(Reading time: 4 - 8 minutes)

நடபடி புத்தகம் கொண்டு வர சொல்லல்

{tooltip}கனலி{end-link} சூரியன்{end-tooltip}கடல் புக

காற்றோடு {tooltip}புள்{end-link} பறவை{end-tooltip} இல் புகும்

கன்மலை உச்சம்

பொழி நீர் விழ

கடுகி அது தரை தாழ பாயும்

அஃதொப்ப

நின்று நிமிர்ந்திட்டால்

நீள் பணி முடிந்திட்டால்

நில்லாது பாயும் இவன் மனம்

அவள் வசம்

நீளட்டும் பணியே

நீங்கட்டும் காதல் பிணியே

நினைந்திட்டான்

கொணர்க இவ்வேளை

நாட்டின் நடபடிகை ஏடு

விரிக என் முன் காரிய குறிப்பீடு

பணித்திட்டான் பணி சேவகனை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...  

தன்னை கொல்ல நடந்த சதி பற்றி அறிதல்

 

திறந்த ஏடு செப்பிய செய்தியில்

சிறந்ததாய் இருந்தது

செயல் அழிந்த சதியும்

அதில் இவன் பிழைத்த வகையும்

சிறிதாய் இருந்தது

சதி முறித்தவன் கதையே

 

{tooltip}செறுநர்{end-link}எதிரி {end-tooltip}உரை கேட்டு

சேவகர் இடம் சுட்டி

பகைவர் சதி தட்டி

தகையாய் தடுத்தவன்

மொர்தகன்

என்பதகற்றி ஏதுமில்லை

அவனைப் பற்றி

 

சதி முறித்தமைக்காக மொர்தகனை பாராட்ட மன்னன் ஆலோசனை

 

அரசவை ஆலோசனை கூடம்

வந்திருந்தோர் அமைச்சக கூட்டம்

ஆமானை கேட்டிட்டான் கோமான்

அரசன் யான் கணம் செய்யும் கணவான்

உற வேண்டிய வகை என்ன புகல்வாய்?

 

ஆமான் மன்னர் கணம் செய்ய விரும்புவது தன்னை என நினைத்தல்

எனை மீறிப் பெரிதில்லை ஈண்டு தனவான்

மன்னர் மனம் விரும்பும் மா பெருமான்

அஃது நானே அறிவேன் இந்த ஆமான்

{tooltip}இ{end-link} இப்படி{end-tooltip}எண்ணி இஃது சொன்னான் {tooltip}இ{end-link}இந்த {end-tooltip}இழியன்

 

சிறப்பு செய்வீர்

சிறப்புற செய்வீர்

சிறப்பு நிறை கோவே

சிறந்தவன் நும் சிரம் புகுந்தவன்

{tooltip}மறப்பு செய்யா{end-link} மறக்க முடியாத{end-tooltip} {tooltip}மருட்கை{end-link} ஆச்சர்யம் {end-tooltip}கொள்ளன்ன

சிறப்பு செய்வீர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.