(Reading time: 12 - 23 minutes)

"சார் கண்ட்ரோல் யுவர்ஸெல்ப், உங்களை நான் இந்த மாதிரி பார்த்ததில்லை, உங்கள் மனது எனக்கு நன்றாகப் புரிகிறது, கடவுள் உரிய நேரத்தில் அவங்களை உங்கள் கண்ணுக்கு காட்டியிருக்கிறார், அதனால் எல்லாமே நல்லதாகத்தான் முடியும், கவலைப்படாதீர்கள்" என்று அவருக்கு சமாதானம் சொன்னான் சிவா.

அவர் சொன்ன அட்ரசுக்கு வந்து விட்டார்கள். சுந்தரத்திற்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது. பெரிய பெரிய பிசினெஸ் பேசும்போதெல்லாம் இந்த மாதிரி படபடப்பு இருந்ததில்லை ஆனால் இப்போது?

அவர் படபடப்பை வெளியே காண்பித்துக் கொள்ளாமல் "இங்கு திரு ராஜேந்திரன் என்று" அங்கு எதிரில் வந்துக் கொண்டிருந்த ஒரு ஆளைப் பார்த்துக் கேட்டார். அவனும், "நேரே போங்க இரண்டாவது கதவு"என்றான் இடது புறமாக காண்பித்து.

அவர் சென்று அந்த இரண்டாவது கதவை தட்டிவிட்டுக் காத்திருந்தார், காத்திருந்த நேரத்தில் நினைத்துக்கொண்டார் அங்கு மாளிகை மாதிரி வீடு இருக்க, இங்கு நீ கஷ்டப் படவேண்டுமா? என்று, அவர் கூட சிவாவும் இருந்தான்.

அப்போது கதவைத் திறந்து ஒரு வயதான மாது "யார் வேண்டும் உங்களுக்கு "என்று கேட்க அவள் மனமோ இவர் பெரிய மனுஷன் போல இருக்கிறாரே என்று, தலை நிமிர்ந்து பார்த்த சுந்தரம் ரொம்ப ஒல்லியாக கொஞ்சம் சுருக்கம் விழுந்து தலை நிறைத்து பார்க்க பாவமாக இருந்தது அந்த மாதைப் பார்க்க "இங்கு திரு ராஜேந்திரனைப் பார்க்க வேண்டும்"என்றார்.

"உள்ளே வாங்க, நீங்க யாரென்று தெரியல"என்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

"இல்லை உங்களுக்கு மட்டுமில்லை உங்கள் கணவருக்கும் நான் யாரென்று தெரியாது" என்றார் சுந்தரம்.

" உட்காருங்க, அவரை கூப்பிடறேன்” என்று அவர் செல்லும்போதே, ராஜேந்திரன் அங்கு வந்தார்.

"நான்தான் ராஜேந்திரன் நீங்கள் யாரன்று தெரியவில்லை" என்றார் அவர்.

ஒரு நிமிஷம் அவரையே பார்த்தார் பாவம் உடம்பு சரியில்லை வருமானம் குறைவு அதனால் போஷாக்கும் இல்லாமல் பாவம் உடம்பில் சுருக்கமும் தலை நிறையும்

பார்க்க கஷ்டமாக இருந்தது.

கொஞ்சம் தொண்டையை கனைத்துக்கொண்டு தன்னைப் பற்றி தான் ஒரு ஆடோமொபில் கம்பனியின் முதலாளி என்றும் தன்னைப் பற்றி சுருக்கமாக தன் கல்யாணத்தை பற்றியும், தன் மகன் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறான், என்றும் தன் கூட வந்திருப்பது தன் செக்ரட்டரி மட்டுமல்ல அவன் தன் தம்பி போலவும் என்று சொல்லி இவன் பெயர் சிவா என்று அறிமுகப் படுத்திவைத்தார்.

பிறகு தன் பாக்கட்டில் இருந்த போட்டோவை எடுத்து காண்பித்தார் முதலில் அனு தனியாக இருந்த போட்டோ வைக் காண்பித்தார் அது அனு தன் திருமணத்திற்கு முன்பு எடுத்த போட்டோ, அதைப் பார்த்தவுடன் "என் பெண்ணின் போட்டோ உங்களிடம் எப்படி வந்தது" என்று கேட்டார் ராஜேந்திரன், அதற்கு சுந்தரமோ "இது என் மனைவியின் போட்டோ என்றார்."

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை " என்ன பேசுகிறீர்கள்" என்றார் ராஜேந்திரன்,அதற்கு சுந்தரம் "கொஞ்சம் முன்னால் உங்களிடம் என் மனைவி பத்தொன்பது வருடத்திற்கு முன்னால் இறந்து விட்டாள் என்று சொன்னேனே ஞாபகம் இருக்கிறதா? "என்று கேட்டார்.

"ஆமாம் " என்றார் ராஜேந்திரன்,

"அவளிடம், அவள் இறந்தபோது, நான் என்னிடம் திரும்பி வந்துவிட வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டேன். எனக்கு அந்த நம்பிக்கையும் இருந்தது. "

“என்ன இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது?” என்றார் ராஜேந்திரன்.

"கரெக்ட் ! எல்லோரும் என்னை அப்படித்தான் நினைத்தார்கள் அப்போது. ஆனால் எனக்குத் தெரியும் அவள் திரும்பி வருவாள் என்று, எனக்கு அந்த நம்பிக்கை இருந்தது, எனக்கும் அவளுக்குமான காதல் இன்னும் இறக்கவில்லை" என்றார் சுந்தரம்.

"உங்கள் மகளுக்கு இப்போது என்ன வயது ?" என்று கேட்டார் சுந்தரம்.

"பத்தொன்பது" என்றார் ராஜேந்திரன். " என் மனைவி இறந்து பத்தொன்பது வருடம் ஆகிறது" என்றார் சுந்தரம்.

"என்ன ஆச்சர்யமா இருக்கிறதா?" என்று கேட்டார் சுந்தரம், அதற்கு "ரொம்ப அதிசயமாக இருக்கிறது" என்றார் ராஜேந்திரன்.

பிறகு " எங்கள் திருமண போடோவைப் பாருங்கள்" என்று அதை எடுத்துக் கொடுத்தார் ராஜேந்திரனிடம். அதைப் பார்த்தவர் சுந்தரத்திற்கு இப்போதைக்கும், அப்போதைக்கும் பெரிய வித்யாசம் இல்லை என்று தோன்றியது.

" உங்களுக்கு இப்போது என்ன வயது?" என்று கேட்டார் ராஜேந்திரன்.

'எனக்கு நாற்பத்திமூன்று" என்று சொன்னார் சுந்தரம்.

"சொல்லுங்க என் மகளைப் பற்றி எப்படித் தெரியும் உங்களுக்கு" என்றார் ராஜேந்திரன்.

பிறகு தான் இன்று காலை இந்த தெரு வழியாக போனதும் அவளைப் பார்க்க நேர்ந்ததும் அதை அடுத்து டிடெக்டிவ் ஏஜென்சி மூலமாக மற்ற டீடைல்ஸ் கிடைத்தது என்றும் சொன்னார் சுந்தரம்.

"இப்போது என்ன எதிர் பார்கிறீர்கள்?" என்று நேரடியாக கேட்டார் ராஜேந்திரன்.

தொடரும் 

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.