(Reading time: 12 - 24 minutes)

05. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

ங்கம் பால் கொண்டு வந்தாள் அதை வாங்கி அவளை குடிக்க வைத்தான் சுந்தரம், ஆனால் அவளோ பாதி குடித்துக்கொண்டிருக்கும் போது அத்தனையும் வாந்தி எடுத்துவிட்டாள். உடனே சுந்தரம் தனக்கு தெரிந்த லேடி டாக்டர் ரேணுகாவிற்கு போன் செய்து உடனே பார்க்க அப்பாய்ன்ட்மெண்ட் வாங்கி அவளை கூட்டிக்கொண்டு போனான். டாக்டர் எல்லா செக்கப்பும் செய்து மாதா மாதம் வரசொன்னாள். என்ன மாதிரி சத்துள்ள சாப்பாடு சாப்பிடவேண்டும் என்று சொன்னாள். பிறகு அங்கிருந்து நேரே அவளை அவள் அம்மாவீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனான், அவளால் நம்ப முடியவில்லை ஆனால் ஒன்றும் சொல்லவும் இல்லை தனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று மட்டும் கான்பிததுக்கொண்டாள்.

அவர்கள் காரை வாசலில் பார்த்தவுடன் அனுவின் அப்பாவிற்கு இவ்வளவு காலையில் இவர்கள் எதற்கு வந்தார்கள் என்று கூறிக்கொண்டே “அடே வெங்கடேசா இங்கு வந்து பார் அனுவும் மாப்பிள்ளையும் வந்திருக்கிறார்கள்” என்றார் எல்லோரும் என்ன இவ்வளவு காலையில் வந்திருகிறார்கள் என்று சொல்லிக்கொண்டே வாசலில் அவர்களை வரவேற்க வந்தார்கள் "வாங்க மாப்பிள்ளை வா அனு" என்று கூறி வரவேற்றார் அனுவின் தந்தை.

உள்ளே வந்து எல்லோர் முகத்தையும் பார்த்த சுந்தரம் “ஒன்றுமில்லை எல்லாம் நல்ல விஷயம்தான்” என்று கூறி விஷயத்தை சொன்னான். எல்லோர் முகத்திலும் சந்தோஷம். “அது மட்டுமில்லை மாமா,அத்தையும் நீங்களும் இருவரும் நம் வீட்டில் வந்து அனு டெலிவரி மட்டும் இருக்க வேண்டும்மென்றான்.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

அவள் தாயோ அதெப்படி முடியும் மாப்பிள்ளை முதல் பிரசவம் பிறந்த வீட்டில்தான் இருக்கவேண்டும் என்று சொன்னாள், ஆனால் சுந்தரமோ இத பாருங்கள் அத்தை, அது அனுவின் வீடு அவள் வீட்டிற்கு நீங்கள் வந்து அவளை பார்த்துக்கொள்ள வேண்டும், அதுமட்டுமில்லை என்னால் அனுவை விட்டு இருக்க முடியாது, இந்த பழங்கால பேச்சு எல்லாம் வேண்டாம்.

அதனால் ப்ளீஸ் மாமா நீங்களும் அத்தையும் அங்கு வந்து இருங்கள். இங்கு வெங்கடேசனை அவர் மனைவி கவனித்துக்கொலவார்கள் என்றான் சுந்தரம். அனுவின் தந்தை வெங்கடேசனை பார்த்தார் அவனும் சரி என்பது போல தலை ஆட்ட அவர் மனைவியின் முகத்தைப் பார்த்து "மாப்பிள்ளை சொல்வதும் சரிதான் அவர் வீட்டில் யாரும் பெரியவர்கள் இல்லை நம் குழந்தையை நாம் தான் கூட இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும்,அதனால் கிளம்பு நாம் இப்போதே போகவேண்டும் என்றார்.

சுந்தரத்திற்கு ரொம்ப மகிழ்ச்சி " அப்புறம் நம் வீட்டில் இன்று எல்லோருக்கும் விருந்து சமைக்க சொல்லியிருக்கிறேன் அதனால் வெங்கடேசன் நீங்களும் உங்கள் மனைவியுடன் கிளம்புங்கள் நம் வீட்டிற்கு" என்றான். உடனே வெங்கடேசன் "நீங்கள் கிளம்புங்கள், நானும் என் மனைவியும் கொஞ்ச நேரம் கழித்து வரோம்" என்றான்.

எல்லோரும் சந்தோஷமாக அங்கிருந்து சுந்தரத்தின் வீட்டிற்கு சென்றார்கள்.

அனுவின் அம்மா " ஐந்தாம் மாதம் வளைகாப்பு செய்யவேண்டும், அதற்கு மாபிள்ளையிடம் சொல்லுங்கள்" என்றார் அவள் அப்பாவிடம், அதைக் கேட்டுகொண்டே வந்த சுந்தரம் எது செய்யவேண்டுமென்று சொல்லுங்கள், எல்லா ஏற்பாடும் நான் செய்கிறேன். ஒரு குறையும் இல்லாமல் எல்லாம் செய்யவேண்டு’மென்று தன் மனைவியை தன்னுடன் அணைத்துக்கொண்டே சொன்னான் சுந்தரம்.

அந்த மாதம் செக்கப்ப்புக்கு போகும்போது டாக்டர் ரேணுகாவிடம் கேட்டான் சுந்தரம், ‘ஏன் அனு ரொம்ப வீக்காக இருக்கிறாள்?” என்று அதற்கு டாக்டர், “இந்த நேரத்தில் அப்படிதான் இருக்கும், அவள் வயிற்றில் இன்னொரு உயிர் வளர்கிறது, கொஞ்சம் வீககாகத்தான் இருக்கும்’ என்று டாக்டர் சொன்னாலும் மனதுக்குள் குழந்தை வேண்டுமென்றால் பாவம் இவள் எவ்வளவு கஷ்படுகிறாள் என்று நினைத்தான்.

வளைகாப்பு விசேஷம் வெகு விமரிசையாக நடந்தது. அன்று சுந்தரம் எல்லா மீட்டிங்கையும் கான்செல் செய்து அனுவுடனேயே வீட்டில் இருந்து அவளை பார்த்துக்கொண்டு இருந்தான். விசேஷம் முடிந்ததும் அவளை உள்ளே கூட்டிகொண்டு போய் படுக்கவைத்து, தானும் கூடவே இருந்து பார்த்துக்கொண்டான்.

ஒன்பது மாதம் ஆகிவிட்டது, அனுவிற்கு எந்த நேரத்திலும் பிரசவ வலி வரலாம்……

இரவு பதினொரு மணிக்கு அனு வீலென்று கத்தினாள் பக்கத்திலிருந்த சுந்தரம் பயந்து விட்டான் "அனு என்னம்மா, என்ன ஆச்சு?’ என்று சத்தமாக கேட்டான் அவளால் உடனே பதில் சொல்ல முடியவில்லை, ‘என்ன ஆச்சுஅனு ? ஏம்மா கத்தின?’ என்று கேட்டான்

‘ஐயோ! எனக்கு வலிக்குதுங்க என்று சொன்னாள்’ உடனே அனுவின் அம்மாவும்,அப்பாவும் அங்கே வந்து விட்டனர், அவர்களிடம் ‘அனுவிற்கு வலிக்கிறதாம் கொஞ்சம் பார்த்துக்குங்க நான் டாக்டருக்கு போன் செய்து விட்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு போன் செய்தான். அதற்குள் அனுவிற்கு தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டார் அவள் அம்மா.

அவர்களை ‘உடனே கிளம்புங்கள் ஆஸ்பத்திரிக்கு என்று சொல்லி அனுவை தானே தூக்கிககொண்டு கார் பின்னாடி சீட்டில் உட்கார வைத்து கார் ஓட்டி சென்றான் சுந்தரம்.

கார் ஓட்டும்போது அனுவின் கத்தல் சுந்தரத்திற்கு பயமாக இருந்தது. அனுவின் அம்மாவோ "பயப்படாதீர்கள் பிள்ளை பிறந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும்" என்றார். "ஆனாலும் அவள் இவ்வளவு கஷ்டபடராளே அத்தை" என்றான் அவனுக்கு கார் ஓட்டுவதே கஷ்டமாக இருந்தது ஆனாலும் எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ நல்லது என்று வேகமாக ஓட்டி பத்து நிமிஷத்தில் போய் சேர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.