(Reading time: 11 - 22 minutes)

ல்லோரும் வந்துவிட்டார்கள்,ஐயரிடம் “எல்லோரும் வந்துவிட்டார்கள் உடனே ஆரம்பிக்கலாம்” என்று சொன்னான்.

அவன் சென்று மணவறையில் உட்கார்ந்தான், உடனே ஐயர் “பெண்ணை அழைத்து வாருங்கள்” என்று சொல்ல சுந்தரம் நிமிர்ந்து அனு வரும் வழியையே பார்த்தான். ஒரு தேவதையே வந்து தன் பக்கத்தில் உட்கார்ந்தது போலிருந்தது.

நான் எவ்வளவு அதிர்ஷடம் செய்திருக்கிறேன் இப்படி ஒரு தேவதையை மனைவியாய் அடைய என்று நினைத்துக்கொண்டான். மனது ஏனோ உல்லாசமாக இருந்தது

மாங்கல்யம் தன்டுனநேன மம ஜீவன ஹேதுன: கண்தே பத்னமி சுப்கே த்வம் ஜீவ சரடா சதம்:

சிறிது நேரத்திலெல்லாம் தன் மனம் கவர்ந்தவளின் கழுத்தில் தாலி கட்டி தன்னவளாக்கிக் கொண்டான் சுந்தரம்.

அவள் கையை பிடித்து அக்னியை வலம் வரும்போது கொஞ்சம் கையை அழுத்திப் பிடித்தான், அவள் முகம் பார்த்தபோது அவள் முகமோ செவ்வானம்போல் சிவந்திருந்தது அவளை உடனே அள்ளி தன்னோடு அணைத்துக் கொள்ள வேண்டும்போல் இருந்தது என்ன செய்வது இன்னும் எட்டு மணி நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டுமே என்றிருந்தார் சுந்தரம்.

அனுவோ மனதினுள் " ஐயோ! என்ன இது எல்லோரெதிருலும் என் முகம் இப்படி சிவப்பதை மற்றவர்கள் அறிந்தால் என்ன நினைப்பார்கள்" என்று சுந்தரத்தை பார்த்து முறைத்தாள்..

அவரோ “நீ என்னை பார்க்கவேண்டும் என்றே நான் இப்படி செய்தேன்” என்று தன் பார்வையாலேயே சொன்னார்.

அனு உடனேயே தலையைக் குனிந்துக் கொண்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

ல்யாணம் முடிந்தவுடன் அனுவின் பெற்றோரும் அவள் அண்ணன் அண்ணியும் சுந்தரத்தின் வீட்டிற்கு புது மன தம்பதியருடன் வந்திருந்தனர்.

அவர்களுக்கு ஒரு ரூம் கொடுத்தார் அதில் அவர்கள் எல்லோரும் இரவிற்கு பெண்ணை தயார் செயதார்கள்.

சமையல்கார லோகுவை அழைத்து “உடனே எல்லோருக்கும் டிபன் காப்பியும் இரவிற்கு சாப்பாடும் ரெடி செய்துவிடு” என்றார்.

இந்த மாதிரி விருந்தாளிகள் வரும் நேரத்தில் எப்பவும் வீட்டில் இரண்டு உதவியாளர்களை ஏற்பாடு செய்துவிடுவார்.

வந்திருந்த விருந்தாளிகளை கவனித்தாலும் மனமென்னவோ வரபோகும் இரவையே நினைத்துக்கொண்டிருந்தது. இப்பொழுதே தன் அனு தன்னுடனேயே இருக்க வேண்டுமென்றிந்தது.

ஆனால் என்ன செய்வது எல்லோரும் இருக்கும்போது எப்படி கூபிடமுடியும் இன்னும் கொஞ்ச நேரம்தானே பொறுத்துக்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டான்.

ந்தது, தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த இரவு. அவன் மனம் அவனிடமேயில்லை உடம்பில் புது ரத்தம் பாய்தாற்போல் இருந்தது. சுந்தரம் எல்லோரும் சாப்பிட்டவுடன் வந்திருந்த விருந்தாளிகளை அவரவர் வீட்டிற்கு அனுப்பிவைத்தான். பிறகு, தன் மாமனாரிடம் வந்து "அனுவை நான் பார்த்துகொள்கிறேன் நீங்கள் கவலைபடவேண்டாம் எப்படியிருந்தாலும் நானும் அவளும் தனியாகத்தானே இருக்கவேண்டும் அதனால் நீங்கள் கவைலைப் படாமல் விட்டு விட்டு போங்க" என்றான் சுந்தரம்.

சுந்தரத்திற்கோ, அவன் அனுவுடன் யாருடைய தொந்தரவுமில்லாமல் அவளை தன் கையில் வைத்து க்கொஞ்ச வேண்டுமென்றிருந்தது. அதனால் அவர்களையும் கிளம்பிவிட சொன்னான்.

ஆனால் அனுவின் அப்பா, "எப்படி மாப்பிள்ளை அனு ரொம்ப சின்னபெண் என்றார்”.

ஆனால் சுந்தரம் சொன்னான் “அவள் என்னுடைய பெண்டாட்டி நான் நல்லாவே அவளைப் பார்த்துப்பேன், அதனால் நீங்க கவலைப்படாமல் போயிட்டு வாங்க” என்றான்.

“இல்லை மாப்பிள்ளை இங்கு பெரியவர்கள் யாருமே இல்லை எப்படி முதல் நாளே விட்டு போக சொல்லுகிறீர்களே என்று பார்கிறேன்" என்றார், “இருந்தாலும் நீங்கள் சொல்லுவதைப் போல் எப்படியிருந்தாலும் நாளையிலிருந்து அவள் உங்களுடன் தனியாக இருந்துதான் ஆகவேண்டும்,சரி என் மனைவி பிள்ளையிடம் பேசறேன்” என்றார் அனுவின் தந்தை.

ஆனால் அனுவின் அம்மாவோ “அது எப்படி முடியும் இந்த அறியாப் பெண்ணை தனியாக விட்டுசெல்வது அதுவும் முதல் நாளே” என்றாள்.

ஆனால் அனுவிற்கு ஏதோ ஒன்று மனதினில் தோன்றியது உடனே தன் அம்மாவிடம் "அம்மா அவர் அப்படி சொன்னதுக்கு காரணமிருக்கும் நீங்க கிளம்புங்கள் நான் எப்படியும் என் கணவருடந்தானே இருக்கிறேன் அவர் என்னை நல்லா பார்த்துப்பார்” என்றாள் “அதனால் கவலைபடாமல் போய்விட்டு வாருங்கள்" என்றாள் அனு.

“அவள் சொல்வது சரிதானே” என்று அனுவின் அண்ணனும் சொன்னான், “சரி” என்று அரை மனதாக அனுவின் அம்மா ஒத்துகொண்டாள்.

“சரி அனு பார்த்து பக்குவமாக நடந்துக்கோ நாங்கள் கிளம்புகிறோம் காலைலே போன் பண்ணும்மா..அவரை கோபப் பட வைக்காதே சமத்தா நடந்துக்கோ” என்று அறிவுரை வழங்கிவிட்டு மாபிள்ளை ஹாலில் உட்கார்ந்திருக்கிறார் என்று எல்லோரும் அங்கு சென்றனர்.

தொடரும் 

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.