(Reading time: 11 - 22 minutes)

07. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

கொஞ்ச நேரம் பதில் சொல்லவில்லை பிறகு " நான் முதலில் ராதாவிடம் பேச வேண்டும் அதற்கு பிறகு என்ன என்று சொல்கிறேன்" என்றார் சுந்தரம்.

ராஜேந்திரனும் "எப்போ பேச வேண்டும்?" என்று கேட்டார்.

"இன்றே நன்று" என்று சொன்னார் சுந்தரம்.

"நான் சிவாவை அனுப்பி என் ஆபீசுக்கு கூட்டி வரச் சொல்லுகிறேன் அங்கு நான் பேசுகிறேன்."என்றார் சுந்தரம்.

"இல்லை, நீங்கள் நினைப்பது போல் இல்ல என் மகள் யார் கூப்பிட்டாலும் அப்படி போவதற்கு, நான் சொல்ல வேண்டும் அவளிடம்" என்றார் ராஜேந்திரன்.

ஆனால் சுந்தரமோ " எனக்கும் நல்லதல்ல என்று தெரியும் ஆனால், அவளுக்கு ஒன்றுமே விஷயம் தெரியாமல் என்னைப் பார்த்தால் ஏதாவது உணர்ச்சி பழைய ஞாபகம் ஏதாவது வருகிறதா? என்று பார்க்க வேண்டும். நீங்கள் சொல்லி வந்தால் அது என்ன என்று தெரியாது" என்றார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

"சரி நான் சிவாவுடன் போய் அவளைக் கூட்டிக்கொண்டு உங்கள் ஆபீசுக்கு வருகிறோம், ஆனால் என் பெண்ணிற்கு ஏதாவது மன வேதனை வந்தால் என்னால் பொறுக்க முடியாது" என்றார்,

 " அப்படி வர விடுவேனா? அவள் எனக்கும் முக்கியம், என்னதான் அவள் உங்கள் பெண்ணாக இருந்தாலும் அவள் என் மனைவியின் உருவில் இருக்கிறாள். அவளுக்கு இபோதுதான் பத்தொன்பது வயதாகிறது, என்னைப் பற்றி ஏதும் தோன்றினாலும் அவளால் அதைப் புரிந்துக்கொள்ளும் அறிவு இந்த வயதில் தான் தோன்றும் அதனால் தான் ….நான்…. அவள், என்னை நேரே பார்த்தால் ஏதாவது தோன்றுகிறதா என்று பாப்போம் நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றேன்" என்று உணர்ச்சி பூர்வமாக கூறினார் சுந்தரம்.

ஏதோ சொல்லவந்தார் ராஜேந்திரன், ஆனால் அவர் மரியதைப்பட்டவர் என்று நினத்துக்கொண்டு அவர் என்ன மனநிலையில் உள்ளாரோ என்றும் தோன்றியது.

உள்ளுக்குள்ளேயே இருந்து அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த சாந்திக்கு இந்த பேச்சு எதுவுமே பிடிக்கவுமில்லை. என்ன இவர், இந்த வயதில் கொஞ்சம் கூட தன் மகளை போன்ற பெண்ணை தன் மனைவி என்று சொல்கிறார் இவரும் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. ஆனால் அவர்தான் கணவர் பேசும்போது குறுக்கே பேசாதவர் ஆச்சே அதனால் பேசாமல் இருந்துவிட்டார்.

"சரி எல்லாம் கடவுள் விட்ட வழி" என்று கூறி "கிளம்பலாமா?" என்றார் ராஜேந்திரன்.

அவருக்கும் ஒன்றம் புரியவில்லை. இவர் என்ன நினைக்கிறார் தன் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள நினைகிறாரா? என் வயதை ஒத்த இவருக்கு எப்படி நான் மணமுடித்து வைக்க முடியும்? என்று பலவாறாக யோசித்தார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சிவா ஆபீசுக்கு போன் செய்து ஒரு காரை அந்த அட்ரஸ் கொடுத்து அனுப்ப சொல்லிவிட்டான். அந்தக் கார் வாசலில் காத்திருந்தது.

"அப்போ நான் கிளம்புகிறேன் சார் நீங்கள் உங்கள் பெண்ணை அழைத்து வந்து விடுங்கள்" என்றார் சுந்தரம் .

"நீங்க எப்படி போவீங்க, வேண்ணா நாங்க ஆட்டோவில் வரோம்"என்றார் ராஜேந்திரன். அதற்க்கு சுந்தரம் " இனிமேல் ராதாவை அப்படியெல்லாம் அலைய விடமாட்டேன்" என்று கூற, "அதற்க்கு அவசியமில்லை ஆபீசுக்கு போன் செய்து இன்னொரு காரை அனுப்ப சொல்லி விட்டேன் என்றான் சிவா.

சிவாவைப் பார்த்து ஒரு பாராட்டுதலான புன்னகையை வீசினார் சுந்தரம்

"தேங்க்ஸ் சிவா" என்றார் சுந்தரம் அதற்கு அவன் "இட்ஸ் மை டியூட்டி சார்" என்றான் சிவா.

எப்பவுமே சுந்தரத்திடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு,தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார், பாராட்டுதலும் தருவார், தெரியாததைச் சொல்லிக் கொடுப்பார். அவரிடம் வேலைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ராஜேந்திரன் ஒரு நிமிஷம் பிரமித்துப் போய் விட்டார் தன்னிடம் வேலைப் பார்க்கும் ஒருவனுக்கு நன்றி சொல்லுகிறார், எவ்வளவு பெரிய மனுஷன் இவர் என்று நினைத்துக்கொண்டார்.

சரி நான் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு "உங்கள் மனைவியிடம் சொல்லிவிடுங்கள் "என்று சொன்னார் சுந்தரம்.

அவர் கிளம்பி தன் காரை அவர்களுக்கு விட்டு விட்டு மற்றொரு காரில் புறப்பட்டார். வழி முழுவதும் ராதாவை நினைத்துக்கொண்டார். எப்படி பேரில் கூட பொருத்தமாக ராதா என்றிருக்கிறது. அனு ராதா, ராதா. எப்படி இது சாத்தியம் தோன்றியது. அவள் வந்தால் என்ன பேசுவது, இந்த வயதில் கிழவனுக்கு ஆசையை பாரு என்று நினைத்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்தார். கூடவே எவ்வளவோ பேருக்கு இந்த வயதில் முதல் கல்யனமாவதில்லையா? என்றும் ஆனால் யாரும் இவ்வளவு சின்ன பெண்ணை கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டார்கள் அதெல்லாம் அந்தக் காலம், ஆனால் நான் என் மனைவியை அவள் மறு பிறவி எனக்காகவே எடுத்து வந்திருக்கிறாள் அவளைத்தானே கல்யாணம் பண்ணவேண்டுமென்று ஆசைப் படுகிறேன் பரவில்லை என்று சமாதானம் செய்துக் கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.