(Reading time: 11 - 22 minutes)

ன்னை உண்மையாகவே பிடிக்கும் என்றால், நீ இதைக் கண்டிப்பாக வாங்கிக் கொள்ள வேண்டும் அது மட்டுமில்லை அதை போட்டுகொண்டுதான் வெளியே வரவேண்டும் “என்றார்.

“என்ன, என்னை உண்மையாகவே பிடித்திருக்கிறதா? “ என்று கேட்டவுடன் பயந்துக் கொண்டு

உடனே அவரிடமிருந்து அந்த வைர செட்டை வாங்கிக்கொள்ள கையை நீட்டினாள்..

 ஆனால் சுந்தரமோ “இதை நானேதான் உனக்கு போட்டுவிடுவேன் என்றான். அப்படி இல்லையென்றால் உனக்கு என்னை பிடிக்கவில்லை என்று எடுத்துகொள்வேன் என்ன சொல்லுகிறாய்?” எனவும் பயமும் வெட்கமும் ஒன்று சேர வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்துக்கொண்டாள்.

அப்போது அவருக்கு கோபம் வந்து விட்டது “இப்போதானே என்னை நேரே பாருன்னு சொன்னேன் இப்போ மறுபடியும் தலையைக்குனிந்திருக்கிறாய் பார்” என்று கொஞ்சம் குரலை உயர்த்தினார் சுந்தரம்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்... 

உடனே தலையை நிமிர்த்தி அவரை பார்த்து “சரி நீங்களே எனக்கு போட்டுவிடுங்கள்” என்றாள்.

வைரத்தின் ஒளி அவளின் அழகை இன்னும் கூட்டிக்காட்டவே

அப்படியே அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான், அவளின் அருகாமை அவனது உடம்பில் சூடு ஏறியது அவளை அள்ளி அணைத்திட அவன் கை துடித்தது, தன்னைக் கட்டுபடுத்திக் கொள்ள ரொம்ப கஷ்டப் பட்டான்

அவளையே உற்று நோக்கியவன் அவள் முகத்தில் பயமும் கொஞ்சம் சோகமும் தெரிய மனது ரொம்ப கஷ்டமாகிவிட்டது, தன் மேலேயே கோபம் வந்தது, என்ன பைத்தியக்காரத்தனமா கோபித்துக் கொண்டோமே என்று உடனே "சாரி அனு, நான் உன் முகத்தை ஆசையாக பார்த்துகொண்டிருக்கிறேன் நீ என்னடான்னா தலையைக் குனிந்துகொண்டு எனக்கு தரிசனம் தரமட்டேன்கிற"என்று சிரித்துகொண்டே பயப்படாதே அனு நான் உனக்கு புருஷனாக போகிறவன் அதனால் கவலைப்பட வேண்டாம்,யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று சொல்லிக்கொண்டே அவளுக்கு வைர நெக்லஸயும் வளையலையும் போட்டுவிட்டு சரி வா வெளியே போய் நம் சம்மதத்தை சொல்லலாம்” என்றான்.

வர்கள் வெளியே வருவதைப் பார்த்து அவளின் பெற்றோர் என்ன பேசினாளோ தன் பெண் என்று நினைத்தார்கள், ஆனால் அவர்கள் இருவரின் முகத்தில் சிரிப்பும் அனுவின் முகத்தில் வெட்கமும் பார்த்து சந்தோஷம் அடைந்தார்கள்

ஆனால் அவர்களின் பெண் புதிதாக நகை அணிந்திருப்பதை பார்த்து ஆச்சர்யத்துடனும், கேள்வியுடனும் அவளை பார்த்தார்கள்.

அவர்கள் பார்த்த பார்வையிலேயே புரிந்து கொண்ட சுந்தரம், அதற்க்கு பதில் அளித்தார்.

 “நான்தான் அவளை போட்டுக்கொள்ள கட்டயபடுதினேன் அனுவை தப்பாக எடுத்துகொள்ள வேண்டாம்”

“இதுவே நிச்சியதார்த்தம் மாதிரி இருக்கட்டும். வரும் வெள்ளியன்று கல்யாணத்தை வைத்துக்கொள்ளாம் என்று நினைக்கிறன் உங்களுக்கு வசதி எப்படி” என்று கேட்டான்.

அதற்கு அனுவின் தந்தை “இவ்வளவு சீக்கிரமா எப்படி...?”என்று இழுத்தார்..

“ஏன்?’ என்று சுந்தரம் கேட்கவும் “இல்லை மாப்பிள்ளை கல்யாண மண்டபம் கிடைகாதே அது மட்டுமில்லை சமையல்காரர்களும் கிடைக்க மாட்டார்கள்” என்றார்

உடனே சுந்தரமோ, “நாம் கல்யாணத்தை கோவிலிலே வைத்துக் கொள்ளலாம் , சாப்பாடு எங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்றான், அதுமட்டுமில்லை கல்யாண செலவு முழுவதும் என்னுடையது” என்றான் கமபீரமாகவும், அழுத்தமாகவும்.

சந்திரசேகர் “இல்லை, இதெல்லாம் பெண் வீட்டார் செய்ய வேண்டிய கடமை” என்றார்,

“அதல்லாம் ஒன்றுமில்லை நீங்கள் உங்கள் சொந்தபந்தத்துடன் வந்து விடுங்கள்” என்று சொன்னான். மறுத்து ஒன்றும் சொல்ல முடியதலால் அவருடைய இஷ்டத்திற்கு ஒத்துக்கொண்டார் அனுவின் தந்தை.

சுந்தரம் தன் வீட்டிற்கு சென்றவுடன் எல்லா ஏற்பாட்டையும் உடனடியாக ஆரம்பித்தான்.

தன்னை சேர்ந்த சில முக்கியமான நண்பர்களை போனில் கூப்பிட்டார், கூப்பிட்டு விஷயத்தை சொல்லி வரும் வெள்ளியன்று தன்னுடைய திருமணத்திற்கு வந்து விடுங்கள் என்று கூறினார்.

இரண்டு நாள் தூக்கமே இல்லை எப்பொழுதும் அனுவின் ஞாபகமே அவருக்கு. வெள்ளியன்று காலையில் அனுவின் அப்பாவிற்கு போன் செய்து உங்களுக்கு வான் அனுப்பிவிட்டேன் கரெக்ட் டைமுக்கு வந்து விடுங்கள் என்று தன்னுடைய நண்பர்கள் தன்னுடைய குரு தன் ஐய்யாவுடன் சென்றார்.

ஐயாவின் மருமகள் தங்கம் அவர் பக்கத்திலிருந்து பெண்கள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து கொடுத்தாள்.

கோவிலில் எல்லோரும் பெண் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தார்கள், அனு தன் சொந்தக்காரர்களுடன் வந்தாள்.

தன் மனைவி ஆகபோகிறவளை பார்த்தான் சுந்தரம். அழகே உருவாக தேவதை போல் வந்து கொண்டிருந்தவளை பார்த்துகொண்டிருந்தான்.

அவள், அவனை வெட்கத்தோடு ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு போனாள்.

அவன் தன் மனதிற்குள் கள்ளி எப்படி பார்த்துக்கொண்டு போகிறாள் பார் என்று நினைக்க அவன் தன் உணர்வை கட்டுப்படுத்த ரொம்பவே கஷ்டபட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.