(Reading time: 36 - 72 minutes)

பேச்சுவாக்கில் தான் இவளுக்கு விஷயம் தெரிந்தது வர்ஷன் பார்க்லே ஸ்டூடண்ட்டே கிடையாது என…. ஹார்வர்டில் எம் பி ஏ படித்துக் கொண்டிருக்கிறானாம்…. அங்க இருந்து இந்த ஷியாவ பார்க்க வந்திருக்கானாம்….ரெண்டு பேரும் திக் ஃப்ரெண்ட்ஸாம்…. ஓ என கேட்டுக் கொண்டாள் இவள்….

நாட்டின் மேற்கு எல்லையிலிருந்து கிழக்கு எல்லைக்கு ஒருவன் ஒரு ஃப்ரெண்ட பார்க்க வந்திருக்கான்…!!!.

 ஷியா பாரம்பரியமான பெண்ணாகத்தான்  இருக்கிறாள்…..சும்மா தாறுமாறக உறவு கொள்ளும் வகை எல்லாம் அவள் இல்லை…..அவளுக்கு இவன் ஃப்ரெண்ட்னா அவன் எப்படிப் பட்டவன்….அவளுக்காக இத்தனை தூரம் வருகிறான் என்றால் ஷியாவுக்கு அவனைப் பத்தி நன்றாக தெரியுமளவு பழக்கம் இருக்கும் தானே….

அவன் செயல்களுக்கும் அந்த புத்தகத்திற்கும் ஏனோ சம்பந்தமில்லாத ஒரு உணர்வு இவளுக்கு….

எது எப்படியோ இனி அவனை இவள் பார்க்க நேரிடப் போவதில்லை என்ற நினைவில் தான், விஜிலா அவன் பற்றிய குழப்ப நினைவுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் அப்போது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

னால் அன்று காலை 11 மணிவாக்கில் விடை பெற்றுப் போன ஷியா ஒரு இரண்டு மணி வாக்கில் மொபைலில் அழைத்தாள். “ அவ்ட்டிங் போறேன் கூட வாயேன் நீயும்” என…

மறுக்க இவள் புறம் எந்த காரணமும் இல்லை என்பதால் இவள் சம்மதிக்க…… மறுத்திருக்க வேண்டும் என்ற நினைவை தந்தான் காரோடு வந்து நின்றவன்…. வர்ஷன்…..

அவனோடுதான் வந்தாள் ஷியா….

இவள் கிளம்பி ஷியா சொன்ன படி ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்க…..அங்கு வந்திருந்தனர் ஷியாவும் வர்ஷனும்…..இப்போது எப்படி இவள் நான் வர மாட்டேன் என மறுக்கவாம்?

ஷியாவிடம் என்னவென்று சொல்லவாம் இவள் பக்க காரணத்தை……? பெரிய இவனாட்டும் இனி இவ  பக்கம் திரும்பிகூட பார்க்க மாட்டான்ற மாதிரி போனான் நேத்து…..இப்ப ஏன் வந்து நிக்கானாம் என வர்ஷன் மேல் வந்த கோபத்தை மறைத்து காரில் ஏறினாள்.

அடுத்து இவர்கள் கார் மீண்டும் நிற்கும் வரையும் முழு பயணத்திலும் இவள் ஷியாவிடம் மட்டும் தான் பேசினாள். ஷியா இருவரிடமும் கலகலத்தாலும் இவள் வர்ஷனின் எதற்கும் ரெஸ்பாண்ட் செய்ய தயாராய் இல்லை…

அதை உணர்ந்தானோ…..அவனுமே இவளிடம் நேரடியாக எதையும் பேசிக் கொள்ளவில்லை….

கார் போய் நின்ற இடம் ஒரு சைன் போர்ட் அருகில்…. South sanfransisco - The Birth place of Biotechnology என்றது அது….. அசந்து போனாள் விஜிலா…..அது அந்த நகரத்தின் பயோடெக் ஃபெர்ம்ஸ் இருக்கும் ஏரியாவின் நுழைவுப் பகுதி…….

பார்க்லேவில் அட்மிஷன் கிடைத்த நேரத்திலிருந்து அந்த இடத்தைப் பற்றி நெட்டில் இவள் படிக்க  முற்பட்ட போது, விஜிலா கண்ணில் பட்டது இந்த சைன் போர்ட் ஃபோட்டோ…..

 பயோடெக்னாலஜிஸ்ட் விஜிலாவுக்கு ஏனோ அதை பார்க்கும் போதெல்லாம் அங்க போய் ஒரு ஃபோட்டோவாது எடுக்க வேண்டும் என ஒரு குழந்தை தன ஆசை….அந்த வாசகம் காரணம்.

இன்று காலை ஷியாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது….. பேச்சுவாக்கில் இதை சொல்லி இருந்தாள்….

அதற்காக ஷியா இவ்ளவு எஃபெர்ட் எடுத்து இங்கு கூட்டி வந்திருக்கிறாள் என்றால்….??? ஒரு பக்கம் ஜில் என மனம் குளிர்ந்தாலும் இன்னொரு பக்கம் ஏதோ நெருடுகிறது….இதில் வர்ஷன் வேலை எதுவும் இருக்குமோ என….

அடுத்து அங்கிருந்து Oyster Point என்ற பீச்சிற்கு பயணம். போகும் போதும் சரி போனபின்பு பீச்சில் நடக்கும் போதும் சரி இவள் ஷியாவுடன் மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தாள்…

பீச்சில் ஒரு இடத்தில் ஷியாவும் இவளும் உட்கார வர்ஷன் தனியாக போனான்.

“உனக்கு வர்ஷன் கூட என்ன இஷ்யூ விஜி…..? நீ அவனை ரொம்பவே அவாய்ட் செய்ற மாதிரி இருக்கு…” என இப்போது நேரடியாக விஷயத்துக்கு வந்த ஷியா….வர்ஷன் அவளது அண்ணனோட ஃப்ரெண்ட் என்றும்…. அந்த வகையில் இவளுக்கும் சிறு வயதிலிருந்தே வர்ஷனை தெரியும் என்று சொன்னவள்…

ஒரு வகையில் இவர்கள் குடும்பம் வர்ஷனது அம்மா களஞ்சியத்துக்கு தூரத்து உறவினர் என்றும்…. இவர்களோடு பழகுவதை கூட வர்ஷன் வீட்டில் விரும்ப மாட்டார்கள்…. ஆனால் வர்ஷன்தான் எந்த வேறுபாடும் பார்க்காமல் பழகுவான்…. வர்க்க வேறுபாடெல்லாம் பார்க்கவே மாட்டான்… என பல வகையில் வர்ஷனுக்கும் ஷியா குடும்பத்தினருக்கும் இடைப்பட்ட பல செயல்களை, நட்பை எடுத்துச் சொன்னாள்.

அந்த புத்தக விஷயம் உறுத்தினாலும்….வர்ஷனைப் பத்தி ஷியா சொன்ன நிகழ்வுகளில் அவனிடம் குறை கண்டுபிடிக்கவே வகை தெரியவில்லை இவளுக்கு …. அதோடு ஏதோ வகையில் அவன் ஷியா குடும்பத்துடன் பழகும் விதத்தை இவள் மனம் ரசிக்கிறது ….

அதோடு விஜிலாவை இனி பார்க்க வரமாட்டேன்னு நேத்தே ஷியாட்டயும் சொன்னானாம் வர்ஷன்…..அதனால இப்ப விஜிலாவைதான் கூட கூப்பிட்டுடுப் போறோம்னு சொல்லாமலே ஷியா தான் அவனை கூட்டி வந்தாள் என அவள் சொல்லவும்….

அவனும் இப்பவரை இவட்ட பேசவே இல்லையே……

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.