(Reading time: 11 - 22 minutes)

04. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

கொஞ்சநேரம் கழித்து தன் ஆசை மனைவியை அணைத்து முத்தமிட்டான்.

பிறகு "அனு நமக்கு நேற்றுதான் கல்யாணமாச்சு நேற்று இரவு வரை எல்லோரும் நம்முடன் இருந்தனர். நமக்கு தனிமையே கிடைக்கவில்லை.

“நேற்று இரவு எல்லோரும் போனவுடன் நீயும் நானும் நாம் நாமாக இல்லை, அதனால் நேற்று இரவு பேச வேண்டுமென்று நினத்ததெல்லாம் பேச முடியவில்லை”

“என்னை பற்றி நீ ஒன்றும் தெரிந்துக் கொள்ளவில்லை, நீ இன்னும் இந்த வீட்டைக்கூட முழுதாக பார்க்கவில்லை, உடனே உன் வீட்டிற்கு போனால் உனக்கு உன் வீட்டு மனிதர்களை பார்த்தவுடன் ரொம்ப பாசம் பொங்கும் திரும்பி வரும்போது அழுதுக்கொண்டு வருவாய்” என்று சொல்லி நிறுத்தினான்.

அவள் உடனே "அதனால் என்ன" என்றாள் 

"அதனால் என் மனசு வருத்தப்படும்" 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

“ஏன் ?”என்றாள் அனு

“என்னால்… நீ அழுவதை பார்க்கமுடியாது கண்ணம்மா, அது மட்டுமில்லை நீ அழுதால் உனக்கு என்னை விட அவர்கள் தான் முக்கியமோ,உனக்கு என் மேல் ஆசை இல்லையோ நாம் தான் இவளை கட்டாயபடுத்தி விட்டோமோ என்று தோன்றும். இது எல்லாவற்றிட்கும் மேல் நீ என்னுடையவள்! நீ எனக்குமட்டுமே!”

“இப்போதைக்கு நான் யாரிடமும் உன்னை பங்குபோட முடியாது அனு” என்று சொன்னவன் கண் கலங்கியிருந்தது.

அவளுக்கும் கண் கலங்கியது அவன் அன்பை புரிந்துக் கொள்ளாமலே, அவரை கண் கலங்க வைத்துவிட்டோமே என்று வருத்தப்பட்டாள். 

உடனே எழுந்து அவனுக்கு தன் முத்தங்களை அள்ளி வழங்கினாள், அப்படியே அவனுடன் இழைந்தாள்.

எதிர்பார்க்காத அந்த பரிசு தன் காதல் மனைவியிடமிருந்து கிடைத்ததும் அவன் உடம்பில் இருந்த சக்தி எல்லாம் போய்விட்டாற் போலிருந்தது.

அவளை இறுக்கி அனைத்து அவளுடன் இழைந்தான் இருவரும் தங்களை மறந்தார்கள்,

அவர்கள் தங்களை மீட்டுகொண்டவுடன் எழுந்திரு அனு ரெடியாகி போய் சாப்பிடலாம் என்று எழுந்து ரெடியாகி வெளியே வந்தார்கள். லோகாம்பிகை வந்து "டிபன் ரெடி ஐயா என்றாள்". 

“சரி வருகிறோம்” என்று சொன்ன சுந்தரம் "வா அனு சாப்பிட போகலாம்" என்று அவள் தோள் மேல் கையை போட்டு டைனிங் ரூமிற்கு வந்தார்கள்.

தன் மனைவிக்காக சேரை இழுத்து அவள் அதில் உட்கார்ந்தவுடன் தானும் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். 

காலை டிபன் பொங்கல், வடை, கேசரி, பூரி, உருளைகிழங்கு,என்று எல்லாம் செய்திருந்தாள் சமையல்கார லோகு.

“ உனக்கு என்ன என்ன பிடிக்கும், பிடிக்காது என்று சொல்லிவிடு லோகுவிடம்” என்றான் சுந்தரம்.

லோகு டிபனை எடுத்து இருவருக்கும் அவர்கள் தட்டில் போட்டாள். இருவரும் பொதுவாக பேசியபடி சாப்பிட்டார்கள்.

“டிபன் நன்றாக இருந்தது” என்று லோகுவிடம் அவள் கூற லோகுவிற்கு ஒரே மகிழ்ச்சி.

“மதியத்துக்கு என்ன சமைக்கட்டும்” என்று அனுவிடம் கேட்டாள் லோகு.

“உங்களுக்குதானே அவருக்கு என்ன பிடிக்கும் என்று தெரியும் அதையே செய்துவிடும்படி” சொன்னாள்

"ஆனால் உங்களுக்கு என்ன பிடிக்குமென்று எனக்கு தெரியாதேம்மா"என்றாள் லோகு.

"அவருக்கு என்ன பிடிக்கிறதோ அதல்லாம் எனக்கும் பிடிக்கும்" என்று அனு சொன்னவுடன், இப்படி ஒரு பெண்டாட்டி கிடைக்க நம்ம அய்யா கொடுத்துவைதிருக்கார் என்று நினைத்துக்கொண்டாள், லோகு.

சுந்தரம் போன் பேசிவிட்டு அங்கு வந்தவுடன் தன் வீட்டை அனுவிற்கு சுத்தி காண்பித்து விட்டு "இதபார் அனு இது இனிமே உன் வீடு இந்த வீட்டு மகாராணி நீ, இந்தவீட்டு எஜமானி, இங்கு நீ வைத்ததுதான் சட்டம். புரிந்ததா?" என்று கேட்டான்.

"ம்ம்ம்... " என்றாள்.

"சரி வா, நம் ரூமிற்கு போவோம் நான் உன்னுடன் பேசனும்" என்றான் சுந்தரம்.

இருவரும் ரூமிற்குள் சென்றனர் அவன் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து வா, இங்கு உட்கார் என்று தன் பக்கத்தில் கை காட்டினான். 

அந்த ரூம் பெரிய அளவு அங்கேயே ஒரு சோபா காபி டேபிள், அனைத்து சௌகிரியங்கலும் இருந்தது அந்த அறையில். 

அங்கிருந்து தோட்டத்தை நன்றாக பார்க்க முடிந்ததது நிறைய பூசெடிகளும் மாமரமும் தென்னை மரமென்று எல்லாம் இருந்தது.

அந்த அறையில் தோட்டத்திலிருந்து வரும் காற்றினால் அறை சில்லென்றிருந்தது.

அந்த சோபாவில் சுந்தரம் உட்கார்ந்து அனுவையும் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான். "அனு, என் மேல் உனக்குக் கோபமா ?" என்று கேட்டான். அவள் வாயே திறக்கவில்லை. 

"நீ பதில் சொல்லாதினால் உனக்கு என் மேல் கோபம் என்று தெரிகிறது" என்றான் சுந்தரம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.