(Reading time: 15 - 29 minutes)

22. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

தி தூங்குவதையே பார்த்துக் கொண்டிருந்த பிரயுவிற்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை.  ஆதி முழுவதுமாக வேலையை விட்டு விட்டானா ? மேலே என்ன செய்ய போகிறான் என்ற நிறைய கேள்விகள் எழுந்த போதும் அவனின் உறக்கத்தை கலைக்க மனம் வரமால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினாள்.

ஏனோ அவன் இங்கே வந்தது பற்றி தன் மாமியார் மனதில் என்ன ஓடுகிறதோ என்று கவலை வந்தது. அவளுக்கு புரிந்த விஷயம் ஆதிக்கு வீடு விஷயமாக கமிட்மென்ட் இருக்கிறது என்று. ஏதோதோ எண்ணங்கள் மனதில் குழம்ப அவள் உறங்குவதற்கு வெகு நேரமாகிவிட்டது.

மறுநாள் காலை சற்று தாமதமாக எழுந்த ப்ரயு, ஆதியை பார்க்க அவனோ அடித்து போட்டார் போல் உறங்கி கொண்டிருந்தான். இத்தனை அலுப்பா.. என்று எண்ணியவாறு வழக்கம் போல் ஆபீஸ் கிளம்பினாள்.

அவள் வழக்கம் போல் கிளம்பவும், ஆதியின் அம்மா அவளை பார்த்து,

“ஏன் ப்ரத்யா? ஆதி வந்திருக்கிறானே ? நீ லீவ் போடவில்லையா?” என்று கேட்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

“இல்லை அத்தை. அவர் தீடிர்னு வந்திருக்கார். நான் உடனே லீவ் போட முடியாது. வேலைகள் இருக்கு. அதோட இனிமே அவர் இங்கேதானே இருக்க போறார்.. அதனால் அப்புறம் பார்த்துக்கலாம்.” என்று கூறி விட்டு கிளம்பி விட்டாள்.

வெளியே வந்த பிறகு தான் அவளுக்கு தோன்றியது தான் இன்னும் ட்ரைனிங் போகும் விஷயத்தை யாரிடமும் சொல்ல வில்லை என்று. சரி பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

ஆதியோ கண்ணே திறக்க விருப்பம் இல்லாமல் தூங்கி கொண்டிருந்தான். அன்று மதியம் எழுந்தவன் குளித்து சாப்பிட வந்தான்.

அவன் அம்மா அவனுக்கு சாப்பாடு போட, சாப்பிட்டுக் கொண்டே

“ப்ரயு எங்கே அம்மா ?”

“அவள் வேலைக்கு போய்விட்டாளே. நான் கேட்டதற்கு தீடின்னு லீவ் எடுக்க முடியாது என்று சொன்னாள்”

“அதுவும் சரிதான் ... அவள் இப்போ லீவ் போட வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்” என்று மீண்டும் தூங்க போய் விட்டான்.

ப்ரயு வழக்கம் போல் வீடு திரும்பும் போதும் ஆதி தூங்கிதான் கொண்டிருந்தான். அவள் தன் மாமியாரிடம்,

“என்ன அத்தை ? அவர் எழுந்திருக்கவே இல்லியா?”

“இல்லை.. மதியம் எழுந்து சாப்பிட்டு விட்டு தூங்குகிறான். அவ்ளோ என்ன அலுப்போ?”

“ஹ்ம்ம். தெரியவில்லை அத்தை. இப்போ நைட் நாம சாப்பிட்டு அவருக்கு ரூம்க்கு எடுத்துட்டு போய்டறேன்..’ என, அவரும் சரி என்றார்,

அவள் தங்கள் அறைக்கு சென்று அவனுக்கு சாப்பாடு கொடுக்க எழுப்ப, அவனுக்கு உடல் சுட்டது, claimate change ஒத்துக் கொள்ளாமல் ஜுரம் வந்தது போல் இருந்தது,

மெதுவாக அவனை எழுப்பி இட்லி சாப்பிட வைத்து, மாத்திரை கொடுத்தாள். அவனுக்கு குணமாக இரண்டு நாட்கள் ஆகியது.

ஆதியின் அம்மா தான் அவனை பார்த்துக் கொள்வதாக கூறவே, ப்ரயு  ஆபீஸ் சென்று வந்தாள்.

ஆதி வந்திருப்பதை வித்யாவிற்கு சொல்லியிருந்தார் ப்ரயு மாமியார். இருந்தாலும் அவன் உடம்பு சரியில்லாததால், அவள் இப்போ வர வேண்டாம் என்றும், இரண்டு நாட்கள் கழித்தும் வந்து பார்க்க சொன்னார்.

பிரயுவிற்கு அவள் பெற்றோரிடம் ஆதி வந்ததை சொல்ல வேண்டும் என்று கூட தோன்றவில்லை. அவளுக்கு ட்ரைனிங் முடியும் நேரம் ஒரு evaluation இருப்பதால் மிகவும் பிஸியாக இருந்தாள்.

ஆதிக்கு புதன் கிழமை மதியத்திற்கு மேல்தான் கொஞ்சம் கண்ணை திறக்க முடிந்தது, மெதுவாக அவன் குளித்து வர ஜெட்லோக் ஓரளவு சரியான மாதிரி இருந்தது.

அன்று மாலை சற்று இலகுவாக ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான், அவன் அம்மாவும் தன் பேரனை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார். பேசி கொண்டே நேரத்தை பார்க்க மணி ஏழரை என்றது,

“என்னம்மா... ப்ரயு இன்னும் காணோம்?”

“தெரியலையே .. .லேட் ஆகும் என்றால் போன் செய்து விடுவாளே? எதற்கும் நீ போன் போட்டு பார் “ என்றபடி இரவு உணவு வேலை பார்க்க போனார்.

ஆதி முதலில் பிரயுவின் செல்லிற்கு அடிக்க, அது ரிங் போய்க் கொண்டிருந்தது. அவன் இரண்டு முறை ட்ரை செய்துவிட்டு, hospital நம்பர் அடிக்க, அங்கே வரவேற்பில் இருந்தவள் புதிதாக வேலைக்கு சேர்ந்தவள். அவள் வேலைக்கு சென்ற நாளில் இருந்து பிரயுவை பார்த்தது இல்லை. அதனால் ஆதி பிரத்யுஷா இருக்கங்களா என்று கேட்கவும் அப்படி யாரும் இங்கு இல்லை என்று சொல்லி விட்டாள்.

ஆதி குழம்பி கொண்டிருக்கும் போதே ப்ரயு வந்து விட, அவளிடம் எதுவும் கேட்காமல் விட்டான். அவள் ரெப்ரெஷ் ஆகி , சமையல் அறைக்குள் சென்று தன் மாமியர்க்கு உதவ சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.