(Reading time: 36 - 72 minutes)

ஹான்??!!! என்றிருக்கிறது இவளுக்கு…..ஆனால் ஷியா இவளை இழுக்காத குறையாக தள்ளி இழுத்து கிளம்ப வைத்தாள்.

அவன் சொன்ன படியே அடுத்த ஒரு மணி நேரத்தில் இவள் திருச்சி ஏர்போர்ட்டை அடையும் போது ஸ்டூடண்ட் லோன் ஏற்கனவே சேங்க்ஷனாகி இருந்தது.

நேஷன் க்ரூப்ஸின்  பிஸினஸில் பேங்கிங்கும் ஒன்று என அவளுக்கு அன்றுதான் தெரியும்…..இவள் வீடு தேடி பேங்கிலிருந்து ஆள் வந்து அரை மணி நேரத்திற்குள் அனைத்தையும் முடித்து கொடுத்திருந்தனர்….

வர்ஷன் தான் பணம் தருகிறேன் என சொல்லி இருந்தால் நிச்சயமாக இவள் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டாள்……ஆனால் இதை அவளுக்கு மறுக்க தோன்றவில்லை….. எப்படியும் திருப்பி செலுத்தப் போகிறாள்தானே…

இந்த உதவியை ஏற்றுக் கொண்டாலும் அடுத்து இவள் வர்ஷனோடு இயல்பாக பேசினாள் என்று இல்லை….  அப்படி பேசினால் முன்பை விட இப்போது  இன்னுமே தவறாக படுமே…. பணத்துக்காக பழகுவது போல் தோன்றும் தானே….

ஆக இந்த முறை இவள் யூஎஸ் திரும்பும் போது வர்ஷன் இவர்களோடு வந்தாலுமே….இவள் அவனிடம் பேசவே இல்லை….அடுத்தும் அவனோடு எந்த தொடர்பிலும் இல்லை….

ஆனால் அடுத்து இரண்டு மாதங்களாக இவள் அவன் வகையில் உருண்டு கொண்டு வந்தாள் உள்ளுக்குள் என்பது உண்மை…. காரணம் லோனை திருப்பி செலுத்திவிடுவாள் தான்…ஆனா இங்கிருந்து வீட்டிற்கு போன டிக்கெட் செலவு அவனுடையதாயிற்றே…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம். அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்... 

அதை இவள் எப்படி முயன்று சேமித்தாலும் கொடுக்க முடியுமென்று தோன்றவில்லை….

அந்த சூழலில்தான் இவளுக்கு அப்படி ஒரு ஆஃபர் கிடைத்தது….ஒரு எஜிப்டாலஜி ரிசெர்ச்சில் ஜெனிடிக் அனாலிசிஸிற்கு இவளை அழைத்திருந்தனர்.

மூன்று வாரம் எகிப்தில் தங்கி வேலை…… அடுத்து அதை இவள் இங்கிருந்து தொடரலாம். உடனடியாக இதை ஏற்றுக் கொண்டவள் மறுவார இறுதியில் எகிப்தின் தலைநகரம் கைரோவில் போய் இறங்கி இருந்தாள்.

பூர்விக எகிப்தியர்கள் நைல் நதி அருகில் பல ஊர்களில் இன்று வெவ்வேறு இனமாக  பரவி, பிற மக்களோடு கலந்து இருக்கின்றனர் என நம்புகின்றனர் சில வரலாற்று வல்லுனர்கள்…..

அதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க அந்த பகுதி  மக்களின் ஜீன்களை ஒப்பிட்டு எந்த இனமெல்லாம் சகோதர சமூகத்தவர்கள்…. அவர்களில் எந்த இனத்துடையதெல்லாம் பதபத்தப்பட்ட பூர்விக எகிப்திய மம்மிகளின் ஜீன் களோடு ஒத்துப் போகிறது என ஒப்பிட்டு கொடுக்க வேண்டும் இவள்.

அன்று முதல் நாள் அந்த லேபிற்கு சென்றாள். அது தான் இவள்  வேலை செய்யவேண்டிய இடம்…. கை நிறைய காகித கற்றை இவளிடம் கொடுக்கப்பட….. “இத  படிங்க பேசிக் ஐடியா கிடைக்கும்….நாளைக்கு நீங்க சேம்பிள்ஸை ஹேண்டில் பண்ணலாம்” என சொல்லி இவளை அனுப்பி வைத்தனர்.

அதோடு “நம்ம ரிசெர்ச் டீம் கூட லோகஷனையும் ஒரு விஸிட் செய்ங்க….. நீங்க அங்க போய்ட்டு வர்றதுக்கு அரேஞ்ச் செய்துறுக்கோம்…. லன்சுக்கு அப்றம் ரெடியா இருங்க…..” என்ற இன்ஸ்ட்ரெக்க்ஷன் வேறு…

அப்படி இவள் மதியம் கிளம்பி, தன் டீமான 6 ஆண்கள் 3 பெண்களுடன்  இவர்களை  பிக் அப் செய்ய வந்த இரண்டு டொயோட்டா 4ரன்னர்களின் இரண்டாவதாய் நின்றதன் கதவை திறந்து கொண்டு ஏறும் போது தான் கவனிக்கிறாள்…..ட்ரைவர் சீட்டில் வர்ஷன்….

ஹான்ன்ன்ன்???!!!! சமீப காலமாக அவனை வெகு அடிக்கடி காட்சி பிம்பமாக பார்க்கிறாள் தான்…….ஆனாலும் இது ரொம்ப தத்ரூபமா இல்ல…?

“ நீ பார்ட் டைம் ஜாபுக்கு வந்திருக்க மாதிரி நானும் பார்ட்டைமா இங்க டிரைவர் வேலைக்கு வந்துறுக்கேன்….” அவன் தான்.

ஒரு கணம் என்ன சொல்லவென யோசித்தவள் எதுவும் சொல்ல வேண்டாம் என முடிவு செய்து ஏறி அமர்ந்து கொண்டாள். எப்படியோ எங்கேயோ இவளுக்குள் ஒருவாறு பிசைந்து கோண்டு இருந்த ஒன்று இவனைக் காணவும் சென்று செட்டிலாகியது.

அடுத்தும் மௌனமாகவே பயணம் தொடர்ந்தாலும்……  இவன் இங்க எதுக்கு வந்தான்….?? என்ற கேள்வி இவளை பார்ட் டைமில் பந்தாடியது…. மீதி நேரம் அவன் இவள கவனிக்றானா என கவனிப்பதில் கழிஞ்சு போச்சே…..

 பயணம் பாலை வனத்திற்குள் தொடங்கியது…. ஒரு கட்டத்தில் காரைவிட்டு இறங்கி ஒரு பழையகால கட்டட இடிபாடை குடைந்தெடுத்தனர் மக்கள். இவளுக்கு அங்கு பெரிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதால் ஒரு நேரத்திற்கு மேல்….வெளியே பாலைவன மணலில் நடக்க ஆரம்பித்தாள்.

மாலை மயங்கிக் கொண்டிருந்ததால் மனதை மயக்கியது பாலை மண். இன்னும் இருள் பரவ தொடங்கவில்லை எனினும்….. .முகம் காட்டியது முக்கால் மதி…..

பார்த்த இவள் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு, கண் மூடி அந்த நேர ரம்யத்தை சுகித்தாள். இப்பொழுது இவள் அருகில் அரவம் உணர கண் திறந்து பார்த்தால் அவன்….

ஒரு கணம் சுக சுகமாய் ஒரு பரவல் இவள் உள்ளுக்குள்…. மறு கணம் தலையை சற்றாய் உதறிக் கொண்டவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.