(Reading time: 12 - 23 minutes)

டெலிபோன் மணி அடிப்பது எங்கேயோ கேட்பது போல் இருந்தது. தன் உணர்வு பெற்று வந்தார்.  

ஓர் பெருமூச்சு விட்டு எழுந்து டெலிபோனை எடுத்தார்.

"ஷ்யாம் பேசறேன் சார்" என்றது டெலிபோனில் பேசிய மனிதன்..

"ஹான்! சொல்லுங்கள் ஷ்யாம் " என்றார் சுந்தரம்.

"சார் அவர்களுடைய கம்ப்ளீட் டீடைல்ஸ் கிடைத்து விட்டது நான் இப்போ வந்து உங்களைப் பார்க்கலாமா?" என்றான் ஷ்யாம்.

"வாங்க நான் வீட்டில்தான் இருக்கிறேன்" என்றார் சுந்தரம்.

மனசுக்குள் ஏதோ ஓர் பட்டாம்பூச்சி பறக்கிராற்போல் ஓர் உணர்வு. சந்தோஷமாக இருந்தது, இத்தனை வருடங்களில் தனக்கு ஒரு கல்யாணம் என்றும் தோன்றவில்லை தன்னை எந்த பெண்ணும் கவரவில்லை. ஆனால் இப்போது..............

என்ன பண்றது என்ற பெரிய கவலை ஒரு புறமென்றாலும். அவள் தனக்கு வேண்டுமென்று மனது பிடிவாதம் பிடித்தது. இது தப்பா, சரியா என்பது பற்றி நினைக்க தோன்றவில்லை.

தன் மகனின் வயதையொத்த பெண் என்று தோன்றவில்லை, என் அனு என்னை ஏமாற்றவில்லை என்று மட்டும்தான் தோன்றியது. மதிற்குள் எல்லையில்லா சந்தோஷம். ஒரு சின்னப் பையனைப் போல் இருந்தது. அவளை எப்போ பார்ப்போம் என்றிருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

ஷ்யாம் வந்து விட்டான்.

" சார் அந்த பெண்ணைப் பற்றி எல்லாம் சேகரித்துவிட்டேன். அவங்க பேர் ராதா அவங்க இப்போதான் ஒரு ஸ்கூல்ல டீச்செராக சேர்ந்திருக்கிறாங்க, அப்பா பேர் ராஜேந்திரன் அவர் ஒரு ஸ்கூல் டீச்சராக இருந்தார் இப்போ அவர் உடம்பு சரி இல்லாமல் வீட்டில்தான் இருக்கார். அம்மா பேர் சாந்தி அவர்கள் மிகவும் நல்லவங்க இருக்கிற இடமே தெரியாது அவங்க புருஷன்தான் உலகமே. அடுத்து இரண்டு தங்கைகள் இரண்டு பேரும் ட்வின்ஸ், இரட்டைப் பிறவிகள். கொஞ்சம் வருமானத்துக்காக கஷ்டப்படுகிற குடும்பம்" என்றான் விவேக். "இதுதான் அவர்கள் அட்ரஸ்" என்று அட்ரஸ் எழுதிய பேப்பரை அவரிடம் கொடுத்தான்.

"ரொம்ப தேங்க்ஸ் ஷ்யாம். உங்களுக்கு ரொம்ப கடமைப் பட்டிருக்கிறேன்" என்று சொல்லி,"உங்கள் பீஸ் எவ்வளவு என்று சொல்லுங்கள் கொடுக்கிறேன்" என்றார் சுந்தரம்.

அவனும் சிரித்துக்கொண்டே“நீங்கள் எது கொடுத்தாலும் நான் வாங்கிக் கொள்கிறேன். உங்களுக்கு உதவ முடிந்தது பெரிய சந்தோஷம் "என்றான் ஷ்யாம்.

உடனே செச்புக்கை எடுத்து ஐம்பது ஆயிரம் எழுதி அவனிடம் கொடுத்தார்.

 அவன் அதைப் பார்த்து “இவ்வளவா நான் சின்ன வேலை தான் செய்தேன் அதற்கெதுக்கு இவ்வளவு என்றான். அதனால் பத்தாயிரம் போதும்” என்றான் ஷ்யாம்.

“நீ நல்ல பையன்ப்பா, எல்லோரும் இன்னும் கொண்டா என்று கேட்பார்கள் நீ என்ன இப்படி சொல்லுறே பிழைக்கப் பார். அதுமட்டுமில்லை நீ செய்திருக்கும் வேலை எனக்கு எவ்வளவு முக்கியம் என்று உனக்குத் தெரியாது. இந்த பணத்தை நீ வாங்கிக் கொண்டால் தான் நான் சந்தோஷமாக இருப்பேன்” என்று சுந்தரம் சொன்னவுடன், “சரி சார் நான் வாங்கிக் கொள்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டான் ஷ்யாம்.

அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.”நான் வருகிறேன் சார் எப்போ என்ன வேலையா இருந்தாலும் என்னை கூப்பிடுங்கள் சார். தேங்க்ஸ்!” என்று சொல்லி விட்டு போய்விட்டான்.

அந்த அட்ரசையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம். பிறகு தன்னுடைய செக்ரட்டரி சிவாவை போனில் அழைத்தார்," சிவா கொஞ்சம் வீட்டிற்கு வா" என்றார் சுந்தரம்.

சுந்தரத்தின் புது செக்ரட்டரி முப்பத்தி இரண்டு வயது இன்னும் கல்யாணம் ஆகவில்லை படு சுறுசுறுப்பு. தன்னுடைய இரண்டு தங்கைகளுக்கும் கல்யாணம் செய்துவிட்டுத்தான் அவன் கல்யாணம் செய்துக்கொள்ளவேண்டும் என்றிருந்தான். ரொம்பக் கெட்டிகாரன். சுந்தரத்திடம் மிகவும் மதிப்பு வைத்திருப்பவன். சுந்தரமும் அவன் மேல் அக்கறைக் கொள்பவர்.

அடுத்த அரை மணிக்குள் சுந்தரத்தின் வீட்டில் இருந்தான் சிவா " வா சிவா நாம் இருவரும் வெளியே போகவேண்டும் வா நீ இன்னும் லஞ்ச் சாபிட்டிருக்க மாட்டாய்,” என்று உள்ளே சமையால் காரரை கூப்பிட்டு “சிவாக்கும் தட்டு வை” என்றார்.

சுந்தரமும், சிவாவும் கம்பெனி நிலவரங்கள் பற்றிப் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

பின் " கிளம்பலாம் வா" என்று கூறினார் சுந்தரம் “ இன்னும் இரண்டு நாள் மீட்டிங் எல்லாம் கான்சல் பண்ணிடு சிவா, எனக்கு கொஞ்சம் பர்சனல் வேலை இருக்கு " என்று கூறி தான் இன்று பார்த்தது, டிடக்டிவ் ஏஜேன்சி வைத்து தான் கண்டுபிடித்தது எல்லாம் சொன்னார்.

சிவாவிற்கு ஒரே ஆச்சர்யம், "சார் நீங்க இப்ப என்ன பண்ணப்போறீங்க?” என்று கேட்டான் சிவா.

" தெரியல்லை சிவா, அவர்கள் வீட்டில் அவள் அப்பாவிடம் பேசலாம், எல்லாவற்றையும் சொல்லாம் என்று இருக்கிறேன், பிறகு அந்தப் பெண்ணிடமும் பேசலாமென்று இருக்கிறேன். பார்க்கலாம் எல்லாம் அந்த கடவுள் செயல்" என்றார் சுந்தரம்.

" யாரிடமும் இதைப் பற்றி பேச இஷ்டமில்லை, அவளை நான் பார்த்ததிலிருந்து நான் நானாக இல்லை சிவா என் அனுவின் ஞாபகம் என்னை வதைக்கிறது சிவா! என்னை மிகவும் வதைக்கிறது" என்று புலபினார் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.