(Reading time: 15 - 29 minutes)

வள் அதற்கும் பதில் சொல்லாமல் இருக்கவே, ஆதியால் ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை. சற்று நேரம் ஜன்னல் ஓரம் நின்று விட்டு வந்தவன், பிறகு

“சரி . . எப்போ ட்ரைனிங் முடியும்.. ?’

“அவள் இன்னும் ஒரு பதினைந்து நாள் ஆகும் ..”

“சரி.. அதற்கு பிறகு லீவ் போடுகிறாயா?”

அவள் வெறுமனே தலையாட்டவும், அவளை படுக்க சொன்னான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்... 

“இல்ல.. எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு.. நான் அத ஹால்லே உட்கார்ந்து பார்க்கறேன்..  நீங்க படுங்க..”

அவள் செல்லவும், ஆதி வெகு நேரம் ஏன் ப்ரயு இப்படி செய்தாள்? அவள் அப்படி பட்டவள் இல்லையே..? கோபம் வந்தால் கூட இப்படி அலட்சியம் செய்ய மாட்டாளே  என்று தோன்றியது..

அதே சமயம்.. அவளோடு இருந்திருந்தால் தான் நமக்கு தெரியும்...இந்த மூன்று வருடத்தில்.. முப்பது நாட்கள் கூட நாம் சேர்ந்து இல்லாதப்போ என்ன புரிஞ்சிக்க முடியும் என்று எண்ணினான்.

சரி அவள் ட்ரைனிங் முடியட்டும்.. பார்க்கலாம் என்று முடிவு செய்தான்.

பிரயுவின் மாமியர்க்கு பிரயுவின் மேல் கோபமே.. ஆனால் ஆதிக்காக அதை காட்டாமல் அடக்கி கொண்டார்.

ப்ரயு அதற்கு பின் ஆதியின் அருகில் வருவதில்லை.. அவனிடம் பேசுவதும் இல்லை. காலையில் அவனுக்கு தேவையானதை எடுத்து வைத்து விட்டு செல்பவள், மாலையில் அவன் வந்த பின்னே தான் அவள் வருவாள்.

அதோடு இரவு உணவு முடிந்த பின் வேலை என்று சென்று விடுவாள். அவள் எப்போ தூங்குற, எங்கே படுக்கிறா என்று எதுவும் அவனுக்கு தெரியவில்லை.

நாட்கள் நகர , அன்று அவர்களுக்கு மூன்றாவது வருட திருமண நாள்.. ஆதி இதை மனதில் வைத்துதான், honeymoon போல் பிளான் செய்திருந்தான்.. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இத்தனை நாள் எதுவும் பிரயுவிடம் காட்டா விட்டாலும், இன்று அவனின் ஏமாற்றம் அதிகமாக இருந்தது.

முதல் நாள் இரவு அவள் வருவாள் என்று வெகு நேரம் விழித்து இருந்தும் அவள் வராததால், ஹால் இல் சென்று பார்த்தான். அங்கேயே அவள் சோபாவில் படுத்து இருக்கவும் , மிகவும் கோபமாக இருந்தது. அவளை எழுப்ப எண்ணி அவள் அருகில் சென்றவன் , அவள் அசந்து தூங்குவதை பார்த்து அப்படியே சென்று விட்டான்.

அன்றைக்கு காலையில் அவள் வழக்கம் போல் எல்லாம் எடுத்து வைத்து விட்டு சென்று இருக்கவும், கோபத்தை கட்டுபடுத்தி அவளை ரூமிற்கு அழைத்தான்.

அவள் வரவும், அவள் முகத்தையே பார்த்தவன், அவளை இழுத்து அணைத்தான். அதோடு நிற்காமல்

“ஹாப்பி வெட்டிங் anniversary டே கண்ணம்மா .. “ என்று அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான்.

ப்ரயுவும் அந்த நெருக்கத்தில் தன்னை மறந்தவளாக அவனோடு ஒன்றினாள். அவன் ஊரிலிருந்து வந்த தினத்தில் இருந்து அவனிடம் நெருங்க கூடாது என தனக்குள் வேலியிட்டு கொண்டிருந்தவள், இன்று அவனின் அருகாமையில் தன்னை மறந்தாள்.

அவளின் மனதை படித்த ஆதி,

“ஏன் ப்ரயு.. இன்னிக்கு எங்காவது வெளியில் போகலாமா? சீக்கிரம் வருகிறாயா?”

அவளுக்கு சரி என்று சொல்ல ஆசைதான் .. ஆனால் அன்று நிஜமாகவே வர லேட் ஆகும்.. அதோடு அவள் சொல்லாமல் விட்டது .. அன்றோடு அவள் ட்ரைனிங் முடிகிறது. அவள் எதிர்பார்த்ததை விட ஐந்து நாட்கள் முன்னதாகவே முடிகிறது.

ஆனால் அதை சொல்லாமல்,

“இல்ல.. இன்னிக்கு வழக்கத்தை விட லேட் ஆகும்..” என்று விட்டாள்.

ஆதி கோபத்தில் அவளை விட்டு விலகியபடி, பாத்ரூமிற்கு சென்று விட்டான்.

அவன் அலுவலகம் கிளம்பி வரும் நேரம், பிரயுவின் அம்மா , அப்பா வின் குரல் கேட்க, வரவேற்பறைக்கு வந்து

“வாங்க .. அத்தை.. மாமா “ என்று வரவேற்றான்,

அவன் வந்ததே தெரியாமல் இருந்தவர்கள் திகைத்து எழுந்து நின்றார்கள்,

“மாப்பிள்ளை.. நீங்க எப்போ வந்தீங்க..? யாரும் சொல்லவே இல்லியே ?”

அவர்களுக்கு மேல் திகைத்து நின்றான் ஆதி.. தானே தீடிர் என்று வந்தோம்.. அவர்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்.. தான் தான் அவர்களை பார்க்க சென்றிருக்க வேண்டும் .. அட்லீஸ்ட் போனிலாவது பேசியிருக்க வேண்டும்.. தன் தவறு புரிந்தவனாக,

“சாரி.. மாமா.. அத்தை. .நான் வந்து பத்து நாட்கள் ஆகிறது. தீடிர் என்றுதான் வந்தேன்.. “

“ஏன். .ப்ரத்யா.. நீயாவது சொல்லியிருக்கலாம் இல்லியா..” என்று அவள் அப்பா கேட்க,

அவள் அம்மாவோ, “எங்கே.. எங்களோடு போனில் சாதாரணமாக பேசுவதுதான் கிடையாது.. இதை கூட சொல்ல முடியாதா? அவ்ளோ என்ன கோபம் உனக்கு ?”

ஆதிக்கு இது முற்றிலும் புதிய செய்தி.. அவள் அவனோடு மட்டும் தான் கோபத்தில் இருக்கிறாள் என்று நினைத்து இருந்தவன், அவள் பெற்றோர் மீதும் கோபமா என்று எண்ணி திகைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.