(Reading time: 12 - 23 minutes)

06. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

னுவின் அண்ணன், அப்பா, அண்ணி என்று எல்லோரும் வந்து வந்து போகின்றனர் ஆனால் சுந்தரதிற்கோ எந்த உணவுமின்றி தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான், இதைக் கண்ட ஒவ்வோருவரும் அழுது புலம்பிகொண்டிருன்தனர். வெங்கடேசன் உள்ளே வந்து “மாப்பிள்ளை நம் அனுவின் கடைசி காரியம்” என்று ஆரம்பித்தான், சுந்தரமோ “வெங்கடேசன் எல்லாம் பண்ணலாம் ஆனால் இப்படியே அவளை நானே என் காரில் கொண்டு போகவேண்டும் அதுமட்டுமில்ல யாரும் அழகூடாது ஏன்னா அனு திரும்பி வருவா எனக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கா சரியா” என்று சொல்லி “கொஞ்சம் டைம் கொடுங்க அவளுக்கு டிரஸ் பன்னிடறேன்” என்றான்.

வெளியில் வந்து அவன் கூறியதும் அனுவின் தந்தை வெளியே போய் “என் பெண்ணிற்கு என் கண்ணே பட்டுவிட்டதே இப்படி ஒரு புருஷன் கிடைத்தும் அனுபவிக்க முடியவில்லையே” என்று அழுதார். அம்மாவோ ஒன்றுமே பேசாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

சுந்தரம் தன் மனைவிக்கு தான் வாங்கிய, தனக்கும் தன் மனைவிக்கும் ரொம்ப பிடித்த அந்த பட்டுப் புடவையை அவளுக்கு கட்டிவிட்டான் தலையை மேலோடு வாரி முகத்தில் பொட்டு வைத்து அழகுப் படுத்தி வெங்கடேசனை கூப்பிட்டு “ உங்க அப்பா, அம்மாவை கூப்பிட்டு வாங்க” என்று சொன்னான்..அவர்கள் வந்ததும் அனுவின்அழகான முகத்தை பார்த்ததும் அவர்களுக்கு அழுகை பொங்கி வந்தது. அவர்களை “அழக்கூடாது உங்களுக்கு உடம்புக்கு வரப் போகிறது” என்றான் சுந்தரம், அனுவின் அப்பாவோ “இந்த புருஷனுடன் வாழ குடுத்து வைக்க வில்லையே இந்த பெண்ணுக்கு என்று புலம்பினார்”.

“இத பாருங்கோ அவளை நல்லபடிக்க அனுப்பிவைக்கணும் ஆனால் அனு திரும்பி வருவாள்! எனக்காக வருவாள்! அதனால் நீங்கள் அழுது புலம்பி உங்கள் உடம்பை கெடுத்துக் கொள்ளக் கூடாது” என்றான் சுந்தரம்.

அவள் அம்மாவோ பெரிய குரல் எடுத்து அழுதாள் “என் பெண் சந்தோஷமாக இருக்கிறாள் நல்ல புருஷன் கிடைத்தார் என்று பெருமிதம் கொண்டிருந்தேன் இப்படி எங்களை அழ வைத்து விட்டு தன் குழந்தையை கையில் எடுத்து கொஞ்சாமல் கூட போய்விட்டாளே” என்று புலம்பினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

சுந்தரம், மாமியாரையும், மாமனாரையும் தன்னுடன் கட்டிக்கொண்டு “அழக்கூடாது என்று சொன்னேன் இல்லையா. அனு உடல் தான் நம்மை விட்டு பிறிகிறது மற்றபடி அவள் நினைவும் அவள் குடுத்த ஆனந்தனும் நம்மிடம் அவள் நினைவாக இருக்கு, அதனால் அழாமல் அவளை வழி அனுப்பி வையுங்கள்” என்றான், இதைக் கேட்ட வெங்கடேசனும் அவன் மனைவியும் ஓ.. என்று கதறி அழுதனர். அனுவை தூக்கிக் கொண்டு வெளியே எடுத்து வந்தான் அங்கே சோபாவில் கொஞ்சநேரம் தன் மடியிலேயே படுக்க வைத்தான் கையில் தன் குழந்தையை வாங்கி வைத்துக் கொண்டான். ஒரு பெரிய கூட்டமே அங்கு நிறைந்திருந்தது. தன் கம்பெனியிலிருந்து எல்லோரும் வந்திருந்தனர்.

தியாகராஜன் ஐயா அவனை நெருங்கி வந்தார் அவரை பார்த்தவுடன் அவன் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் வழிந்தது.அவருக்கும் கண்ணீர் வழிந்தது. தன் குழந்தையை காண்பித்தான் அவரிடம், “உங்கள் ஆசிர்வாதம் என் குழைந்தைக்கு வேண்டும் ஐயா” என்றான். அவரால் பேச முடியவில்லை தன் கையை அந்த குழந்தையின் தலையில் வைத்தார், கண்ணீருடன் சுந்தரத்தின் கண்ணீரை துடைத்தார்.

அதற்க்கு மேல் கிளம்பலாம் என்று வெங்கடேசனிடம் சொல்லி குழந்தையை வெங்கடேசன் மனைவியிடம் கொடுத்துவிட்டு “பார்த்தியா அனு உன்னை பார்க்க எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்..” என்று கூறி அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து “வா போகலாம்” என்று அவளை தூக்கிக்கொண்டான்.

காரில் அவைளை படுக்க வைத்துவிட்டு அவள் தலை பக்கம் உட்கார்ந்து தன் குழந்தையை முன் சீட்டில் வெங்கடேசன் மனைவியை வைத்துக்கொள்ளச் சொன்னான். அப்படியே அவளுடன் பேசிக் கொண்டே போனான்.

அங்கு எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருந்தார்கள். அதுவரை தன் மடியிலேயே தன் மகனை கையிலும் மனைவியை மடியிலும் வைத்துக்கொண்டிருந்தான். அவளை நெருப்பில் போடுவதை தன்னால் பார்க்க முடியாது என்று தன் மகனை கொடுத்துவிட்டு வெங்கடேசனிடம்” நீங்களே அவளை என்று... “இழுத்தான், வெங்கடேசன் அவன் சொல்லுவதைப் புரிந்துக்கொண்டு சரி என்றான். “நான் எல்லாம் முடிந்து உங்கள் கையில் சாம்பல் வரும் வரை மெடிடேட் செய்கிறேன் என்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்” என்றான்.

ல்லாம் முடிந்து விட்டது…

 அதற்க்கு பிறகு தன் குழந்தையை தானே பார்த்துக்கொண்டான் அவன் மாமியார் அடுத்த ஆறு மாதத்திலேயே இறந்துவிட்டார், அடுத்த மூன்று மாதத்தில் மாமனாரும் இறந்துவிட்டார். அவன் வாழ்க்கையில் அவனும் அவன் ஆனந்தனும் மட்டும்தான், அவன் மனக் கஷ்டத்தையெல்லாம் தன் காதல் தேவதை அனுவின் நினைவைப் போக்க தன் வேதனையிலிருந்து தன்னை மீட்க, வேலையில் தன்னை மூழ்கடிதுக்கொண்டான். தன் தொழில் பெரிய அளவில் வளர்ந்து எல்லா பெரிய நகரத்திலும் ஒரு கிளை உருவானது. உலக அளவில் நல்ல பெயரும் பெற்றுக்கொண்டிருந்தது. தன் மகனை அமெரிக்காவிற்கு அனுப்பி படிக்க வைத்தார் சுந்தரம். வயது நாற்பத்தைந்து ஆகி விட்டது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.