(Reading time: 11 - 22 minutes)

பிறகு அவளுக்கும் அதே போல ஆசை இருந்தால்தான் இது சாத்தியம் அவள் என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது ? என்ன செய்ய முடியும் எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்லிவிட்டு, தன் சொத்தில் பாதியை எழுதி வைத்து அவள் கஷ்டப் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று ஏதேதோ யோசித்தவாறே ஆபீசுக்குள் சென்றார்.

எதிரில் வந்த யாரையும் கவனிக்க வில்லை.

சுந்தரம் ரூமில் வந்தவுடன் ரிசெப்ஷனிலிருந்து போன் வந்தது, அவர் அதை எடுத்து எந்த காலும் நான் சொல்லும்வரை எனக்கு கொடுக்க வேண்டாமென்று சொல்லி எல்லாம் ஜி.எம் லைனில் கொடுத்த்விடச் சொன்னார். யாரையும் உள்ளேவிடவேண்டாமேன்றும் சொன்னார்.

சிவாவின் கூட வருபவர்கள் மட்டுமே உள்ளே வர வேண்டும் என்றார்

ராதாவைப் பார்க்க அவள் அப்பா வந்திருப்பதாக சொன்னவுடன் ஒரே பர பரப்புடன் என்ன ஆச்சு அப்பா ஏன் என்னைப் பார்க்க ஸ்கூலுக்கு வந்திருக்கிறார்? என்று பயத்துடன் அவரைப் பார்க்க வந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்...

ராதாவின் முகத்தைப் பார்த்த அவள் அப்பா பயப்படாதேம்மா ஒன்றுமில்லை லீவ் சொல்லிவிட்டு வா, நாம் ஒரு இடத்துக்குப் போக வேண்டும் என்றார்.

எப்பவுமே அப்பா என்ன சொல்கிறாரோ அதை அப்படியே கேட்கும் பெண் அவள். அதனால் ஒன்றும் சொல்லாமல் லீவ் சொல்லிவிட்டு வந்தாள்.

அவர்கள் வெளியே வந்ததும் சிவா ரொம்ப மரியாதையாக போகலாமா என்று கேட்டவுடன், ராதா தந்தையைப் பார்த்து "யார் இவர்? எங்கே போகிறோம்?" என்று கேட்டாள்?

அதற்க்கு அவர்” ஒரு கேள்வியும் கேட்காமல் வா, நாம் அந்தஇடத்திற்கு சென்றவுடன் உனக்கே புரியும், அப்படி புரியவில்லை என்றால் நாம் திரும்பி வீடு வந்தவுடன் ஏன் சென்றோம்?” என்று சொல்கிறேன் என்று புதிர் போட்டார்.

அதற்க்கு மேல் மூன்றாம் மனிதரின் முன் தன் தந்தையை கேள்விக் கேட்கக் கூடாது என்று சும்மா இருந்து விட்டாள்.

கார் கதவை அவர்களுக்காக திறந்து விட்டான் சிவா,

அவளுக்கு, என்ன இவ்வளவு விலை உயர்ந்த காரிலா செல்கிறோம்? அப்படியென்றால் யார் அப்பாவுக்குத் தெரிந்த அந்தப் பணக்காரர்? என்று யோசைனையில் ஆழ்ந்தாள்.

சிறிது நேரத்தில் அவளுக்கு ஞாபகம் இன்று காலையில் இந்தக் காரை நாம் பார்த்தோமே, நம் பின்னாலேயே வந்தது என்று, யாராக இருக்கும்? என்று தலையைப் பிய்த்துக் கொண்டாள்.

அவர்கள் ஆபீசுக்குள் நுழைந்தனர். சிவா, சுந்தரத்திற்கு மெசேஜ் அனுப்பிவிட்டான் தன் செல் போனிலிருந்து, "நாங்கள் ஆபீசுக்குள் வந்துவிட்டோமென்று."

சுந்தரத்திற்கு முதல் முறையாக அந்த ஏ சி ரூமிலும் வேர்த்தது…

சிவா அவர்களைக் கூட்டிக் கொண்டு சுந்தரத்தின் அறைக்கு சென்றான்.

போகும் வழியில் ராதா பார்த்துக் கொண்டே வந்தாள் ஒரு வேளை அப்பா தனக்கு வேறு வேலைக்கு யாரிடமாவது சொல்லி வைத்திருகிராரோ என்னவோ என்று தன் போக்கில் யோசித்துக் கொண்டு வந்தாள்.

அங்கு ஒரு அறையின் கதவை திறந்து அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு சிவா வெளியே ஒரு சேரில் உட்கார்ந்தான்.

உள்ளே நுழைந்தவுடன் யாரும் ஒன்றும் பேசவில்லை ராஜேந்திரன் அவர் பெண்ணிடம் அறிமுகம் செய்ய வாயத் திறந்தார், ஆனால் தன் பெண் சுந்தரத்தை பார்த்து ஷாக் ஆனது போல் ஆகிவிட்டாள். அவள் முகத்தில் ஒரு தவிப்பு, ஒரு வேதனை, ஒரு வேண்டுதல், ஒரு நெருக்கம் எல்லாமுமாக தெரிந்தது.

ராஜெந்த்ரனுக்கு ஒரே ஆச்சர்யம் தன் பெண் எந்த வித தேவையோ தனக்கு இது வேண்டும் என்று கேட்டதோ கிடையாது. ஆனால் அவளது இந்த உணர்வுகள் அவருக்கு புதிகாக இருந்தது.

அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ள இருவர் கண்ணிலும் கண்ணீர் வழிந்தோடியது,

அவளது அந்த முக பாவத்தை பார்த்த சுந்தரம் தன் இரு கைகளையும் அகல விரித்தார் , தன் தந்தை அருகிலிருப்பதை மறந்து ஒரு சின்னக் குழந்தை போல் அவரின் கைகளில் தஞ்சம் புகுந்தாள். அவர் அப்படியே அவளை இருக்க அனைத்துக் கொண்டார்.

அவ்விருவரின் நெருக்கத்தைப் பார்த்த ராஜேந்திரன் கதவைத் திறந்து வெளியே சென்று விட்டார். அவருக்கு தன் கை கால்கள் நடுங்குவது தெரிந்த்தது. அதைப் புரிந்துக் கொண்ட சிவா அவருக்கு ஜூஸ் கொண்டு வந்துக் கொடுத்தான்.... அவரும் அதை குடித்தார்.

அவர் கண்ணால் கண்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்னவோ சினிமா பார்பதைபோல் இருந்தது. இவளுக்கு அவர் யாரென்றே தெரியாது இப்படி போய் ஒட்டிக் கொண்டாளே, இதெப்படி என்று வாயைத்திறந்து கூறிக் கொண்டிருந்தார், சிவாவின் காதில் விழுந்துவிட்டது.

அவனுக்கு ஒரே சந்தோசம். தன் முதலாளியின் வாழ்வில் இனி சந்தோஷமாக இருக்கும் என்று. ராஜேந்திரனிடம் சொன்னான் “இனி உங்கள் வாழ்விலும் சந்தோஷம்தான்” என்று..

ராஜேந்திரன் வெறுமே தலையை ஆட்டினார் ஆனால் ஒன்றும் சொல்லவில்லை, அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.