(Reading time: 36 - 72 minutes)

24. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

முதன் முதலாய் வெளிநாட்டுப் பயணம்….அதிலும் தன்னந்தனியாய்…. இறங்கும் நேரம் நெருங்க நெருங்க அழுகையாய் வெடித்துக் கொண்டு வருவது போல் இருந்தது விஜிலாவுக்கு….

இங்கு யாரையும் தெரியாது… எதுவும் தெரியாது….எப்படி சமாளிக்கப் போகிறேன் என்றிருக்கிறது அவளுக்கு…. எதை செய்யலாம், யாரை நம்பக் கூடாது…. என்ன தெரியுமாம் இவளுக்கு….?

தலைவலி காய்ச்சலானாலும்….தலை போற அளவுக்கு ப்ரச்சனையானாலும் இவளே தான் சமாளித்தாக வேண்டும் தனியே தன்னந்தனியே….

கிளம்பும் போது இவளுக்காக ஏர்போர்ட் வர்றேன்னு சொன்ன அந்த இர்ஷியா வரவில்லை எனில் இங்கிருந்து யுனிவர்சிட்டிக்கு எப்படி செல்வது… அங்கு போய்  இவள் செய்ய வேண்டிய ப்ரொசீசர் என்ன…..இவளுக்காக இவள் கேட்டு வாங்கி வைத்திருக்கும் அறை எங்கு இருக்கிறது… அதற்கு எப்படி போக வேண்டும்…. என இதற்கெல்லாம் கூட இவள் தவித்துதான் ஆக வேண்டும்….

கையில் காகிதமாய் இருக்கும் அட்ரசையும், அனைத்தையும் கண்டு பிடிக்க வேண்டுமே இவள்…..

இப்படி எல்லாவற்றையும் யோசித்து ஒருவித கலக்கத்துடன் வந்து இறங்கியவளுக்கு வர்ஷனின் தமிழும் அவனது இந்திய முகமும் தேன் வார்க்கத்தான் செய்கின்றன….

ஆறடிக்கு மேல் உயரத்தில்…. தேவையைவிட கொஞ்சம் ஒல்லியோ இல்லை இதுதான் மிக சரியாய் இருப்பதோ என நினைக்கத் தூண்டும் இறுகிய உடற்கட்டுடன்…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

G Adarsha's "My really really really really really REALLY weird story" - Come let us sneak peek into the mind of a ten year old kid...

படிக்க தவறாதீர்கள்... 

 சாதாரணமாய் பார்க்கும் போது அளவாயும்….  பக்கவாட்டை பார்க்க திருப்பும் போது பெரிதாயும் உருண்டோடும் ஜீவ கண்களுமாய்….

சிரிக்க தொடங்கும் போது தோன்றாமல்….முழுப் புன்னகையில்  இடப் பக்க கன்னத்தில் விழும் அந்த குழியோடும்…..அவன்…

இருந்த சூழ்நிலையிலும்….அந்நிய உலகின் அனாதை உணர்விலும்…. ‘நீயே எல்லாத்தையும் பார்த்துக்கோ…உன் பின்னாலயே நான் வர்றேன்’ என சொல்லும் அளவுக்கு இவள் மனம் கடிவாளம்போட்டுக் கொண்டு அவன் பின் ஓட நினைக்கிறது ஒரு புறம் என்றால்….மறுபுறம் பெண்மைக்கே உரிய ஜாக்கிரதை உணர்வு அவளை அதட்டி ஆள்கிறது…..

அதோடு வர்றேன்னு சொன்னது ஷியான்னு ஒரு பொண்ணாச்சே…..

இவள் கேட்கும் முன்னமே தன் மொபைலை இவளிடம்  நீட்டினான் அவன்…”ஷியா உங்கட்ட பேசனுமாம்….”

“ஒரு சின்ன இஷ்யூபா…..  நான் வரமுடியல…. அதான் வர்ஷனை அனுப்பினேன்….…” இர்ஷியா சொல்ல சொல்ல எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டி வைக்கத்தான் முடிந்தது இவளால்.

“என் கூட வர இப்ப உங்களுக்கு ஒன்னும் அப்ஜக்க்ஷன் இல்லையே….” கேட்ட படி நடந்தான் வர்ஷன் இப்போது.

“இல்ல எனக்கு அப்ஜக்க்ஷன் இருக்கு” அப்டின்னு சொல்ல முடியுமா என்ன இவளால?

ஆக அமைதியாக அவனை பின் தொடர்ந்தாள்.

அடுத்த தடுமாற்றம் கார் பார்க்கிங்கில்….. இப்ப கார்ல இவ முன்னால ஏறனுமா….இல்ல பின்னாலையா???

அழைத்துப் போக அவன் வந்திருந்த கார் ஒன்றும் இவளுக்கு அறிமுகமான ஒன்று கிடையாது…. ஆனால் அதைப் பார்க்கவும் வர்ஷனை அடுத்து சுமுகமாக பார்க்க தோன்றவில்லை…… அவன் ரொம்ப பெரிய இடமோ….???

இதில் இவ பின்னால ஏறி அவனை  ட்ரைவராக்கினா ஒத்துபானா? ஆனா முன்னால ஏறுனா….அவன் என்ன இருந்தாலும் நம்ம ஊர்காரந்தான…. முத நாளே இவ என்ன இப்டி ஓவரா பழகுறான்னு நினைப்பானா?

இப்படி இவள் குழம்பிக் கொண்டிருக்க…..முன்பக்க கதவை திறந்து வைத்தான் இவளுக்காக அவன்…

“வாங்க விஜிலா” என்றபடி… அந்த நொடி குழப்பம் தீர்ந்தது என இவள் ஏறிக் கொண்டாலும்…அடுத்த நிமிஷம் வேறு வகை பதற்றம்…

‘என்ன இந்த பொண்ணு, வான்னு கூப்டா பின்னாலயே வந்துடுதுன்னு இவன் நினைப்பானோ..?’ என்று தைக்கிறது அது இவளை….

அவனிடம் எப்படி பழகவும், ஏனோ தட்டு தடுமாறுகிறது பெண் உள்ளம்….

இருக்கைக்கு வலிக்குமோ என்பது போல் பட்டும் படாமலேயே அமர்ந்து கொண்டாள் அவள்…

ஒரு கணம் இவளை திரும்பிப் பார்த்தான் தன் இருக்கையில் அமர்ந்த அவன்…..சீட் பெல்ட் போட்டுவிட்டாளா எனப் பார்க்கிறான் என்பது இவளுக்கு புரிந்தால் கூட, மனம் ஒரு அட்டென்ஷன் போய் பின் ஸ்டண்ட் அட் ஈஸ் போல ஒரு பாவ்லா காண்பிக்கிறது…..

 இவன் ப்ரெசென்ஸ விட்டு வெளிய போனாதான் நிம்மதி போலயே என்கிறது உள்ளே ஒன்று…

இப்பொழுது சான்ஃப்ரான்ஸிஸ்கோ ஏர்போர்ட்டை விட்டு வெளியில் வருகிறது இவர்களது கார்…

கவனமாய் அவன் பார்வையை தவிர்த்து வெளியே வேடிக்கைப் பார்க்க தொடங்கினாள் அவள்…

பரந்து விரிந்திருந்த அந்த சாலைளையும்…அதில் நெருக்கி அடிக்காமல் செல்லும் வாகனங்களையும்….அதற்கு அப்பால் பரவிக் கிடந்த ரம்ய நிலபரப்பையும்,  அதில் தெரிந்த மர வகைகளையும்…. புல் திட்டுகளையும்…சில சில டவர்களையும்….சற்று தொலைவில் உடன் வந்த சிறு மலை தொடரையும்… இவள் மிக கவனமாய் பார்த்துக் கொண்டிருந்த போது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.