(Reading time: 15 - 29 minutes)

தியும் அங்கேயே வர,

“சாரி அத்தை... இன்னிக்கு கொஞ்சம் வேலை இருந்தது. அதான் லேட்.” என்றாள். ஆதியிடம் திரும்பி,

“இப்போ உங்களுக்கு பரவா இல்லியா?”

“ஹ்ம்ம்.. ஓகே ப்ரயு.. “ என்றவன் மேலே கேட்கும் முன்னே,

ஆதியின் அம்மா அவனிடம் “ஆதி.. நான் கேக்கணும் நினைச்சேன்.. எத்தனை நாள் லீவ் போட்ருக்க.. ? இங்கே எப்போ join பண்ண போற?”

அதற்குள் டின்னெர் ரெடி ஆகி விட்டதால், சாப்பிட சென்றனர்.

ஆதியும் அவன் அம்மாவும் அமர, ப்ரயு பரிமாற சென்றாள். ஆதி அவளை தடுத்து,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

G Adarsha's "My really really really really really REALLY weird story" - Come let us sneak peek into the mind of a ten year old kid...

படிக்க தவறாதீர்கள்... 

“நீயும் உட்கார் ப்ரயு”

“இல்லை.. நீங்க சாப்பிடுங்க .. நான் அப்புறம் சாப்பிடுறேன்”

“ஏன்.. இப்போவே மணி எட்டரை ஆச்சு. மூணு பேரும் சாப்பிடலாம்.”

அவன் ரெண்டு முறை சொல்லவே, அவளும் அமர்ந்தாள்.

அவர்கள் சாப்பிட்டு முடித்து, ஹால் இல் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, மீண்டும் அவன் அன்னை கேட்கவே,

“இல்லமா.. நாளைக்கு ஆபீஸ் போகணும். அடுத்த வாரம் புல்லா லீவ் போட போறேன். ப்ரயு.. நீயும் லீவ் சொல்லிடு”

ப்ரயு “லீவ் எதற்கு “ என,

“நாம ரெண்டு பேரும் வெளியூர் போறோம்.. (தன் அம்மா இருப்பதால் honeymoon என்று சொல்லாமல், வெளியூர் என்றான்..”

“அத்தை .. என்ன பண்ணுவாங்க “

“நீ சொல்றதும் சரிதான் ஆதி.. நான் கூட ஊர் பக்கம் போயிட்டு ஒரு மாசம் கழிச்சு வரேன்.. நீயும், பிரத்யாவும் போயிட்டு வாங்க..”

“இல்ல பா.. நான் லீவ் போட முடியாது .. கொஞ்சம் வொர்க் போயிட்டு இருக்கு “

ஆதியின் அம்மா, “ஏன் இப்போதான் தீடிர்னு போட முடியாது..  அடுத்த வாரம்னா முன்னாடியே சொல்லி கேட்கலாம் லே..” என்று கேட்க,

“இல்லை.. ஒரு ட்ரைனிங் போயிட்டு இருக்கேன்.. அது முடியற வரை லீவ் போட முடியாது “

“ஏன்.. உங்க சீப் டாக்டர் கிட்ட நானே கேட்கறேன்.. ப்ரயு” என்றான் ஆதி.

“இல்ல.. இப்போ ட்ரைனிங் அங்கே இல்ல.. வேற இடத்திலே.. .மூணு மாசமா அங்கே தான் போயிட்டு இருக்கேன்”

ஆதியின் அம்மா திகைத்து “மூணு மாசமாவா? ஏன் யார்கிட்டயும் சொல்லல...?” என்றார்.

ஆதிக்கு திகைப்பாக இருந்தது. அவள் தன்னிடம் பேசாவிட்டாலும் தன்னை விட்டு விலகுவாள் என்று அவன் எண்ணவில்லை. ஆனால் அவன் அம்மா கேட்டவுடன் ப்ரயு பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருக்கவும், அவளை ஒரு முறை பார்த்தவன்,

“அவ என்கிட்டே சொன்னாம்மா.. ஆனால் அது முடிஞ்சிருக்கும்நு நான் நினைச்சுட்டேன்,.”

ஆதியின் அம்மாவிற்கு புரிந்தது.. தன் மகன் சமாளிக்கிறான் என்று.. அவருக்கு கோபம் வந்தது.. ஆனால் சரி அவர்களே பேசிக் கொள்ளட்டும் என்று எண்ணியவராக,

“ஏன்.. எங்கிட்ட சொல்ல கூடாதா? இன்னிக்கு மாதிரி லேட் ஆனாலோ, இல்லை வேற எதுவும் பிரச்சினை என்றால் நான் உங்க hospital போன் பண்ணினால், நமக்குதானே அசிங்கம்.. “ என்று கண்டித்தவர்,

“சரி  ரெண்டு பேரும் போய் படுங்க.. “ என்று சென்று விட்டார்.

இருவரும் தங்கள் அறைக்கு வரவும், ப்ரயு பேசாமல் இருக்க, ஆதிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

“ஏன்மா. எங்கிட்ட சொல்லல ?’

அவள் அமைதியாகவே இருக்கவும், “ப்ளீஸ்.. மனசுலே என்ன நினைக்கிறன்னு சொல்லு..?’

சற்று யோசித்தவள் “ட்ரைனிங் ஆபீஸ் நேரத்தில் தான்... அதோட.. நீங்க தீடிர்னு வருவீங்கன்னு நினைக்கல.. எனக்கு ஒரு change வேணும் நு நினைச்சேன்.. அதோட எங்க hospital இதுக்கு அப்புறம் பெரிய பொறுப்பு ஒன்னும் தராங்க.. “

“நீ போறத பத்தி நான் எதுவும் சொல்லல.. ஆனால் என்கிட்ட ஏன் சொல்லலன்னுதான் கேட்கிறேன் “ என்றான்.

“அது ஏன் சொல்லணும் நு தோணிச்சு..”

‘ஏன்.. “

“ஏதோ கோபம் “

“உனக்கு என் மேல் கோபம் வந்து கிட்டத்தட்ட எட்டு மாசத்துக்கு மேலே ஆகுது.. நீ இப்போ ட்ரைனிங் மூணு மாசமா தான் போற.. இந்த மூணு மாசத்துலே ஒரு நாள் சொல்லி இருக்கலாம் லே.. அட்லீஸ்ட். ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கலாம் லே.. “

பிரயுவிற்கு தெரியும் தான்.. அவள் இது பிரச்சினை ஆக வேண்டும் என்றுதான் சொல்லாமல் விட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.