(Reading time: 11 - 22 minutes)

சுந்தரத்தின் கைகளில் அடைக்கலமான ராதா கண்ணையே திறக்காமல் அவருடன் ஒட்டியே இருந்தாள். எவ்வளவு நேரமோ தெரியவில்லை சுந்தரம் தன் உணர்ச்சியை கட்டுக்குள் கொண்டு வந்தார். அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து அவளைக் கூட்டிக் கொண்டு அங்கிருந்த சோபாவில் உட்கார வைத்து,தானும் அவள் பக்கத்தில் உட்கார்ந்து, அவளிடம் "சொல் என்னை யாரென்று தெரியுமா? எதற்க்காக அந்த உணர்ச்சியை என்னைப் பார்த்ததும் காண்பித்தாய்?" என்று கேட்டார்.

ஆனால் அவளோ அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கையை பிடித்துக் கொண்டார் சுந்தரம்.

"சொல்கண்ணம்மா" என்றார். பிறகு அவளுக்கு ஞாபகம் வந்து "அப்பா எங்கே?" என்றாள்.

அப்பா.... வெளியேதான் இருக்கார் கண்ணம்மா …... கூப்பிடனுமா? என்று கேட்டார் சுந்தரம்.

இல்லை அவர் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்? அவரெதிரிலேயே நான் உங்களிடம்.... என்று வெட்கத்தால் முகம் சிவந்தது. அதைப் பார்த்த சுந்தரம் தன்னை இழந்துக் கொண்டிருந்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"ராதா நான் உன்னிடம் பேசவேண்டும், நீயும் நானும் தனியாக பேசவேண்டும். அதனால் அப்பாவை வீட்டிற்க்கு அனுப்பி விட்டு பிறகு பேசலாமா? "என்று கேட்டார் சுந்தரம்.

"அப்பா ஒத்துக்க மாட்டார் நீங்கள் என்ன பேசவேண்டும் என்னிடம்? அவரை உள்ளே கூப்பிடலாம் இல்லையென்றால் என்னைத் தப்பாக எடுத்துப்பார்." என்று கேட்டாள்.

"நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை" என்று கேட்டார் சுந்தரம்.

"ம், தெரியும்" என்றாள்,"

“சொல்லு நான் யார்?" என்றார் சுந்தரம்.

“தினம் எனக்கு ஒரு கனவு வரும், அந்த கனவில் நீங்கள்தான் வருவீர்கள், என்..."என்று நிறுத்தினாள்... "ம், மேலே சொல்லு.... உன்...." என்று ஊக்கப் படுத்தினார் சுந்தரம்.

அவள் " வெட்கப்பட்டுக் கொண்டே என் கணவனாக" என்றாள்.

" சரி அதைப் பற்றி இன்னும் பேசவேண்டும், நாம் நம் வீட்டில் போய் பேசலாம், இப்போ அப்பாவிடம் நான் பெர்மிஷன் வாங்கறேன் என்ன சரியா" என்றார் சுந்தரம்.

அவர் சிவாவுக்கு "கால் செய்து ராதா அப்பாவை உள்ளே வரச் சொல்" என்றார் சுந்தரம்.

உடனே அவர் உள்ளே வந்தார் கூடவே சிவா எல்லோருக்கும் மில்க் ஷேக் கொண்டு வந்தான். எல்லோரிடமும் கொடுத்து விட்டு வெளியே போய் விட்டான்.

ராதாவால் அவள் அப்பாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லை

அவள் அப்பாவும் அவளைப் பார்க்கவில்லை. சுந்தரம்தான் பேச ஆரம்பித்தார் " நீங்கள் மில்க்ஷேக்கை எடுத்துக் கொள்ளுங்கள், நீயும் எடுத்துக் கொள் ராதா " என்றார், பின்பு ராஜெந்த்ரனை பார்த்து " நான் கொஞ்சம் ராதாவுடன் பேச வேண்டும், அவளை நானே கொண்டு வந்து விடுகிறேன் உங்கள் வீட்டில்" என்றார்.

ஆனால் ராஜெந்த்ரனோ " என்ன பேச வேண்டும் இதற்க்கு மேல்,என் பெண்ணை அப்படியெல்லாம் விட்டு விட்டு போக முடியாது, ஊர், உலகம் ஏதாவது பேசும், என் பெண் கல்யாணம் ஆக வேண்டியவள்" என்றார்.

சுந்தரம், ராதாவிடம் திரும்பி "நீ இதற்க்கு என்ன சொல்லுகிறாய் ராதா? உன்னை கல்யாணமாக வேண்டிய பெண் என்கிறார் உன் அப்பா, இதற்க்கு பதில் நீதான் சொல்லணும் " என்று சுந்தரம் கூறியவுடன் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. அதைக் கண்ட சுந்தரம் "ராதா, இங்கே பாத்ரூம் இருக்கிறது, நீ போய் பேஸ் வாஷ் பண்ணிக்கொண்டு வா" என்று அனுப்பி விட்டு அவள் அப்பாவிடம் " நான் அவளிடம் கல்யாணத்தைப் பற்றித்தான் பேச வேண்டும், அதனால் அவளை விட்டு விட்டு போங்க, நான் கொண்டு விடறேன்" என்றார் சுந்தரம்.

"இல்லை, அவள் கல்யாணத்தைப் பற்றி நீங்கள் ஏன் பேச வேண்டும்? அவளோட அப்பா நானிருக்கிறேன்" என்றார் ராஜேந்திரன்.

"நீங்கள் தான் பார்த்தீர்களே என்னைப் பார்த்தவுடன் எப்படி என்னிடம் வந்து ஒட்டிக் கொண்டாள் என்று, அதனால் நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறன். இனி அவள் அந்த வீட்டில் கஷ்டப்பட விட மாட்டேன்" என்றார் சுந்தரம்.

இத்தனை நாளாக அவள் அதே வீட்டில்தான் இருந்தாள், அதனால் இனிமேலும் அங்குதான் இருப்பாள், அவளுக்கு அவள் வயதுக்கு ஏற்ற வரனைப் பார்த்துக் கல்யாணம் செய்து வைப்பேன்" என்றார்.

"நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், அவள் மனதில் என்னைத்தான் கணவனாக நினைத்துக் கொண்டிருக்கிறாள், அவளால் எப்படி இன்னொருவருடன் வாழ முடியும். நீங்கள் அவள் வாழ்வைப் பாழ் பண்ண நான் விடமாட்டேன். உங்கள் பணக் கஷ்டத்தை போக்கிவிடுகிறேன், உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறேன், என் அனுவை என்னிடம் திருப்பித் தாருங்கள், என்னை விடுங்கள், உங்கள் மகளின் நிம்மதியான, சந்தோஷமான வாழ்வும் உங்களுக்கு வேண்டாமா? அதை நீங்களே கெடுக்கப் போகிறீர்களா?" என்று கேட்டார் சுந்தரம்.

"ஒன்று செய்யலாம் நாம் என் வீட்டிற்க்கு போகலாம், உங்கள் மனைவியை அங்கு அழைத்து வரச் சொல்கிறேன் அங்கு வைத்து நாம் பேசுவோம்."

தொடரும் 

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.