(Reading time: 11 - 22 minutes)

02. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

கைக் கடைக்கு சென்று ஒரு வைரமாலையும் அதற்கேற்றாற்போல் வளையலும் செட்டாக வாங்கினான். அங்கிருந்து புடவைக்கடை சென்று நான்கு பட்டுப் புடைவையும் வாங்கிகொண்டு வீட்டிற்கு சென்றான்.

மதியம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு சிறிது நேரம் தூங்கலாம் என்று படுத்துக்கொண்டான்.மூன்று மணிக்கு எழுந்து வெளியே வந்து காப்பியும் பிஸ்கட்சும் சாப்பிட்டான் .

சிறிது நேரம் கழித்து குளித்து நன்றாக டிரஸ் செய்து கடையிலிருந்து வாங்கியவைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினான் . வழியில் கொஞ்சம்,பூக்களும், கொஞ்சம் ஸ்வீட்சம் வாங்கிகொண்டு சென்றான் சுந்தரம்.

சுந்தரம், அனு வீட்டை அடைந்தான். அவரை எல்லோரும் வரவேற்றனர். உள்ளே சென்றவுடன் அனுவின் அம்மாவிற்கும், அண்ணிக்கும் அறிமுகப் படுத்தியவுடன் அனுவை அழைத்துவரும்படி கூறினார் சந்திரசேகர். அனுவின் அண்ணி உள்ளே சென்று அனுவை அழைத்து வந்தாள்.

அனுவிற்கோ கை காலெல்லாம் உதறலாய் இருந்தது. ஒருபக்கம் சந்தோஷம் இன்னொருபக்கம் தன்னை பெண் பார்க்க வந்திருப்பவர் பெரிய பணக்காரரென்றும் ஒரு பெரிய கம்பனிக்கு முதலாளியென்று பயமாக இருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

அவள் நடந்து வரும் அழகையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருதான் சுந்தரம்.

அனு வந்தவுடன் அவள் நிமிர்ந்தே பார்க்காமல் இருந்ததை பார்த்துவிட்டு பிறகு அவன் சந்திரசேகரிடம் ”நான் யாரென்று தெரியுமா அனுவிற்கு?” என்று சுந்தரம் கேட்டான், அவரும் “தெரியும்” என்று சொன்னார்.

பிறகு “நான் அனுவிடம் கொஞ்சம் தனியாக பேசவேண்டும்” என்றான்

அனு அப்பாவை பார்த்தாள், பயம் அவளை ஆட்கொண்டது, என்னது இது இவர் என்னிடம் தனியாக பேச என்னயிருக்கிறது... ஏன் இப்படி இவர் சொல்கிறார், என்று மனதிற்குள் ஒரு போராட்டமாகவே இருந்தது, நான் என்ன பேசுவேன் என்று பயந்தாள்.

“பேசுங்களேன்,” என்று சொன்ன சந்திரசேகர் அவரை அடுத்து இருந்த ரூமிற்கு அனுவுடன் அனுப்பி வைத்தார்.

அங்கே அவன் அனுவை பார்த்தான், அவள் இன்னும் தரையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

பிறகு அவன் அனுவிடம், "அனு என்னை நிமிர்ந்து பார், நான் யாரென்று உனக்கு தெருயுமில்லையா?" என்றான்

 அனு உடனே “தெரியும்” என்றாள்.

“அப்போ என் முகத்தை கூட பார்கமட்டாயா?” என்றான் சுந்தரம். உடனே அவள் வெட்கத்துடன் நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவள் முகமோ வெட்கத்தினால் சிவந்திருந்தது.

சுந்தரம் அவளை கண்கொட்டாமல் பார்த்துககொண்டிருந்தான். சுந்தரதிற்கோ அவள் முகச்சிவப்பை கண்டவுடன் அப்படியே அவளை அள்ளிக் கொள்ள வேண்டுமென்றிருந்தது எப்படியோ அந்த ஆசையை அடக்கிக்கொள்ள முயன்றார்.

“ என்னைக் கல்யாணம் செய்து கொள்ள இஷ்டமா?” என்றான்

“அதற்கு அவள் தலை குனிந்து கொண்டு தலையை மட்டும் ஆட்டினாள். “

ஆனால் அவர் விடுவதாக இல்லை. “நீ என்னை நிமிர்ந்து நேரே பார்த்து சொல், என்னை பிடித்திருக்கிறது என்று, அதற்க்காகத்தானே நான் இங்கு வந்தேன்” என்றான் சுந்தரம்.

அவள் தலையை நிமிர்த்துவதாக இல்லை உடனே சுந்தரம்”சரி உனக்கு என்னைப் பிடிக்கவில்லை போலிருக்கிறது என்றார்” அனு திடுக்கென்று தலையை நிமிர்த்தி அவரைப்பார்த்தாள்,பார்த்தவள் அப்படியே அசந்து விட்டாள்.

 நல்ல உயரம் நல்ல கலர் ஒரு ஹிந்தி பட கதாநாயகனை போல் மீசையில்லாமல் ஆனழகனை போலிருந்தான்.

அவளென்னவோ, ஒரு கம்பனிக்கு எம்.டி என்றதனால் கொஞ்சம் வயதானவரோ என்று நினைத்திருந்தாள்.

ஆனால் இவரோ வயதிலும் சின்னவராகவே இருக்கார், இவரா இந்த சின்ன வயதில் ஒரு கம்பெனிக்கு முதலாளி என்று அதிசயப்பட்டாள்

அவள் தன்னைப் பார்த்தவுடன, பிரமிப்பில் இருப்பவளைப் பார்த்து " என்ன அப்படிப் பார்க்கிறாய் அனு? என்னடா இவன் நமக்கு கொஞ்சம் கூட மாட்சே இல்லையே இவனைப் எப்படி கல்யாணம் பண்ணிகிறது என்று யோசிக்கிறாயா?" என்றார் சுந்தரம்.

அவள் “உடனே அப்படியெல்லாம் இல்லை எனக்கு உங்களை பிடித்திருக்கிறது” என்றாள்.

முகத்தில் கொஞ்சம் பயம் கலந்திருந்தால் போலிருந்தது.

உடனே “ஏன் என்னைப் பார்த்தா பயமாக இருக்கிறதா? சாதரணமாக எல்லோரிடம் எப்படி இருப்பாயோ அப்படி இரு, என்னிடம் இன்னும் க்ளோசாக இருக்கலாம். எனக்கு உன்னை ரொம்ப பிடித்திருகிறது” என்றார்.

தான் கொண்டுவந்திருந்த வைர செட்டை அவளிடம் கொடுத்தார்.

ஆனால் அவளோ “ வேண்டாம், எங்க அப்பா அம்மாவிற்கு இதெல்லாம் பிடிக்காது”என்றாள்

அவள் வாங்க தயங்கியபோது, “இப்பொழுதுதானே என்னை கல்யாணம் செய்துகொள்ள பிடிதிருக்கிறது என்றாய் அப்போ இதை வாங்கிகொள்ளதான் வேண்டும்” என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.