(Reading time: 36 - 72 minutes)

ல்ல இம்மாரலடிக்கும் அன்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுன்னு சொல்வாங்க….. ஆரம்பத்துல இருந்து இப்ப வரை உங்க நடவடிக்கைல நான் பார்க்கிறது அன்பு…. அந்த சுபாவத்துக்கு நேர் எதிரா இருந்தது உங்கள நான் தப்பா நினைக்க  காரணமான அந்த ரெண்டு விஷயமும்….இப்ப வரைக்கும் என்னை நீங்க தப்பா ஒரு பார்வை பார்த்தது கிடையாது….இங்கயும்  நைட் முழுக்கம் உங்கட்ட நான் தனியாதான் இருந்திருக்கேன்….. அப்பதான் யோசிச்சேன்….

ஒவ்வொருடைமும் நீங்க எனக்காக எதாவது செய்தா அடுத்து உங்களை மோசமா நான் நினைக்கிற மாதிரி எதாவது கிடைக்குது……அதுக்கு நீங்க காரணம் இல்லைனா….அந்த பெர்த்டே அன்னைக்கு அங்க இருந்தது மூனே பேர்…அதுல நான் நீங்க ரெண்டு பேரும் அந்த பர்ஃஸ் விஷயத்துக்கு காரணம் இல்லைனா…மூனாவதா ஷியாவா தான் இருக்க முடியும்…. கார்ல அப்டி புக் வைக்கவும் அவளால கூட முடிஞ்சிருக்கும்….

 “ம்…நீ யூஎஸ் வர முன்னால, ஷியா ஹாலிடேஸ்ல அவ அண்ணாவைப் பார்க்க ஹார்வர்ட் வந்திருந்தா….அப்ப நீ அடிக்கடி அவட்ட chat செய்வ…. உன்னைப் பத்தி அடிக்கடி அவ எங்கட்ட எதாவது சொல்லிட்டே இருப்பா…. ஒரு வகையில் எனக்கு உன்னை பிடிச்சு போச்சுன்னு வச்சுக்கோயேன்….

அதை ஷியாட்ட சொல்லி ஹெல்ப் கேட்டேன்…. அவளும் ஆசையா சந்தோஷமாதான் ஒத்துகிட்டா…..அப்டிதான் நான் உன்னை பிக்கப் செய்ய ஏர்போர்ட் வந்தது….ஷியாக்கு  என் மேல தவறான ஆசைலாம் எதுவும் கிடையாது……ஆனா அஸ் அ ஃப்ரெண்ட் அவளை விட நான் உனக்கு இம்பார்டன்ஸ் கொடுக்றதை பக்கத்துல இருந்து பார்க்கிறப்ப அவளுக்கு தாங்க முடியலை…. அதான் உனக்காக சாக்லேட் எடுத்து வச்சுறுக்கேன்னு அவட்ட சொல்லவும்…உன் குணம் தெரியுமில்லையா அவளுக்கு…இப்டி புக் வச்சு விட்றுக்கா…… நீயா விலகிடுவன்னு….

அடுத்து என்னமோ விஜிக்கு என்னை பிடிக்கலை…..விரும்பாதவங்களை துரத்தக் கூடாதுன்னு இனி நான் விஜிய பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டு வருத்தமா நான் கிளம்பவும்….அவளுக்கு உறுத்திட்டு…என் மேல உண்மையான பாசம் உண்டுதானே அவளுக்கு…ஆக அடுத்து நம்மை பேட்ச் அப் செய்ய ட்ரை பண்ணி இருக்கா….

திரும்ப உன் பெர்த் டே டைம்ல நான் வர்றேன்னு அவட்ட கூட சொல்லி இருக்கல்ல…. அந்த இன்சிடென்ட்ல திரும்பவும் அவ பொசசிவ்நெஸ் வேலைய காட்டிட்டு….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்... 

அடுத்து உன் அப்பா விஷயத்தில் அவ ரொம்பவே ஃபீல் பண்ணிட்டா….உன்னை நினச்சும் அவளுக்கு ரொம்ப கஷ்டமாகிட்டு போல….இதில் அதுக்கு பிறகு எனக்குமே உன்னை விட்டுட்டு இருக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு….

ஏன்னா அதுக்கு முன்ன வரை எப்படியாவது நீ உன் காதலை உணர்றப்ப என்ட்ட வந்து சேர்ந்துடுவன்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு….. ஆனா உன் அண்ணன் என்னை இன்சல்ட் செய்றான்னு என்னை கிளப்பி கூட்டிட்டு வர்ற அளவுக்கு  என் மேல உள்ள உன் அன்பு வெளிப்படையா இருந்தும் நீ என்ட்ட பேச கூட இல்லை…

சோ இனி நீ என்னைக்குமே எனக்கு கிடைக்க மாட்டியோன்னு தோணுச்சு…..

நான் அப்செட் ஆனதைப் பார்த்துட்டு  ஷியா ரொம்பவும் ஃபீல் பண்ணிட்டா போல…. அதான் என்னை கூப்டு தான் செய்ததை சொல்லி அழுதா…. அதான் உடனே இங்க கிளம்பி வந்தேன்…… இங்க உன் டீம் மேட் டோரத்தி முன்னலயே எனக்கு அறிமுகம்….அத வச்சு கூட வர முடிஞ்சுது…”

டுத்து என்ன வர்ஷனுக்கு குணமாகவும் இனிமையாக நடந்து ஏறியது  இவர்கள் திருமணம்…..

ஆனால் அந்த திருமணத்தில் தான் கலந்து கொள்ள வேண்டும் எனில் இவளது அப்பா இவளுக்கென கொடுத்திறுக்கும் வீடு பணம் நகை எல்லாவற்றையும் தனக்கு இவள் கொடுத்துவிட வேண்டும் என்றான் இவள் அண்ணன் வின்யத்….

உறவினர் முன் இவள் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டாள் என்ற பெயர் வரக் கூடாது என்ற  காரணத்திற்காக வின்யத் சொன்னதை செய்து கொடுத்தாள் இவள்.

ஆக அப்படி தொடங்கியது இவர்கள் வாழ்க்கை….. என்னதான் திருமணமாகி விட்டாலும்….. அவன் எம் பி ஏ முடிக்கவும் கம்பெனி நிர்வாகத்தை பார்க்கவென இண்டியா போயாக வேண்டிய குடும்ப நிர்பந்தம் இருந்தாலும்….. இவளை பிடிவாதமாக பி எச் டி முடிக்க வைத்தான்.

இவள் இங்கு படிப்பை முடிக்கும் போது அங்கு  அவன் படிப்பிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத இந்த பயோசியை இவளுக்காகவே தொடங்கி இருந்தான். காதல் காலம் அதெல்லாம்…..

அடுத்தும் குழந்தை ஆசை அவனுக்கு அத்தனை உண்டென்றாலும் இவள் கரியரில் செட்டில் ஆகும் வரை காத்திருக்க சொன்னதும்….குழந்தை உண்டாகிய நாளிலிருந்து இவளை உயிராய் தாங்கியதும் அவனே….

இவ்வளவு ஏன் அன்று ஸ்விஸ் கிளம்பிப் போகிறேன் என சொல்லும் போது கூட “போய் கொஞ்சம் அங்க தங்க வேண்டி இருக்கும் போல ஜிலேபி….உன்னை சீக்கிரம் அங்க கூட்டிகிறேன்…” என்றுதான் சொன்னான்.

இவளை விட்டுப் போவதற்காக அவன் தவித்த அந்த தவிப்பு இன்று கூட ஞாபகம் இருக்கிறது….

ஆனால் அடுத்து இவளோடு பேசுவதை குறைத்தவன்  ஒரு கட்டத்தில் தன் பி ஏ வை தான் இவளிடம் பேச சொன்னான்….அவன் லைனில் வருவதே இல்லை…

அந்த பி ஏ சைக்கோவோ ….முதலில் இவட்ட வெட்டி வெட்டி பேசுச்சுன்னா…ஒரு ஃஸ்டேஜ்ல….

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.