளை பார்த்தான் மதியழகன்.. கொஞ்சமும் அசராமல் அவனை பார்த்தவள், அவனின் செயலுக்கு எந்த ஒரு ப்ரதிபலிப்பையும் காட்டவில்லை…

அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினான் மதி..

“ ஹனீ”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

“ ம்ம்ம்ம்ம் “

“நீ படிக்கும்போது, பிசிக்ஸ் (physics) பாடத்துல மார்க்  கம்மியா வாங்கி இருப்ப .. ரைட்டா?” என்றான் குறும்பாய்.. அவன் கேள்வியின் அர்த்தம் புரியாமல் விழித்தாள் நிலா .. (புரியலையா இல்ல புரியாத மாதிரி நடிக்கிறாங்களா? இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும்)

“ என்ன மது சொல்லுற?” அப்பாவியாய் கேட்டாள் நிலா ?

“ For every action, there is an equal and opposite reaction ன்னு கேள்வி பட்டது இல்லையா ?” என்று கண் அடித்தான் மதியழகன் .. தான் அவனுக்கு சளைத்தவள் இல்லை என்று நிரூபித்தாள் நிலா..

“ opposite reaction தானே.. அப்போ நீ கொடுத்ததை நான் என் ஸ்டைல்ல திருப்பி கொடுக்கவா மது ” என்று குழைந்தப்படி அவள் கைகளை நம்பியாரைப்போல தேய்த்துக் கொண்டு கேட்டாள்..

“ அய்யோ பொண்டாட்டி ஆளை விடும்மா” என அவன் பயந்தவன் போல சிரிக்க கன்னக்குழி தெரிய அழகாய் சிரித்தாள் நம்ம அழகனின் அழகி.. என்னத்தான் அவர்கள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழா விட்டாலும் அனைவரின் பார்வையும் நிலா மீதுதான் இருந்தது. சில நொடிகள் அதை உணராமல் இருந்தவள் அவர்களின் எதிர்ப்பார்ப்பை புரிந்து கொண்டு புவனாவையும் சங்கமித்ராவையும் முறைத்தாள்..

ஆனால் அதை கவனித்து சமாளிக்கும் நிலையில் தான் அவளின் சங்கு இல்லையே..பொதுவாகவே ஷக்தியை வைத்தக் கண் வாங்காமல் பார்ப்பவள், அவன் முகத்தில் தந்தையாகப் போகும் பெருமிதத்தை நுணுக்கமாய் பார்த்து ரசித்தாள்..

இதை பார்த்து நிலா இன்னும் கடுப்பாகிட புவனா வாயைத் திறந்தாள்..

“ ஹே ஜொள்ளு..”

“..”

“ அடியே மித்ரா தேவி..”

“ ஆ...ஆங்???”

“ உன் கனவுக்கு அளவே இல்லையா? ” என்று குறும்பாய் சிரித்தாள் புவனா..

“ என்ன டீ குட்டிச்சாத்தான்.. என் மாமாவ நான் லுக்கு விட்டா உனக்கு பொறுக்காதே...”

“ அடச்ச ..உன் மாமாவ நீ எப்போ வேணும்னாலும் லுக்கு விடு ..  இப்போ ஹனிமூன் நம்மள பார்த்து முறைக்கிறாள்.. அவ சொன்னது எல்லாம் ரெடியா ?”என்று புவனா கேட்கவும் திருதிருவென முழித்தாள் மித்ரா..

“என்னடீ ?”

“ அதுவந்து..மறந்துட்டேன் டீ..எல்லாமே என் லேப்டாப்ல இருக்கு.. லேப்டாப் வீட்டுல இருக்கு” என்று மிது முழிக்கவும்

“ எங்கிட்ட ஒரு காபி இருக்கு ..கவலை வேணாம்.. “ என்றபடி அங்கு வந்தான் அவன்.. அவன் யார் என இருவருமே பார்க்க, அவனைப் பார்த்து கை அசைத்து சிரித்தாள் தேன்நிலா..

“ ஹேய் டீ ஆர் (TR) வா வா .. “ என்று அவள் ஸ்னேகமாய் புன்னகைக்க, மதியழகனும் வரவேற்கும்படி புன்னகைத்தான்.. அவன் அடைமொழியை எங்கேயோ கேட்டதுபோல உணர்ந்தாள் புவனா .. யாரிவன் ? என்று அவள் யோசிப்பதற்குள், அனைவரையும் அருகில் இருந்த மதியழகனின் அறைக்கு அழைத்தாள் நிலா..

அறை முழுதும் இருட்டாய் இருக்க, ப்ரொஜெக்டர் வழியாய் ஒரு காணொலி வந்தது..

“ வில்லத்தனமாய் சிரித்தாய்,

கள்ளத்தனமாய் குடிபுகுந்தாய்,

என் மதி முழுதும் நிறைந்து,

காதலுக்கு அழகு சேர்த்தவனுக்காக” என்ற கவிதையுடன் அந்த காணொலி தொடங்கியது..

அவனை சந்தித்த முதல் தினத்தில் தொடங்கி, அவர்கள் மனதிற்குள் சேமித்து வைத்த இனிய நினைவுகளை அனிமேஷனாய் அவர்களின் கண்ணுக்கு விருந்தானது… ஒவ்வொரு காட்சியை பார்த்த மதி நிலாவை தன்னோடு அணைத்துகொண்டு நெகிழ்ந்து போயிருந்தான்.. மற்றவர்களும் அந்த காணொலியில் கவனம் செலுத்திட, புவனா மட்டும் அவ்வப்போது அந்த புதியவனின் முகத்தை பார்த்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.