(Reading time: 15 - 29 minutes)

ப்ரயு பதில் சொல்லும் முன்,

“எதை தான் சொல்கிறாள் உங்கள் பெண்? மூன்று மாதமாக ஆபீஸ் விட்டு வேறு இடத்தில ட்ரைனிங் போகிறாளாம்.. இதையும் யாரிடமும் சொல்லவில்லை.. இன்னும் என்ன என்ன மறைத்து இருக்கிறாளோ..?” என்று ப்ரயு மாமியார் அவள் பெற்றோரை .. கேள்வி கேட்டார். அவருக்கு ப்ரயு ஹால் இல் படுப்பது தெரிந்தது. தன் மகனே திருமணம் ஆகி மூன்று வருடங்கள் கழித்து வந்து இருக்கிறான். இவள் இப்படி இருக்கிறாளே என்ற கோபம்.

அதற்குள் ஆதி “அம்மா.. சும்மா இருங்க..” என்று அதட்ட,

பிரயுவின் அம்மாவோ அவளை அடித்து விட்டார்..

“ஏன் ப்ரத்யா.. இதுதான் நீ எங்களுக்கு வாங்கி கொடுக்கும் பேரா? உனக்கு என்ன அத்தனை துணிச்சல்?” என்றார்.

அவளை அடித்ததை பார்த்து “அத்தை.. என்ன இது.. ? அவளிடம் பொறுமையாக கேட்கமால் ... ? “ என்று அவளுக்கு சப்போர்ட் செய்து பேசினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

அவள் அம்மாவோ “பார்த்துக் கொள்.. இப்படி பட்ட மனிதரை ஏன் அவமரியாதை செய்கிறாய்?” என்று மீண்டும் வினவ,

ஆதி சப்போர்ட் செய்து பேசும் போது அவனை பார்த்த ப்ரயு அவள் அம்மா அவளிடம் கேள்வி கேட்பதற்கு எந்த பதிலும் சொல்லாமல்,

“எனக்கு வேலைக்கு நேரம் ஆகிறது.. இப்போ என்னால் பதில் சொல்ல முடியாது.. அப்புறம் நான் பேசுகிறேன்” என்று விட்டு சென்று விட்டாள்.

பிரயுவின் பெற்றோர் இப்போது அதிர்ந்தனர்.. அவளை அடித்ததற்கு கோபப்படவும் இல்லை.. அதற்கு வருத்தமும் படவில்லை.. அடிச்சாச்சா.. அடுத்து என்ன.. என்ற மாதிரி கிளம்பவும், என்ன சொல்ல என்று தெரியவில்லை.

ஆதியும் என்ன இவள் இப்படி இருக்கிறாள்...என்று வேதனை பட்டான்.. பிறகு அவன் ஹால் இல் இருந்தவர்களை பார்த்து

“மாமா.. இதை இப்போதைக்கு விட்டு விடுங்கள்.. அவளை நான் பார்த்துக் கொள்கிறேன்.. என் மேல் தான் தவறு.. நானாவது உங்களிடம் பேசியிருக்க வேண்டும்.. “

“இல்லை .. மாப்பிள்ளை.. உங்கள் மேல் எதுவும் வருத்தம் இல்லை.. ப்ரயு தான்.. சரி நீங்கள் சொல்வது போல் கொஞ்சம் விட்டு பிடிக்கலாம்.. நாங்கள் கிளம்புகிறோம்..”

ஆதியும் வேலைக்கு செல்ல, அங்கே அவன் நண்பன் திருமண நாள் வாழ்த்துக்கள் சொன்னவன்,

“ஏண்டா.. நீதான் இன்னிலேர்ந்து லீவ் ன்னு சொன்னியே? அப்புறம் வந்துருக்க ?”

“இல்லை டா.. அவளுக்கு ஒரு ட்ரைனிங் போயிட்டு இருக்கு . . அது முடிஞ்சதும் லீவ் போடலாம் நு இருக்கேன்..”

ஆனால் ஆதியின் முகம் தெளிவு இல்லாததை கண்ட அவன் நண்பன்,

“என்னடா.. வேற ஏதோ பிரச்சினை இருக்கிற மாதிரி இருக்கு? “

ஒரு நிமிடம் யோசித்த ஆதி, பிறகு பிரயுவின் செயலுக்கு காரணம் அவனோடு பேசும்போது எதாவது புரிகிறதா என்று பார்க்கலாம் என்று அவனிடம் ஊரிலிருந்து வந்த பிறகு நடந்ததை சொன்னான்.

அங்கே பிரயுவோ, மனதில் ஆதியை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள். தான் செய்தது சரியா.. தவறா என்ற யோசனையில் இருந்தாள்,

ஆதி அவன் நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது போன் வர, எடுத்து பேசியவன் முகம் மாறியது..

என்ன என்று வினவிய நண்பனிடம் “என் மாமனார் தீடிர் என்று நெஞ்சு வலியில் துடித்து hospital இல் அட்மிட் செய்து இருக்கிறார்களாம்.. இப்போ பிரயுவை அழைத்துக் கொண்டு போக வேண்டும்” என்று கிளம்பினான்.

பிரயுவின் மொபைல்க்கு அடித்தவன் , நல்ல வேளை அப்போ லஞ்ச் என்பதால் செல் ஆனில் இருக்கவே அட்டெண்டு செய்து பேசினாள் ப்ரயு.

உடனே மேலதிகாரியிடம் சொல்லி விட்டு கிளம்பி வர, ஆதியும் வந்து அவளை அழைத்து சென்றான்.

இவள் வேலை செய்கின்ற hospital என்பதால் , நேராக ஐ.சி.யூ விற்கு அவள் சென்றாள்.

அங்கே பிரயுவின் தங்கைகள் அவர்கள் கணவர்களோடு வந்திருந்தனர்.

அப்போதுதான் சகலைகள் மூவரும் நேரில் சந்திக்கின்றனர் என்பதால் கை குலுக்கி விட்டு, அவர்களிடம் டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்டு கொண்டிருக்க,

பிரயுவின் தங்கைகளோ

“அக்கா.. நீ செய்வது உனக்கே நல்ல இருக்கா? உன்னால் தான் அப்பா இப்படி ஆகி விட்டார்’ என்று குறை கூற,

ப்ரயு அவள் அம்மாவை பார்த்தாள்.. அவள் அம்மா அப்பாவிற்கு தீடிர் என்று நெஞ்சு வலி வர என்ன காரணம் என்று கேட்டவர்களிடம் காலையில் நடந்தை சொல்லியிருக்க, அவர்கள் இருவரும் பிரயுவின் மேல் குற்றம் சுமத்தினர்.

நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கு , என்னவோ தவறாக பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.