(Reading time: 36 - 72 minutes)

தோ ஒரு ஆனந்த அலை இவளை அள்ளி சுருட்ட…..அவசியமற்ற ஒரு அவஸ்தை இவள் அடி முடியை புரட்ட….

 “லேட்டாயிட்டு……லன்சுக்கு மீட் பண்ணுவோம் ஜிலேபி….நீ தான் எனக்கு ட்ரீட் தர்ற” என விடைபெற்றான் அவன்…

அப்ப முதல்ல கொஞ்சுனது கனவில்லையா என்ற புரிதலில் இவள் பே என முழிக்க….அதற்குள் கிளம்பிப் போயிருந்தான் அவன்….

அடுத்து இவள் தூங்க வெகு நேரம் பிடித்தது.

எங்க ட்ரீட் கொடுக்க என பலவித சிந்தனைக்குப் பின் மதியம் லன்ச் இவள் கைவண்ணத்தில் அவனுக்கு கொடுப்பது என முடிவு செய்து காலையிலிருந்து பார்த்து பார்த்து சமைத்துக் கொண்டிருந்தாள் விஜிலா….

வர்ஷனை இவர்கள் தங்கி இருக்கும் இந்த ஒற்றை அறை வீட்டுக்கே வரச் சொல்லியாகிவிட்டது…..

“லன்சுக்கு பிறகு என் கூட வெளிய வரும்தான இந்த  ஜிலேபி ?” என அவன் கேட்டதுக்கு சம்மதம் வேறு சொல்லி வைத்திருக்கிறாள்….

வொயிட்டில் கோல்டன் நிற ஜரி வேலை செய்த காக்ரா செட் அணிந்து……ஷேம்பு வாஷ் செய்திருந்த முடியை வொயிட் ஸ்டோன் மற்றும் முத்து நிற கிளிப்பால் சம் அப் சம் டவ்ண் செய்து விரித்துவிட்டு……அதற்கேற்ற இயர் ரிங்கை இவள் தேடிக் கொண்டிருக்கையில் தான் பார்வையில் பட்டது கட்டிலின் கால் பக்கம் விழுந்து விரிந்து கிடக்கும் பர்ஸ்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

குருராஜாஜனின் "உனக்காக மண்ணில் வந்தேன்" - Romantic fantasy love story

படிக்க தவறாதீர்கள்... 

வர்ஷனோடதாய் இருக்கும் என உணர்ந்து இவள் துள்ளலாய் குனிந்து எடுக்கும் போது இவள் கண்ணில் படுகிறது அதிலிருந்த அவன் ஃபோட்டோவும்…..அதன் அருகில் அவன் வைத்திருந்த இரண்டு காண்டம் சேஷேயும்….

அவனது டெபிட் கார்டிலிருந்து ட்ரைவிங் லைசன்ஸ் இன்னபிற என அனைத்தும் அது அவன் பர்ஸ்தான் என பறை சாற்ற….

மூச்சடைக்க…..முழு நொடிக்குள் மொத்தமாய் வியர்த்துப் போக…வெல வெலத்துப் போனாள் இவள்…

இப்படிப் பட்டவனோடு நட்பு பாராட்ட கூட இவளால் முடியாது…..இதற்குள் என்ன கனவெல்லாம் கண்டுவிட்டாள் இவள்….

வாய் வறள எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளோ….வர்ஷன் எண்ணை தொடர்பு கொண்டவள்….

எந்த காரணத்துக்காகவும் இன்னொரு டைம் நான் உங்களை பார்க்கவோ பேசவோ விரும்பலை……தயவு செய்து நீங்களா விலகிப் போய்டுங்க என்றவள்…அடுத்த ஒரு வாரத்துக்குள் முயன்று வேறு அறைக்கும் மாறிப் போய்விட்டாள்.

ஷியாவைக் கூட முடிந்த வரை தவிர்த்தாள்.

டுத்து அவள் வர்ஷனை சந்தித்தது ஏறத்தாழ 7 மாதங்களுக்குப் பின்பு…. அதுவும் மிக மிக துன்பமான சூழலில் இவள் துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்…..

விஜிலா அப்போதுதான் அவளது அண்ணன் வின்யத் திருமணத்திற்காக இந்தியா வந்துவிட்டு திரும்பி ஒரு வாரம் ஆகி இருந்தது….. அவளது அண்ணனிடமிருந்து அழைப்பு…..

“அப்பா இறந்துட்டாங்க விஜி….” என நேரடியாக இடியை தூக்கி இவள் தலையில் போட்டான் அவன்….. அடுத்தும் விஷயத்தை உட்கிரகிக்க கூட முடியாமல் மூச்சுக் காத்துக்காக தவித்துக் கொண்டிருந்தவளிடம், அதுவே சின்ன தகவல் என்பது போல்

“நீ இப்பதான வந்துட்டுப் போன…..இப்ப உனக்கு டிக்கெட் எடுக்க கூட பணம் இல்ல…. நீ எதாவது சேவிங்க்ஸ் வச்சுறுந்தன்னா அந்த பணத்துல வந்துட்டு போக முடியுமான்னு பாரு…மத்தபடி ரிஸ்க் எடுக்காத” என்றான்.

இவளுக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது….. அதாவது இவட்ட காசு இருந்தா மட்டும் வந்துட்டு போ என்கிறான்……

அப்படின்னா என்ன அர்த்தம்?.....

இவளது அப்பா எப்போதுமே தன் இரண்டு பிள்ளைகளிடமும் பாரபட்சம் காட்டியது கிடையாது…… வின்யத்திற்கு ஒன்று இவளுக்கு ஒன்று என இரண்டு வீடுகள் கட்டி வைத்திருக்கிறார்…..

அவனுக்கு தன் எலக்ட்ரானிக் ஷாப்பை கொடுத்திருக்கிறார்…. இவளுக்கு அதுக்கு சமாமான பணத்தை சிலவற்றை நகையாகவும் மீதியை பேங்கில் டெபாசிட்டாகவும் சேமித்திருக்கிறார்.

வின்யத்திற்கு படிப்பில் ஆர்வம் கம்மி….பிகாம் முடிக்கவே 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டான்…… ஆனால் இவள் அதில் நேர் எதிர்….

ஆக இவளுக்கான பங்கிலிருந்து இவள் விரும்பும் அளவு படித்துக் கொள்ள அனுமதி கொடுத்திருந்தார்…..மீதி பணம் இவள் திருமணம் மற்றும் எதிர் காலத்திற்கு என்பது அவர் திட்டம்.

இதை தவிர தன் தேவைக்கு என்று அப்பா கையில் ஒரு பெரிய தொகை சேமிப்பு உண்டு…எந்த சூழலிலும்  பிள்ளைகளிடம் பணத்திற்காக போய் நின்று விடக் கூடாது என்பதில் அவர் தீர்மானமாய் இருந்தவர்.

ஒரு வாரம் முன்பு  நடந்த திருமணத்தில் கூட இவள் நகைகளை அப்பா எடுத்து வந்து கொடுத்தார்…. இவள் அவருக்கு படு செல்லமல்லவா…..? தாயும் தந்தையுமாயும் இருந்து வளர்த்தவராயிற்றே….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.