(Reading time: 36 - 72 minutes)

தோட ஷியா கூப்ட வந்தது இவளைனு தெரியவும் நான் வரலை என விட்டுட்டுப் போகாம….கர்டசிகாக கூட வந்திருக்கானே…. அதில் இவளுக்கு தான் தான் அவனை ரொம்பவும் இன்சல்ட் செய்றமோ என தோன்றிவிட்டது…..

இப்பொழுது ஷியா “நான் கொஞ்ச நேரம்  வாட்டர்க்கு போய்ட்டு வரேன்” என கிளம்பிப் போக…. தனியாக அமர்ந்திருந்த இவள் பார்வை….தண்ணீரில் நடந்து வரும் வர்ஷன் மீது போய் நின்றது….

ப்ளூ டெனிம் பேண்ட்ஸ்….. அதை முடிந்தவரை காலில் சுருட்டி விட்டிருந்தான்……. வைட்  கேசுவல் ஷேர்ட்….. தண்ணீரில் இறங்கி இருப்பானோ…..? முடி கூட நனைந்து முன் நெற்றியில் கற்றைகளாய் படிந்து கிடந்தது…..

அதற்கு மேலும் அவனை ஆழ்ந்து பார்க்க பெண்மைக்கு தடை போடும் ஆளுமை அவனில்….

வருவது பீச்சுக்கு என தெரிந்து வந்திருந்தாலும், பீச்சுக்கு சூட் ஆகும் உடை அணியாமல் வந்திருக்கிறான்……. ஷார்ட்ஸாவது போட்றுகலாமே…..லேடீஸ் கூட போறோம்னு தானே இப்படி வந்திருக்கிறான்….. இவள் மனம் அவன் பக்கம் நியாயம் கண்டது….

இப்போது ஒரு வாட்டர் பால் எங்கிருந்தோ அவன் மீது வந்து விழ....பிங்க் நிற ஸ்விம் சூட்டில் ஒரு மூனு வயது மதிக்கதக்க கொளு கொளூ வாண்டு அடுத்து அவனிடமாக ஓடி வருகிறது….

வர்ஷன் பந்தை எடுத்து அதனிடம் கொடுக்க…..அது இவனிடம் ஏதோ பேச…. இவன் சிரிப்புடன் பதில் சொல்லி அதன் கண்ணத்தை ஒற்றை விரலால் செல்லமாய் தட்டி நிமிர…..

எதோ ஒரு மனோகரம் இவள் நெஞ்சள்ளிப் போகிறது….

அதே நேரம் நிமிர்ந்த அவன் பார்வை இவளைத்தான் சந்திக்கிறது….. ஏனோ ஒன்று இவளை அவனிடம் இருந்து பார்வையை விலக்க சொல்கிறது என்றால்….இன்னொன்றோ கோர்த்த பார்வையை இன்னுமாய் இறுக்கி கட்டுகிறது…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்... 

அதற்கு படிந்து, அவனை பார்த்த படியே அமர்ந்திருந்தாள் இவள்….. இப்போது நேராக இவளிடம் வந்தான் அவன் இவளைப் பார்த்த படியே….

வந்தவன் “என்னாச்சு….எதுவும் சொல்லனுமா விஜிலா?”  என்றபடியே போதிய இடைவெளிவிட்டு இவள் அருகில் அமர…..

இல்லை என மறுப்பாக தலையாட்டினாலும் வாய் அதுவாக “சாரி “ என்கிறது.

சின்ன புன்னகையுடன் மறுப்பு போல் தலையசைத்து அதை ஏற்கிறான் அவன்…

“என்ன எல்லாம் ஷியா வேலைபோல….?” அவன் தான்….

“இல்ல நிஜமாவே நீங்க ஷியாக்கு நல்ல ஃப்ரெண்ட்….”  இப்படித்தான் பதில் சொல்ல வந்தது அவளுக்கு….

“அவ குழந்தையா இருந்ததுல இருந்து பழக்கம்…. என் சிஸ்டர் மாதிரிதான் அவளும்….”

புன்னகைத்தாள் இவள்.

“அன்னைக்கு என்னாச்சு விஜிலா? அப்டி கோப பட்டீங்க?” மெயின் ப்ரச்சனைக்கு வந்தான் அவன்.

இப்போதும் அந்த புத்தகத்தைப் பத்தி அவனிடம் சொல்ல முடியவில்லை இவளுக்கு…..

“அது வந்து…..ஏதோ டென்ஷன்…..முதல் நாள்…..முன்ன பின்ன தெரியாதவங்க…..” என இவள் இழுக்க…

“தெரியாத தடிமாடுட்ட வந்து மாட்டிகிட்டமேன்னு பயந்துட்டீங்களா…?” சிரிப்போடே கேட்டான் அவன்…

“அச்சோ அப்டில்லாம் உங்களை  சொல்லிட மாட்டேன்பா…..மாடு ரொம்ப வருத்த பட்டுடுமே…” என்றது இவளே தான்….

மறு நாள் அவன் கேம்ப்ரிட்ஜ் கிளம்பிப் போய்விட்டான்.

அதன் பின் chat இல் எப்போதாவது பேச தொடங்கிய இருவரும்…. பின் அவ்வப்போது என்றாகி…..அடிக்கடி  என்ற நிலைக்கு வந்திருந்தனர்…… இதற்குள் ஆறு மாசம் ஓடி இருந்தது….ஷியாவும் இவளுமே ஒரே அறைக்கு மாறி இருந்தனர்….

றுநாள் இவளுக்கு பிறந்த நாள்…..

“ஹேய் சீஸ்கேக்….ஜிலேபி கேர்ள்..…ஹன்பன்…..ஸ்வீட்கின்…” என வித விதமாக கொஞ்சிக் கொண்டிருந்தான் வர்ஷன் இவள் கனவில்…..

’சே என்னாச்சு இவனுக்கு….ஒழுங்காதான எப்பவும் பேசுவான்… இப்ப என்ன ‘ என்ற ஒரு நினைவும்…அதன் அடியில் தாய் மடியில் சுருளும் ஒரு உணர்வுமாய் இவள் தூக்கம் கலைய இவளுக்கு வெகு அருகில் அவன்….

நிஜமாகவே வர்ஷன் வந்திருக்கிறான் இவள் அறைக்கு…. சட்டென அவசர அவசரமாக இவள் எழுந்து உட்கார….

“ஹேப்பி பேர்த் டே ஜில்லர்ஸ்” என வாழ்த்தினான் அவன்….எப்போதாவது அவளை இப்படி ஜில்லர்ஸ் என்பான் அவன்….. எதையும் யோசிக்க முடியா சந்தோஷம் இவளில்….

நடு இரவு 12 மணிக்கு…..வர்ஷன் கொண்டு வந்திருந்த கேக்கை கட்செய்து ஷியாவுக்கு ஊட்டியவள் அடுத்து அவன் முகம் பார்க்க…..அவன் பார்வையில் தயங்கிபடிதான் என்றாலும்…. அவனுக்கும் கேக்கை வாயில் தான் கொடுத்தாள்..

அந்த கணம் அவன் பார்வை பரிமாற்றம்……அவன் முறுவல்….அவன் முகத்தில் பரவிய அந்த ஆனந்த நிம்மதி…..உரிமை நிலை….இவளுக்கு சொல்லும் சேதி என்ன?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.