(Reading time: 36 - 72 minutes)

ப்பொழுதுதான் கவனித்தாள்…..குழுவினரை விட்டு வெகு தூரம் வந்திருக்கிறாள்……வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்து தூரத்தை மறந்துவிட்டாள் போலும்…

இப்பொழுது இவனும் இவளும் மட்டுமாய் இங்கு….. வேகமாக திரும்பி குழுவினரை நோக்கி செல்ல தொடங்கினாள் விஜிலா…

“ஏய் ஜிலேபி நில்லு…” என்னதான் ஜிலேபி என கூப்பிட்டாலும் அவன் குரலில் இருந்தது கட்டளை….

இவள் அவனை திரும்பிப் பார்க்காவிட்டாலும் நடையை நிறுத்தினாள். அவன் இவளை நோக்கி நடந்து வரும் அதிர்வை உணர்ந்தாள்…. சட்டென அப்பொழுதுதான் அவளுக்கு அது உறைக்கிது….அதெப்படி மணலில் இதை உணர முடியும்…???!!!!

இவள் யோசித்த அதேவேளை இவளை பாய்ந்து பற்றியவன் “மூக்கை மூடிக்கோ” என்றபடி இவளை தன்னோடு ஒற்றை கையால் இறுகி அணைக்க….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்... 

எது என்ன….எங்கங்கயோ சறுகி…வழுகி..இடித்து….. எதற்குள்ளோ விழுந்தார்கள் இவர்கள்…..

இவளுக்கு மெல்ல மீண்டும் சுய நினைவு வந்து…… இவள் கண் திறக்கும் போது நிம்மதியில் கனியும் அவன் முகம் பார்வைக்குப் படுகிறது….

மெல்ல சூழ்நிலையை படிக்க முயன்றாள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் பெரு பரும் தூண்கள்…. கல்களால் கட்டப்பட்ட நீண்ட வளாகம்…அதில் அத்தனை அறைகள் வரிசையாய்… மம்மிகளை பதப் படுத்த பயன்படுத்தும் அறைகளைப் பத்தி படித்த ஞாபகம் வருகிறது…

இருந்த தீ பந்த வெளிச்சத்தில் இவ்வளவு தான் தெரிகிறது…. தரைக்கு அடியில் இருந்த ஏதோ பழங்கால கட்டித்திற்குள் விழுந்திருக்கிறார்கள் இவர்கள் என புரிய…..மிரண்டு போய் பார்த்தாள் இவள்.

“பயப்படாத….உள்ள காத்து வருது….அப்ப ஏதோ ஓபனிங் இருக்குது…..நம்மை தேடி டீம் ஆட்கள் எப்படியும் வருவாங்க…..இல்லைனாலும் நாளை வெளிச்சம் வரவும் வழி புரியும்……வெளிய போய்டலாம்…… இப்ப இருட்ல ட்ரைப் பண்ணா எதுவும் இன்னுமா நம்ம மேல சரிஞ்சுடக் கூடாது”

அவன் சொல்ல மனதிற்குள் ஒரு தெம்பு பரவ தைரியமாகவே தலையை ஆட்டி வைத்தாள்.

உண்மையில் இவர்கள் விழுந்த இடத்தில் மேல் பரப்பில் மணல் விழுந்து  தரையோடு தரையாகவே அது காட்சி அளிக்க…. ஆக அவர்கள் முழு மூச்சாக இரவு முழுவதும் இவர்களை தேடினாலும்  கண்டு பிடிக்க முடியவில்லை….

இதில் ஒரு கட்டத்தில் உள்ளே தீப்பந்தம் அணைந்து போக இன்னுமாய் மிரண்ட விஜிலா அடுத்து அவள் காலில் பாம்பு போல் ஏதோ ஊர்ந்து ஏறுவதை உணர்ந்த மறு நொடி…அருகில் இருந்தவனை பாய்ந்து அணைத்திருந்தாள்.

இவள் செயலுக்கு பதில் செயலாக “விஜி” என்றான் அவன் ஆறுதலும் கெஞ்சலுமான குரலில்.

“பயமா இருக்கு வர்ஷன்…” நடுங்க தொடங்கி இருந்தாள் இவள்.

“ஒன்னுமில்லமா….ஜஸ்ட் ஃப்யூ அவர்ஸ்…. வெளிய போய்டப் போறொம்… நீ உனக்கு பிடிச்ச எதப் பத்தியாவது பேசு…நேரம் போறதே தெரியாது…..”

அவன் சொன்னதை இவள் கடை பிடித்தாள்….ஏதேதோ இவள் பேச..அடுத்து அவன் பேச என….பொழுதும் விடிய…

பரவிய வெளிச்சத்தில் அப்போது தான் இவள் கவனித்தாள்…..இன்னும் கூட பயத்தில்  அவனை அணைத்த அணைப்பை இவள் விலக்கி இருக்கவில்லை….. அவனோ இவளை விலக்கவும் இல்லை……அதே நேரம் மெல்லியதாய் கூட அணைத்திருக்கவும் இல்லை ….

அடுத்து ஒரு மணி நேரத்தில் வெளிச்சம் உள்ளே பரவும் வழி கண்டு பிடித்து ….இவளுக்கு காலில் சற்று அடி பட்டிருந்தால் அந்த இடிபாடுகளின் வழியே கிட்ட தட்ட தூக்காத குறையாக தூக்கி வந்து வெளியே விட்ட வர்ஷன்….. அங்கு மற்றவர்கள் வந்து சேரும் போது மயங்கி இருந்தான்.

அங்கிருந்து பதற பதற மருத்துவமனை சென்றபின் தான் இவளுக்கு தெரியும்  வர்ஷனுக்கு இரண்டு இடத்தில் ஃப்ராக்சர் என…அத்தனை வலியில்…. அதை கொஞ்சமும் வெளிக்காட்டாமல்….. முழுக்கவும் இவளுக்காக மட்டுமாய் பார்த்திறுக்கிறான்….

அவன் கண் விழிக்கும் போது அருகில் காத்திருந்த இவள் அழுது கொண்டிருந்தாள்….

“என் ஃபேஸ் அவ்ளவு அசிங்கமாவா இருக்கு? பகல்ல பக்கத்துல பார்க்கவும் இப்டி அழுற…?” அவன்தான்.

முறைத்தவள் கண்களிலிருந்து அதையும் தாண்டி கொட்டுகிறது கண்ணீர்…

“சாரி வர்ஷன்…..உங்களைப் போய் தப்பா நினச்சுட்டேன்……” இவள் சொல்ல அவன் கண்களில் புதுமலர்ச்சி வந்து பரவுகிறது…

“எல்லாம் ஷியாவோட வேலை தான் இல்லையா…?” இவள் கேட்க ப்ரமித்தான் அவன்.

“எப்டி விஜி…?” என்ற அவன் கேள்வியில் கொட்டி கிடந்தது அத்தனை ஆச்சர்யம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.