(Reading time: 36 - 72 minutes)

ந்த நொடியில் தான் இவள் உணர்ந்தாள்…. தொண்டையை நோக்கி ஏறிக் கொண்டிருக்கிறது வயிற்றில் உள்ள எல்லாம்….

ஓ மை காட்…வாமிட் செய்யப் போறா….அவனோட காஸ்ட்லி கார்ல….. உதடுகளை இறுக கடித்து தன்னை அடக்கியவள்…..அவசர அவசரமாக தன் பக்க வின்டோவை இறக்க முயன்றாள்…

ஆனால் அதை எப்படி திறக்க என்று கூட அவளுக்கு தெரியவில்லை…. இன்னும் அரை நொடி கூட இவளால் கட்டு படுத்த முடியாது….அதோடு வாய் திறந்து என்ன வேண்டும் என சொல்லவும் முடியாத நிலை…

கையால் பொறுமையின்றி வின்டோவை அருகில் தட்ட ஆரம்பித்தாள்….. அப்டியாவது அவன் புரிஞ்சு அதை திறக்கட்டுமே….

தூங்வது போல் கண் மூடிக் கிடந்தவள் சட்டென எழும்பி இப்படி தட்டுவதை கவனித்த வர்ஷனுக்கு என்னவென புரியவில்லை…

ஆக சட்டென காரை ஓரத்தில் சென்று நிறுத்தியவன்… அவள் என்ன செய்ய முயல்கிறாள் என புரிய வேண்டி…தன் இடத்திலிருந்து எக்கி… தட்டிக் கொண்டிருந்த கையை பிடித்தான்…..

உதடுகளை கவ்வி…கை அதுவாக வெட்டுவது போல்…. என்னவாயிற்று இவளுக்கு....?? ஃபிட்ஸா??

அவ்வளவுதான்…அவ்வளவேதான்…பாவம் இவளும்தான் எவ்வளவு கட்டுபடுத்துவாள்….. அவள் வயிற்றில் இருந்தது இப்போது அவன் வலபக்க கன்னம்… லைட் ப்ளூவில் அணிந்திருந்த ஷேர்டின் தோள்…கை…..என வகையாய் இடம் பெயர்ந்திருந்தது….

இப்படி நொடியில் நடந்துவிட்ட விஷயம் புரிய….மொத்தமாய் மிரண்டு போய், அத்தனை அருகாய் தெரிந்த அவன் முகத்தை அரண்டு போய் இவள் வெறிக்க….இவள் உடல் பின்னிழுத்து சீட்டோடு சீட்டாக அதுவாக பம்மி விரைக்க…..

முகத்தில் அல்லவா வாங்கி இருக்கிறான்….நிகழ்வின் அடுத்த கணம் கண்கள் இறுக மூடி திறந்தவன்….. இப்பொழுது இவளைவிட்டு விலகி…இவள் முகம் பார்த்து கெஞ்சலாய் “சாரி” என்றானே பார்க்கலாம்….

‘எதுக்காம்…? இவல்ல சொல்லனும்…’ இவள் மனம் இப்படி ஓட அதற்குள் அவன் காரின் வின்டோவை இறக்கி இருந்தான்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

இருந்தாலும் இப்போது செகண்ட் அருவி….இப்போதும் இவள் எதிர்பாரா தருணம் இது நடக்க…. இவள் தனக்கு தானே அபிஷேகம் என நினைக்க….இந்த முறை கையில் ஏந்தினான் அதை அவன்….

நிறைய டைம் இப்டி கைல வாங்குறத இவள் கதையில் கேட்டிருக்கிறாள்….. அப்பல்லாம் அது அன்பின் வெளிப்பாடு என தோன்றும்….

ஆனால் இப்போது சுய அனுபவம் சொன்ன கதையே வேறு….

‘இவன் ஏன் இப்ப தேவையில்லாம சீன் போடுறான்….’ என்றுதான் தோன்றியது அவளுக்கு…. ஆனாலும் அவன் கழுவாத கன்னம் பார்த்தவள்……இன்னுமாய் எகிறாமல்…..

“சாரி “ என முனங்கினாள்.

அதே நேரம் அவசரமாக தன் பக்க கதவை திறந்து வெளியில் இறங்கியவன்……காரிலிருந்த வாட்டர் பாட்டலை கொண்டு தன் கைகளை சுத்தப் படுத்திய பின்….இப்பொழுது இவள் புற கதவை திறந்துவிட்டான்….

சே கதவு திறந்து இருக்குன்னு கூட யோசிக்காம…. கீழ இறங்காம…அவன் வந்து திறந்து வைக்கும் வரை இருந்தோமே…..என்று தன்னை தானே நொந்து கொண்டு இறங்கினாள் இவள்.

இப்போது இன்னொரு வாட்டர் பாட்டிலை இவளிடம் நீட்டியவன்….தன் கையில் இருந்த பாட்டில் தண்ணியால் தன் முகம் தோள் என  கழுவி முடிக்கும் போது, அவன் ஷேர்ட் அதிகமாய் நனைந்திருந்தது….

“இங்க வச்சு நீங்க ட்ரெஸ் மாத்த முடியாது…..ஈர ட்ரெஸ்ல ட்ராவல் செய்ய கஷ்டமா இருக்குமே…அதான் “ என அவன் கையில் வாங்கியதற்கு காரணம் சொல்ல…

அவன் இவள் மேல் கரிசனையில் செய்தானா…இல்லை சீன் போட்டானா என்றெல்லாம் இவளுக்கு முடிவுக்கு வர முடியவில்லை எனினும் இவள் மனம் ஆடித்தான் போனது….

இவள் சற்று பேந்த விழித்து அந்த உணர்வை சமனம் செய்ய…

“சாரி…. முதல்லயே ஒழுங்கா புரிஞ்சு காரை ஃஸ்டாப் பண்ணிருக்கனும் நான்” என்றான் அடுத்து….

இந்த நிகழ்வுக்குப் பின் காரில் ஏறி உட்கார்ந்தவளுக்கு, இப்போது அவனிடம் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என மறுபடியும் குழப்பம்.

ஆனால் அமைதியாகவே வந்தாள்….அவனும் தான்.

அன்றைய நாள் அதன் பின் ஈவென்ட்லெஸ் என்பது போல் தோன்றியது அவளுக்கு….

யுனிவர்சிட்டியில் இர்ஷியாவிடம் இவளை ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டான் அவன்.

தனக்கான தங்குமிடத்தில் ஒரு வழியாக செட்டிலானவளுக்கு அன்று இரவு படுக்கையில்தான் மெல்ல உறைக்கிறது அவன் பெயரைத் தவிர இவள் எதையுமே தெரிந்திருக்கவில்லை என…..

 அன்று வியாழக் கிழமை…..அடுத்த நாள் முழுவதும் ஜெட்லாக் கில் கழிய….சனி அன்று காலை ஷியா இவளைத் தேடி வந்திருந்தாள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.