(Reading time: 12 - 24 minutes)

தற்க்கு சுந்தரமோ,” வெங்கடேசன் அனு என்னுடைய காதல் மனைவி அவள் இறந்தாலும், அவள் என் காதல் மனைவிதான் நீங்கள் பாடி என்றெல்லாம் சொல்லவேண்டாம், அவளை, அவளுக்கு சொந்தமான காரில்தான் கூட்டிக்கொண்டு போவேன்” என்று சொன்னதும் வெங்கடேசன் அங்கேயே அவன் காலில் விழுந்து “தப்பாக பேசி விட்டேன். என் தங்கையை நானே அப்படி பேசியது தப்புத்தான் என்னை மன்னியுங்கள்” என்றான்.

அனைவரும் கிளம்பும் போது சுந்தரம், வெங்கடேசனிடம், “மன்னியுங்கள் மாமாவையும் அத்தையையும் வேறு டாக்சியில் கூட்டி வந்துவிடுங்கள், நானும் அனுவும் குழந்தையும் இந்த காரில் வருகிறோம்” என்றான். வெங்கடேசனும் சரி என்றான்.

ஆனால் வெங்கடேசனின் மனைவியோ, "எப்படி அவருக்கு இப்போ பிறந்திருக்கும் குழந்தையை தூக்கி பழக்கம் கிடையாது மேலும் குழந்தை அழுதால் என்ன செய்வார்?" என்றாள்.

சுந்தரமும், நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்? அதற்க்கு அவள் சர்க்கரை தண்ணீர் கொடுப்பேன் என்றாள், அதை என்னிடம் கொடுங்கள் என்றான்.

வேங்கடேசனோ " என் மனைவியும் முன் சீட்டில் உட்காரட்டுமே என்றான், சரி என்று தலையை ஆட்டிவிட்டு தன் மனைவியை தூக்கிக்கொண்டு காரில் பின் சீட்டில் படுக்கவைத்து தானும் அவள் தலை மாட்டில் உட்கார்ந்து அவள் தலையை தன் மடிமீது வைத்துக்கொண்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

தங்கள் குழந்தையை தன் கையில் கொடுக்கச்சொல்லி அதையும் தன் கையில் வைத்துக்கொண்டு அனுவின் முகத்தை தடவிகொடுத்து, அவளிடம் கேட்டுக்கொண்டிருந்தான்,” ஏன் எங்க ரெண்டு போரையும் விட்டு போய் விட்டாய்? அனு நம் குழந்தைக்கு ஆனந்தன் என்று பேர் வைத்து ஆனந்தமாய் சிரித்தாயேம்மா, இப்போ நானும் ஆனந்தனும் என்ன செய்வோம் என் கண்ணம்மா? நான் ஏதாவது தப்பு செய்தால் என்னை தட்டிக் கேளு என்று சொல்லியிருக்கேன் இல்ல இப்படி என்னை விட்டு போய் விட்டாயே, நாம் சந்தோஷமாய் இறுக்கப போறோம்னு நினைச்சேனே இப்போ என்னை நீயும் அனாதையாக்கிட்டு போய்விட்டாயே நான் என்ன பண்ணுவேன்."

அனு, உனக்கு ஒன்னு சொல்லுறேன் நம்ம ஆனந்தனை நீ எப்படியெல்லாம் வளர்ப்பியோ, அப்படியே நான் உன்பேரை சொல்லி உன் போட்டோவை காண்பித்து வளர்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணணும், என்னனு பார்கிறாயா நீ என்னிடம் சீக்கிரமே திரும்பி வந்துடனும். தினம் ராத்திரி என்னோட பேசனும் சரியா மை ஏஞ்செல்” என்றான் சுந்தரம்.

கார் டிரைவரும், வெங்கடேசனின் மனைவியும் அவன் பேச்சை கேட்டுக்கொண்டு அழுதுக்கொண்டே வருகிறார்கள். டிரைவர் மட்டும் கண்ணாடி வழியாக பர்துக்கொண்டிரிந்தான். அனுவின் ஒரு கையை குழந்தையின் கையில் வைத்திருந்தான், இன்னொரு கையை தானே பிடித்திருந்தான்.

அதற்குள் வீடு வந்து விட்டது. வெங்கடேசனின் மனைவி காரிலிருந்து இறங்கி சுந்தரத்திடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டாள். சுந்தரமோ

அனுவின் அண்ணியிடம் குழந்தையை டிரைவரிடம் கொடுத்துவிட்டு உள்ளே போய் ஆரத்தி கரைத்து கொண்டுவாருங்கள் என்றான். ஒரு நிமிடம் இவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று எண்ணினாள் பக்கத்தில் இருந்த டிரைவருக்கும் அப்படியே இருந்தது, ஆனால் சுந்தரமோ” நான் நன்றாகத்தான் இருக்கிறேன் கொஞ்சம் சீக்கிரம் ஆரத்தி கொண்டுவாருங்கள்” என்றான்..

பின்னாடியே அனுவின் பெற்றோர் அண்ணன் காரும் வந்து சேர்ந்தது. டிரைவர், “அண்ணி உள்ளே போயிருக்கிறார்கள்” என்று சொன்னதும், அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

கையில் ஆரத்தி தட்டுடன் அனுவின் அண்ணி வந்ததும் காரிலிருந்து அனுவைத் தூக்கிக்கொண்டு இறங்கினான் சுந்தரம். டிரைவரிடம் இப்படியே குழந்தையுடன் என் பக்கத்தில் நில்லு என்றான். இப்போ ஆரத்தி எடுங்கள் என்று சொன்னான்.

ஆரத்தி எடுத்து முடித்ததும் உள்ளே அனுவை தூக்கிக்கொண்டு போகையில் டிரைவரிடம், குழந்தையை என் பெட்டில் படுக்க வை” என்றான் சுந்தரம். டிரைவரும் அவன் சொன்ன மாதிரியே செய்தான்.

அனுவையும் நேரே தன் பெட்ரூமில் தன் பெட்டில் படுக்கவைத்து தானும் உட்கார்ந்து தன் மேலே சாய்த்துக்கொண்டான்.

எல்லோருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.. அனுவின் அண்ணி உள்ளே வந்து குழந்தையுடைய சர்க்கரை தண்ணீரை பக்கத்தில் வைத்தாள். அந்த ஸ்பூனை அனுவின் கையில் வைத்து “இந்த, நம் ஆனந்தனுக்கு உன் கையால் சர்க்கரை தண்ணீர் கொடு. அப்புறம் உன்னால் கொடுக்க முடியாது” என்று கூறி அவனே அவள் கையை பிடித்து தண்ணீரை குழந்தை வாயில் ஊற்றினான் குழைந்தையும் சப் சப் என்று சத்தம் செய்து சாப்பிட்டதும் தன் பொக்கை வாயை திறந்து சிரித்தது. அதைப் பார்த்து அனுவிடம்,” இங்கே பாரு கண்ணம்மா நம் பையன் அம்மா கையால் சர்க்கரை தண்ணீர் குடித்தானாம் என்ன சந்தோஷம் பாரு” என்றான் சுந்தரம்.

“இதுக்கே இவ்வளவு சந்தோஷமென்றால் உன்னிடம் பால் குடித்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாய் இருந்திருப்பான் இல்ல... பாவம். கண்ணம்மா அவனை உன்னோட இடத்திலிருந்து நான் பார்த்துக்கிறேன். ஆனால் நீ எனக்கு ப்ராமிஸ் செய்த மாதிரி சீக்கிரம் என்னிடம் வந்துடனும் சரியா? வந்துடுவ இல்ல நான் உனக்காக காத்திருப்பேன்” என்றான் சுந்தரம்.

தொடரும் 

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.