(Reading time: 8 - 15 minutes)

ந்த அனிமெஷன் ஐடியா நிலாவுடையது என்பது மட்டுமே அவளுக்கு தெரியும்.. அதை தயார் செய்ததும் நிலா தான் என்று நினைத்தாள் அவள்.. ஆனால், இந்த வீடியோவிற்கும் அவனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ? அதுவும் அவன் மதி நிலா இருவருக்கும் மிகவும் பரிட்சயமானவனாய்த் தெரிந்தான் ..

அவன் யாராய் இருக்கும் என்று அவளுக்கு ஒரு அனுமானம் இருந்தது.. இது அவனாய் இருந்தால் ? சொல்ல முடியாத ஆன்ந்த பேரலை அவளை அடித்து சென்றது.. அதே நேரம் புன்னகையுடன் நின்றிருக்கும் அவனின் முகத்தை பார்த்தாள்..

“ அவன் தான் இவனோ ? ஆனா அவன் சிரிப்பதற்கே கூலி கேப்பானே… இவனோ, சிரிக்கிறது மட்டும்தான் கடமைங்கிற மாதிரி இருக்கான் .. என்னமோ இடிக்கிது புவனா ..” என்று அவள் தனகுள்ளே பேசிய நிஜம்மாவே அவளை இடித்து கொண்டிருந்தாள் மித்ரா..

“அஹெம்”- மிது

“என்ன ?”

“ என்னை கலாய்ச்சுட்டு நீ மட்டும் சைட் அடிக்கிற ? நானாச்சும் லைசன்ஸ் வெச்சுருக்கேன்.. ஆனா நீ அது கூட இல்லமா “ என்றாள்..

அதற்குள் அந்த காணொலி முடிந்திருந்தது..  சொல்ல முடியாத இன்பத்தில் இருந்தான் மதி.. இத்தனை நாட்கள் வாழ்ந்த நாளெல்லாம்சில நிமிடங்களில் மறுபடியும் வாழ்ந்துவிட்டது போல இருந்தது அவனுக்கு.. அவன் மந்தகாச புன்னைகையுடன் நிலாவை பார்க்க,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

“ தம்பி நீங்க நிலாவுக்கு ராக்கெட் அனுப்பினா, நாங்க மார்ஸுக்கே ராக்கெட் அனுப்புவோம்” என்று சிரித்தாள் தேன்நிலா.. அன்பில் நீயா நானா என்ற போட்டி என்றுமே இல்லைத்தான் .. அன்பினை வெளிப்படுத்தும் விதத்திலும் சாலச் சிறந்தது , சுமார் என்ற வேற்றுமை இல்லைத்தான் .. எனினும் அவள் வென்றிருந்தாள்.. அன்பினால் அவனை வீழ்த்தி இருந்தாள்.. இருவரும் பார்வையால் பின்னி இணைந்திருக்க, மற்றவர்கள் அவர்களுக்கு தனிமை கொடுத்து அங்கிருந்து அகன்றனர்.. ஷக்தியை பார்த்துகொண்டே வெளிவந்த மித்ரா, அப்போதுதான் கதிர் காவியாவை கவனித்தாள்.. “ச்ச, இது மறந்துட்டேனே” என்றவள் ஷக்தியிடம் பேசினாள்..

“மாமா “

“ என்னடீ ?”

“அது எனக்கும் தெரியும் மாமா “

“ அவசரப்பட கூடாது”

“அதுக்காக சும்மாவும் இருக்க முடியாது”

“என்னத்தான் பண்ண போற நீ ?”

“ நைட் பாரு” என்றாள் மித்ரா ஒரு திட்டத்தோடு… என்னத்தான் மித்ராவை செல்லமாய் மிரட்டி வைத்தாலும், ஷக்தி அவளின் பேச்சை மதிக்காமல் இல்லை.. மற்ற வேலைகளை பார்ப்பதுபோல, கதிர் காவியா இருவரையும் கவனித்து கொண்டிருந்தான் அவன்..

சாடை மாடையாய் கதிர் அவளிடம் பேச முனைவதும், காவியா லாவகமாய் அவனை தவிர்ப்பதும், அவன் முகம் வாடும்போது அவளும் வருந்துவதும் அவனால் கண்டுகொள்ள முடிந்தது.. ஊடல் கூடலில் கை தேர்ந்த அல்லவா ஷக்தி? அவனால் அவர்களின் மனப்போராட்டத்தை அவனால் உணர முடிந்தது..

இருப்பினும் நம்ம லாயரம்மா இதை எப்படி நிரூபிக்க போகிறாள், என்று ஆர்வமானான் அவன்… இதற்கிடையில் மித்ரா தாயாக போகும் செய்தியை தெரிவிக்க, சந்தோஷத்தில் அவளை தட்டாமலையாய் சுற்றினான் அன்பெழிலன்…

“ஹையா நான் மாமா ஆகப்போறேனே” என்று அவன் குதூகலிக்க, நண்பனின் சந்தோஷத்தை கண் கலங்க பார்த்தாள் மித்ரா.. காவியாவோ

“ டேய் ஹிட்லர், கொஞ்சம் அடக்கி வாசி… ஷக்திக்கு பொறாமைன் ஆகிடப்போகுது” என்றாள்..

“ இல்லை இல்லை” என மிது மறுக்கும்முன்னே, நிலா அதை கூறினாள்..

“ நோ காவியா… ப்ரண்ட்ஷிப் பொறுத்தவரைக்கும் ஷக்தி ஜென்டல்மேன்..அதெல்லாம் ஜேலஸ் ஆக மாட்டாரு” என்றாள்… உடனே முகில்மதி

“ ஆமா எங்கண்ணா செம்ம ஸ்வீட்டு” என்று ஒத்துபாடவும்

“ போச்சுடா, இந்த வீட்டுல ஷக்திக்கு நிறைய கொ பா செ இருக்காங்க” என்று சலித்து கொண்டாள் புவனா..

“ டேய் கதிர், ஏதோ கருகுற வாசனை வருது பாரேன்” என்றான் ஷக்தி..

“ ஆமா, இவரு பெரிய ஹீரோ , இவரை பார்த்து நாங்க பொறாமை படுறோம்” என்று அலுத்துகொண்டாள் புவனா.. இப்படியே ஒருவரை ஒருவரை வாரிக் கொள்ள, அங்கங்கே தனது பேச்சையும் இணைத்து கொண்டான் அந்த புதியவன்…

அவனை யாரென கண்டுகொண்டாள் புவி.. அதன்பின் அடிக்கடி அவனின் ஒவ்வொரு செயலையும் கவனிக்க ஆரம்பித்தாள் புவனா.. இதை மித்ராவும் கண்டுகொண்டு சிரித்தாள்.. ஒரேகல்லில் இரண்டு மாங்கை போல ஒரெ நேரத்தில் இருவரின் எண்ணங்களையும் வெளியில் கொண்டுவர முடிவு செய்தாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.