(Reading time: 36 - 72 minutes)

ன்னும் ஒன் அவர் கிட்ட ஆகும் நாம யுனிவர்சிட்டி ரீச் ஆக……எதாவது சாப்டுறீங்களா ?” என்றான் அவன்.

மொத்தமே ஒன் அவர்தான் ஆகும் என ஷியா உட்பட எல்லோரும் சொல்லி இருந்தனர்…. இதில் இவ்ளவு நேரத்துக்கு பிறகும் இவன் ஏன் இப்படி சொல்றான் என இருக்கிறது இவளுக்கு……ஆனால் அதை வெளிப்படையாக கேட்டால் அவனை சந்தேகப் படுவதுபோல் இருக்குமே……

 ஆக ஒரு நொடி முக மாறுதலுக்குப் பின் மீண்டும் இயல்பு போல் முகத்தை வைத்துக் கொண்டவள்…தன் கடமையை கைவிடாது நிறைவேற்றினாள்…அதாங்க வெளிய வேடிக்கை பார்க்கிறதை…

இன்னும் சற்று நேரம் தேய்ந்து மறைய, இப்போது நிஜமாகவே இவளுக்கு பசி எடுப்பது போல் ஒரு உணர்வு….. அதே நேரம்

“க்லோவ் பாக்‌ஸ்ஸ திறங்க…அதுல உங்களுக்குன்னு சில சாக்லேட்ஸ் எடுத்துட்டு வந்தேன்….ப்ளீஸ் டிஸ்டன்ட்டா ஃபீல் பண்ணாம எடுத்துக்கோங்க….வீட்டைவிட்டு இவ்ளவு தூரம் தள்ளி  இருக்கோம்…இங்க நாமதான் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகனும்…” என்றபடி அவன் சற்றி எக்கி க்ளோவ் பாக்‌ஸைஐ திறக்க முயல…

இவள் அவனுக்கு உதவும் வகையிலாவது அதை தான் திறப்பதுதான் சரி என நினைத்து திறந்து, மரியாதைக்காக ஒரு சாக்லேட்டை எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைவோடு உள்ளே பார்த்த போது அவள் கண்ணில் படுகிறது அது…..

அரை நிர்வாணமாய் ஒரு பெண் படத்தை அட்டையாய் கொண்ட அந்த ஏதோ ஒரு மெகசீன்…

தேள் கொட்டியது போல் சட்டென எடுத்துக் கொண்டாள் தன் கையை…. திக் என்கிறது….கூடவே அருவருப்பும்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்... 

எப்படிபட்டவன் கூட இவ தனியா வந்துட்டு இருக்கா?.....அந்த ஷியாவே ஏதோ ஆன்லைன்ல பழக்கம்…அவ சொன்னானு கொஞ்சமும் யாருன்னே தெரியாத இவன் கூட…..

ஆனால் இப்போ இவ என்ன செய்யனும்? இவ்ளவு நேரம் அவனிடம் ஒரு ஜாக்கிரதை உணர்வு இருந்தாலும்…..அவன் இவள் நாகரீகமற்றவள்…சரி இல்லை…தவறானவள் என எப்படியும் நினைத்துவிடக் கூடாது என்ற கவன உணர்வும் இருந்ததால் அதை வெளிகாட்டாமல் முகமுடி இட்டிருந்தாள். இப்போது காத்து வந்த முகமுடி காற்றில் பறந்தது…..

ஆனால் உடனடியாக என்ன செய்யவேண்டும் என்றும் புரியவில்லை…இப்படி பாதி வழியில் இறங்கி அடுத்து என்ன செய்யவாம்?

அதோடு அவன் இவளிடம் இன்னும் அத்து மீறுதலாய் ஒரு பார்வை பரிமாற்றம் கூட செய்யவில்லையே…

அவனை பார்ப்பதை தவிர்த்து மீண்டுமாய் வெளிப் புறமாக திரும்பிக் கொண்டாள்….முகம் இறுகிப் போய் இருந்தது…..

அவன்  இவள் முக பாவத்தை கவனித்தான் போல….

“என்னாச்சு…? எடுத்துக்கலையா? “ என்றான்.

“பிடிக்கலை” என பட்டென பதில்  வந்தது இவளிடமிருந்து….

ஒரு நொடி சற்று திகைத்தவன் “என்னங்க நீங்க…. யாரும் சாப்ட எதுவும் கொடுத்தா பிடிக்கலைனா கூட ஒரு கர்டசிக்காகவாவது ஒன்னு எடுத்துப்பாங்க…..நீங்க என்ன இப்டி முகத்துல அடிச்ச மாதிரி பேசுறீங்க…?” என நேரடியாகவே கேட்டான்.

“எனக்கு அது பிடிக்கல….” அந்த புத்தகத்தைப் பத்தி தான் இவள் சொல்ல வந்தது…. ஆனால் அதைப் பத்தி இவள் எப்படி பேச?

பேச திறந்த வாயை மூடிக் கொண்டு மீண்டும் வெளியே பார்த்தவள்….”இங்க எதாவது டேக்‌ஸி புக் செய்ய முடியுமா…என்னை அனுப்பிவிட்டுடுங்க……” என கட்டளை தொனியில் கடுகடுத்தாள்.

கண நேர அமைதிக்குப் பின்… “சரி எல்லோருக்கும் எல்லோரையும் பிடிச்சுடாது….உங்களுக்கு என்னை பிடிக்கலை போல…இட்ஸ் ஓகே….எவ்ளவு சீக்கிரமா முடியுமோ அவ்ளவு சீக்கிரமா உங்க ரூம்க்கு போய் ட்ராப் பண்றேன்….. “

என்பதை இறுதி முடிவு போல் சொன்னான் அவன்…

என்னவென புரியவில்லை இவளுக்கு அவனது இந்த பதிலும் வலி செய்தது……ஒரு தவிப்பு….

‘ஹெல்ப் பண்ணவனை நோஸ்கட் செய்றமோ…?’ என. ஆனாலும் எதையும் சொல்ல இவளுக்கு முடியவில்லை…..மௌனமாகவே அமைந்தது அடுத்த நீண்ட பயணம்.

நேரம் செல்ல செல்ல என்னவென தெரியவில்லை….ஃப்ளைட்ல சாப்பிட்ட சாப்பாடுக்குப் பின் இன்னும் இவள் தண்ணீர் கூட அருந்தவில்லை…..

ஃப்ளைட்டில் ஏனோ தூக்கமும் வந்திருக்கவில்லை….அதெல்லாம் சேர்ந்தோ என்னவோ

ஏதோ அடைத்துக் கொண்டு வருவது போல்  ஒரு உணர்வு…. கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள்….. காரில் ஏசி முழு எஃபெக்டில் இருக்கும் போதும்…. வியர்க்க தொடங்கியது போல்  இருந்தது இவளுக்கு….

அவனிடம் என்னவென சொல்லி என்ன உதவி கேட்க? அதோடு அவனிடம் பேசுவதாவது? சமாளித்துவிடலாம்…தூங்கிட்டா சரி ஆகிடும்….இப்டி இவள் முயன்று கொண்டிருக்க….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.