(Reading time: 36 - 72 minutes)

வ்வொரு விழாவுக்கும் என்ன உடை இவள் அணிய வேண்டும் … அதற்கு எந்த நகை பொருந்தும் என்றெல்லாம் இவளுக்கு ஒவ்வொன்றையும் அணிந்து பார்த்து மகிழ்ந்தாரே….

கிளம்பும் போது கூட இந்த செமஸ்டருக்கான பணத்தை எப்ப இவள் அக்கவ்ண்ட்ல டெபாசிட் செய்ய என கேட்டாரே…..டீச்சிங் அசோசியேட்டா வர்க் பண்ண இவளுக்கு ஆஃபர் கிடச்சுறுக்கதால….  அவ்ளவு பணம் தேவையில்லப்பா….அங்க போய்ட்டு எவ்ளவு தேவைப் படும்னு சொல்றேன் என கிளம்பி வந்தாளே….

இப்ப திடீர்னு எங்க போய்ட்டு அந்த பணமெல்லாம்???  வின்யத் ஏன் இப்படி செய்றான்…???

இப்ப இவ கைல இருக்க பணம் போறதுக்கான டிக்கெட் எடுக்கவே பத்தாதே….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

 “அப்பாவ கடைசியா சிரிச்ச முகமாதான பார்த்த விஜி குட்டி……இப்ப அவசியமா நீ வந்து இந்த கோலத்துல பார்க்கனுமா?.... நான் ஃப்யூனரல ஆரம்பிச்சுடுறேன்…சரிதான…?” கொஞ்சலாக குழைந்தது அவன் குரல்….

“ஐயோஓஓஓஓஓஓஓ…..டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…..அப்படி எதுவும் செய்துடாத…..நான் எப்டியும் வர்றேன்…..” அலறத்தான் முடிந்தது இவளால்….  ஆனால் அடுத்து என்ன செய்யவென கூட யோசிக்க முடியாமல் இவள் தலையை பிடித்துக் கொண்டு ப்ரமை பிடித்தவள் போல் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாளோ….

வந்து நின்ற ஷியாவினால் தான் சற்று சூழல் உணரும் நிலைக்கு திரும்பினாள்….

இவ போன்ல பேசியதை கேட்ட இவளோட ரூம்மேட் மூலம் ஷியாவுக்கு தகவல் சென்றதாம்…  அடுத்து ஷியாதான் இவளை முழுக்க முழுக்க பார்த்துக் கொண்டது….

செலவு யாருடையதாய் இருக்கும் என விஜிலாவுக்கு சொல்லாமலே புரிகிறதுதான்….. ஆனால் அதைப் பற்றியெல்லாம் எதையும் இவள் யோசிக்கும் நிலையில்  இல்லை…

இவளோடு ஷியாவுமே திருச்சி வந்தாள்…… திருச்சி விமான நிலையத்தில் இவர்கள் இருவரையும் பிக் அப் செய்தது வர்ஷன்…..

அந்த சூழலில் அவனிடம் கோப படுவதைப் பற்றி நினைத்துப் பார்க்க கூட இவளுக்கு முடியவில்லை…. பார்க்கவும் ஏனோ கட்டிக் கொண்டு கதற  வேண்டும் போல் தான் இருந்தது….

டுத்தும் அப்பாவிற்கு பிரியா விடை கொடுத்து பிரித்து அனுப்பி இரண்டுநாளான பிறகுதான் ஒரு வகையில் அதை கவனித்தாள் இவள்…..வர்ஷனும் ஷியாவும் இன்னும் கூட இவள் வீட்டில் தான் இருக்கின்றனர்…

அதுவரை நின்று கொண்டிருந்த  வர்ஷனை இவளது மாமா ஒருவர் “உட்காருங்க தம்பி….எப்பவும் நின்னுட்டே இருக்கீங்க என சொல்லியபடி அருகிலிருந்த ஒரு சேரில் உட்கார வைக்க….

அடுத்த நிமிடம் அங்கு ஆஜரான இவள் அண்ணன் “முக்கியமானவங்க ஒருத்தங்களுக்கு சேர் தேவைபடுது” என வர்ஷனை எழுப்பி விட்டு சேரை தூக்கிக் கொண்டு போனான்…..

அடுத்த முறை வீட்டில் இருந்த உறவினர்கள் அனைவரும் சாப்பிட உட்கார…..அவர்களோடு வின்யத்தான் வர்ஷனையும் உட்கார வைத்தே…… ஆனால் உணவு  பரிமாறிய பின்…. அவன் சாப்பிடப் போகும் நேரத்தில்

“முக்கியமான ஒருத்தங்கள உட்கார வைக்க மறந்துட்டாங்க….. நீங்க எந்திரிச்சுக்கோங்க” என எழுப்பிவிட்டு…… “வேண்டாம் வீட்ல இப்பதான் சாப்டுட்டு வந்தேன்”  என சொல்லிக் கொண்டிருந்த பக்கத்துவீட்டு ரோகித்தை கூட்டி வந்து அங்கு உட்கார வைத்தான்….

தன் சோகம் தாண்டி அப்போது தான் நடந்து கொண்டிருப்பது இவளுக்கு புரிய….. தன் அண்ணன் மீது கொதித்துக் கொண்டு வந்தாலும், ஆர்பாட்டம் செய்ய இது சமயமல்லவென….அடுத்து வர்ஷனை சந்தித்தவள்….” நீங்க கிளம்புங்க வர்ஷன்….அதான் எல்லாம் முடிஞ்சுட்டே….செய்த எல்லா ஹெல்ப்க்கும் ரொம்பவே தேங்க்ஸ்….இனி நான் சமாளிச்சுப்பேன்….” என அவனை கிளப்ப முயன்றாள்.

அவனோ பதில் என்று எதுவும் சொல்லாமல் இவள் முகத்தையே பார்த்திருந்தான்.

“ப்ளீஸ்” இப்போது இவள் கெஞ்சினாள்.

“ப்ச்….நீ யூஎஸ் கிளம்பாத வரை நான்  இங்க இருந்து கிளம்ப மாட்டேன்…தேவையில்லாம கெஞ்சாத…”

யூ எஸ்ஸா என்றிருக்கிறது இவளுக்கு…. டிக்கெட் ஃபேரே தராத அண்ணனா இவளுக்கு படிப்பு செலவுக்கு பணம் தரப் போகிறான்? நின்னு அவன்ட்ட இதைப் பத்திலாம் பேசனும்தான்……ஆனா அதுக்கான இடமும் காலமும் இது அல்ல….

“பொன்னர் தன் பிள்ளைங்கள எப்டி வளத்து வச்சுறுக்கான் பாத்தியா….அவன் செத்த வீட்டுக்குள்ள துட்டுக்கு அடிச்சுகிட்டு நாறுதுங்க…” என அப்பா பேரைதான் சந்திக்கு இழுக்கும் சொந்தம்… அவ அப்பாவுக்கு இதையா செய்து தரப் போகிறாள் இவள்?

ஆக அடுத்த வழியாக அவள் யோசித்தது  லோன்….இவளோட ஸ்கோர்லாம் நல்லா இருக்குது…..எஜுகேஷன் லோன் எதுவும் கிடைக்குதான்னு பார்க்கனும்…..இவ வீடு இவ பேர்லதான் இருக்கு….அதை ப்ளெட்ஜ் செய்ய முடிந்தாலும் ஓகே…. எப்படியோ அதையெல்லாம் செய்து முடித்தால் தானே இங்க இருந்து இவள் கிளம்ப முடியும்?

அதுவரைக்கும் இவன் இங்க இருக்கப் போறானாமா?  இவள் இதை அவனிடம் கேட்க…..

“லோன்தான….? நீ கிளம்ப ஆரம்பி…. அதுக்குள்ள வந்துடும் “ என பேச்சை முடித்துவிட்டுப் போய்விட்டான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.