(Reading time: 5 - 9 minutes)

04. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

ன் மார்பில் அசந்து உறங்கும் யாழினியின் நெற்றியில் மெல்ல முத்தமிட்டான் தமிழ்..”எனக்காக புகழ்கிட்ட பேசுடா என்றவன் கேட்டால், அவனுக்காக அவள் இறங்கி வருவாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்..ஆனால், அந்த உரிமையை வைத்து கொண்டு அவளை வற்புறுத்த கூடாது என்பதில் கவனமாக இருந்தான் அவன்.

அதனால் வேறு ஏதாவது வழியைத் தான் கையாள வேண்டும் என்று யோசித்துக் கொண்டே பார்வையை சுழல விட்டான்.. அவன் கண்களில் அந்த பூ ஜாடி பட்டது..

“ இந்த பூ ஜாடியை அந்த கதவு வாசல் கிட்ட உடைச்சிடலாமா? சத்தம் கேட்டு புகழ் உள்ளே வருவான்.. அப்போ ரெண்டு பேரும் பேசிப்பாங்க.. எப்புடி ஐடியா? ”

“ஹும்கும் செம்ம மொக்க. . ஒரு டாக்டர் மாதிரி நடந்துக்கோ டா... மனசுல பெரிய டோன்னு நெனப்பு” என யாழினியின் குரல் கேட்டது..

“பிசாசு, தூங்கலயா டீ நீ?”

“ பிசாசுங்களே தூங்குற நேரத்துல, நீ மைன்ட் வாய்ஸ்ல ப்ளான் போடுறதா நினைச்சுக்கிட்டு இவ்ளோ சத்தமாக பேசினா நான் என்னடா பண்ணுவேன் மை டியர் கருவாயா ” என்று கொஞ்சினாள் யாழினி.. கொஞ்சலா? அட ஆமாங்க. அவள் எப்போதாவது தமிழை அப்படி அழைப்பது வழக்கம். இதுக்கு நம்ம ஹீரோ என்ன சொல்வார் தெரியுமா? அவரையே கேட்போம்...

" ஹேய் நீயும் நானும் ஒரே கலரு தான் டி .. சும்மா என்னை கருவாயன்னு சொன்னின்னா , அப்பறம் உன்னை கருப்பட்டின்னு கூப்பிடுவேன் "என்று குழைந்தான் அவன் .. கொஞ்சம் நஞ்சம் ஒட்டி இருந்த தூக்கமும் பறந்திட , அவனை பார்த்தாள் யாழினி ..

" இப்போ நீ என்னை மிரட்டுனியா . திட்டுனியா இல்ல கலாய்ச்சியா தமிழ் ?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

"என்ன டீ மாமாவ பார்த்து இப்படி கேட்குற ?"

" போ பேபி உனக்கு என்னை மிரட்ட கூட தெரியல "என்றவள் அவன் தாடையில் முத்தமிட்டு கொஞ்சினாள் .. அவள் முத்தத்தில் கிறங்கியவனுக்கு இன்னும் எத்தனை காலம் தான் நல்லவனாய் தள்ளி இருப்பதோ என்று ஆயாசமாய் இருந்தது ..

அதே ஏக்கத்தில் அவளையே கேட்டான் ..

" யாழினி ..."

"ம்ம் ?""

"யா ... ழி ...னி .."

" ஷ்ஷ்ஷ்ஷ் சொல்லு தமிழ் ... "

"நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ?"

"...."

" அம்மு , நான் எனக்காக இதை கேட்கல , உனக்காகவும் கேட்கல .. நமக்காக கேட்குறேன் .. நமக்குன்னு ஒரு லைஃப் இருக்கு .. மாமா எவ்வளவு ஸ்டிரிக்ட்ன்னு உனக்கே தெரியும் .. ஆனா , என் விஷயத்துல இன்றைய வரைக்கும் அவர் எவ்வளவு விட்டு கொடுத்திருக்கார் ..? "

".."

" லிவிங் ரிலேஷன்ஷிப்ன்னு சொல்லிக்கிறதுக்கு நமக்கு ஒன்னும் இல்ல .. நாம சமுதாயத்துக்காக வாழல .. நமக்காகத்தான் வாழுறோம் .. ஆனா , ஒரு சராசரி அப்பாவா அவர் நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு ஆசைப்படுறதும் தப்பில்லையே .. "

"லிவிங் ரிலேஷன்ஷிப் ஆ ? யோவ் நமக்கு ரிஜிஸ்ட்டர் மேரேஜ் ஆகி 3 வருஷம் ஆச்சு "

" அடியே , அது நீ நான் புகழ் நம்ம மூணு பேருக்கு மட்டுமே தெரிஞ்சு நடந்த விஷயம் .. உன் அப்பாவும் , என் அம்மா அப்பாவும் அதை நம்பவே எவ்ளோ சிரமப்பட்டாங்க "

"தமிழ் "

"ம்ம்ம்ம் "

"த ..மி .. ழ் "

"எனக்கே ரிப்பீட்டா ..என்னன்னு சொல்லு டீ "

"வீட்டுக்கு போயிட்டு வாங்க தமிழ் .."

".."

"அத்தை மாமா ரொம்ப பாவம் .. ஒத்த புள்ளைய பெத்து வெச்சுட்டு அவங்க எவ்ளோ மன கஷ்டத்துல இருப்பாங்க "

" யாழினி , அது என் வீடு மட்டும் இல்ல .. உன் வீடும் தான் .. எப்போ உனக்கு அந்த வீட்டில் இடம் வருதோ .. அன்னைக்குத்தான் , நானும் அந்த வீட்டுக்குள்ள போவேன் .. அதுவரைக்கும் நான் அவங்களை கோவிலில் பார்த்துக்கிறேன் " என்றான் தமிழ் .. அவனை அதற்கு மேல அவளால் வற்புறுத்த முடியவில்லை .. வற்புறுத்தவும் மனமில்லை .. எப்படி தமிழ் புகழின் விஷயத்தில் தனது அன்பினை ஆயுதமாய் பயன்படுத்தி அவளை நெருக்கவில்லையோ , அதேபோல அவளும் அவனின் சுதந்திரத்தை நெருக்க வேணாம் என்று நினைத்தாள் ..

"என்ன யோசிக்கிற யாழினி ?"

" ஐ லவ் யூ கருவாயா " என்று அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள் யாழினி .. பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தும் அவள் அமைதியாய் காதலை சொல்கிறாள் என்றால் , அவள் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் அவனது அருகாமையை ரசிக்கிறாள் என்று அர்த்தம் .. அதை புரிந்து கொண்டவன் போல தமிழும் அந்த மோன நிலைக்கு மௌனமாய் அழகு சேர்த்தான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.