(Reading time: 11 - 22 minutes)

'ன்றுமில்லை நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறேன்." 

" இல்லை அனு நீ ரொம்ப நேரமா தீவிர சிந்தனையில் இருக்கிறாய், என்னவென்று என்னிடம் சொல்லமாட்டாயா?" என்றான் சுந்தரம்.

"ஒன்னுமில்லைங்க நீங்க சொல்லுரதைஎல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்றாள்.” நீ உன் மனசில் என்ன ஓடுதோ அதச் சொல்லம்மா" என்றான் சுந்தரம்.

"இல்லை அனு நீ என்ன நினைக்கிறேனென்று இப்போது சொல்லாவிட்டால் நான் வேறொன்றும் பேசபோவதில்லை... என்ன அனு சொல்லும்மா என் மேல எதாவது கோபமா?” என்றான் சுந்தரம்

“இல்லை நான் உங்க மேல பாசமாகவும் நீங்க எதிர்பார்க்கற மாதிரியும் இருப்பேன். நீங்க என்ன சொல்லுறீங்களோ அதை கேட்பேன்” என்றாள் அனு.

“இதபாரு அனு உனக்கு என் மேல லவ் இருக்கணுiம் ஆனால் அது பயந்தால்போல் இரூக்ககூடாது புரிந்ததா. உனக்குத்தான் என் மேல எல்லா உரிமையும் இருக்கு அதனால் நான் ஏதாவது தப்பா பேசினாலோ செய்தாலோ என்னைக் கேள்வி கேட்கவும் தப்பை திருத்தவும் செய்யணும்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

ஏன்னா என்னை யாரும் இதுவரை கேள்வி கேட்டது கிடையாது எப்பவுமே என் இஷ்டம் போலவே இதுவரை நடந்து கொண்டிருக்கிறேன். இப்போதான் நீ வந்து விட்டாயே நீதான் இனிமே என்னை சரி செய்யணும் என்ன சொல்லுறே,செய்வி யா?” என்று அவள் கன்னத்தை தடவிய படியே கேட்டான் சுந்தரம்

எனக்கு ஒரு அழகான துணை கிடைத்திருக்கு அதனால் நான் கொஞ்சம் பொசசிவ், நீ யாரோடையாவது கொஞ்சம் சிரித்துப் பேசிவிட்டாலும்எனக்கு அது தாங்காது, என் அனு என்னோட மட்டும்தான் எனக்கு மட்டும்தான் என்ற எண்ணத்தினாலும் தான் இப்போதைக்கு உன்னை உன் அம்மா வீட்டிற்கு அனுப்பக் கூட முடியவில்லை. எனக்கு கொஞ்சம் டைம் கொடு நான் என்னை சரி பண்ணிக்கிறேன் என்னை தப்பா நினைக்க மாட்டியே என்று கூறி அவளை தன்னுடன் அனைத்துக் கொஞ்ஜினான் சுந்தரம்.

அவள் தன்னை மறந்து அவன் அணைப்பில் சுகம் கண்டாள்..

இரண்டொருநாளில் சுந்தரம் ஒருநாள் காலை அனுவின் அப்பாவிற்கு போன் செய்து நாங்கள் இருவரும் இன்று அங்கு சாப்பிட வருகிறோம் என்று கூறி அனுவிடம் கிளம்பு நாம் இருவரும் உங்கள் வீ ட்டிற்கு போறோம் அங்கேயே சாப்பிட வரேன்னு சொல்லி இருக்கிறேன் என்று சொன்னவுடன் சிறு புன்னகையுடன் சுந்தரத்திற்கு பிடித்த புடவை வைலெட் கலர் சிப்போன் புடவையை கட்டிக்கொண்டு அவனுடன் அவர்கள் வீட்டுக்கு சென்றனர்.

ரண்டு மாதம் ஆகிற்று ஒருநாள் காலை வேளை அனு எழுந்திருக்கும் போதே தலை சுத்துராபோலே இருக்குதுங்க என்றாள், சுந்தரம் உடனே என்ன சொல்கிறே அனு என்று கேட்டு எழுந்துகொள்ளுமுன் அப்படியே அவர் மேலே விழுந்துவிட்டாள். உடனே அவளை கைத்தாங்கலாக தூக்கி படுக்கையில் படுக்க வைத்து தனக்கு தெரிந்த டாக்டரை வரவழைத்தார். அவர் வந்து செக் செய்து விட்டு, பயப்பட ஒன்றுமில்லை

எல்லாம் நல்ல விஷயம்தான் நீங்கள் அப்பாவாக போகிறீர்கள் என்றார் டாக்டர். சுந்தரத்துக்கு ரொம்ப சந்தோஷம், “ஆனால் ஏன் டாக்டர் அவள் மயக்கம் போட்டுவிட்டாள்” என்று கேட்டான் சுந்தரம். பயப்பட ஒன்றுமில்லை முதல் கொஞ்ச நாள் இப்படிதான் இருக்கும் கொஞ்சம் வாந்தியும் மயக்கமுமாக, பிறகு அதெல்லாம் குறையும் பயபடாதீர்கள் சுந்தரம், வேண்ணா கொஞ்ச நாள் அவங்க அம்மா வீட்டிற்கு அனுப்பிவையுங்கள் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றார் டாக்டர். ஆனால் சுந்தரம் ஒன்றும் சொல்லவில்லை. தன் மனைவி எப்போது கண் முழிப்பாள் என்று மட்டும் கேட்டான். இன்னும் கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும் கவலைப்படதீர்கள் என்றார் டாக்டர்.

டாக்டர் வாழ்த்துக்கள் என்று கூறி ஒரு லேடி டாக்டர்கிட்ட கூட்டிப்போய் எல்லா செக்கப்பும் செய்துவிடுங்கள் என்று கூறி விடை பெற்றார்.

சிறிது நேரம் அனுவின் கைப்பிடித்து உட்கார்ந்தான் பிறகு சமையலறை பெல்லை அழுத்தினார் சமையல் உதவி ஆள் தங்கம் வந்தாள் அவளிடம் உள்ளே சென்று பால் எடுத்து வா அம்மாவிற்கு என்று சொல்லி, பால் பாயசமும் ஒரு ஸ்வீட்டும் செய்ய சொல் என்றார். இன்னும் நாலு பேர் சாப்பிட வருவாங்க அவங்களுக்கும் சேர்த்து விருந்து செய்ய சொன்னான் சுந்தரம்.

அனு கண்ணை விழுத்து பார்த்தாள் " எப்படி இருக்கே அனு என்றான் அவளுக்கோ ஒன்றும் புரிய வில்லை என்ன ஆச்சு என்றாள், ஒன்றுமில்லை திடீரென்று நீ தலை சுற்றி என் மேலே விழுந்து விட்டாய் என்றான். ஏன் எனக்கு தலை சுற்றியது என்று தெரியவில்லையே என்றாள் அனு.

சுந்தரம் மெதுவாக அவள் தலையை தடவிக்கொண்டு ஒன்றுமில்லை எல்லாம் நல்ல விஷயம்தான் கவலைபடாதே என்றான். “என்ன விஷயம்?” என்று கேட்டாள் அவள். சுந்தரம் குனிந்து அவள் உதட்டில் முத்தம் கொடுத்து " நீ அம்மாவாகப்போகிறாய்" என்று சொன்னான். அவள் சுந்தரத் தையே வைத்தக்கண் வாங்காமல் பார்துகொண்டிருந்தாள். “என் வயற்றில் உங்கள் குழந்தை” என்றாள் அவன் உடனே” நம் குழந்தை கண்ணம்மா” என்றான். இருவரும் மிகவும் சந்தோஷ மாக இருந்தனர்.

தொடரும் 

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.