(Reading time: 12 - 24 minutes)

ங்கு டாக்டர் ரெடியாக இருந்தார். அனுவை லேபர் வார்டுக்கு அனுப்பிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்தான் பக்கத்தில் இருக்கும் தன் மாமியார், மாமனாரிடமும் எதுவும் பேசவில்லை, ஆனால் கண்ணிலிருந்து நீர் கொட்டிக்கொண்டிருந்தது.

பக்கத்திலிருந்த அனுவின் அப்பா, "கவலைப்படாடீர்கள் மாப்பிள்ளை அவளுக்கு ஒன்றும் ஆகாது" என்று கூறி "நாங்கள் ரொம்ப கொடுத்துவைத்தவர்கள் இப்படி என் பெண்ணை தாங்குகிறீர்கள், அவள் என்ன புண்ணியம் செய்திருக்கிறாளோ”

சுந்தரம் வாயே திறக்கவில்லை.

விடியற்காலைமூன்று மணிக்கு குழந்தை அழுகிற சத்தம்கேட்டது. மூன்று பேரும் தலையைத்தூக்கி ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கொண்டனர். சிறிது நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து ‘சுந்தரம் சார் உங்களை டாக்டர் உள்ளே வரச்சொன்னார்” அவரும் பயந்துகொண்டே உள்ளே போனான்

அங்கே அவன், அனுவையும் தன் குழந்தையையும் பார்த்தான். டாக்டர் ‘உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு’ என்றார். அனுவை முதலில் பார்த்தான் சுந்தரம். ரொம்ப களைதிருப்பது தெரிந்தது. அனுவிடம் "எப்படி இருக்கே அனு, நமக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது, தேங்க்ஸ் டா கண்ணா!” என்று கூறி அவள் நெற்றியிலும், கன்னத்திலும் முத்தம் கொடுதான், பின் பையனுக்கு என்ன பேர் வைக்க வேண்டும்" என்று கேட்டான். அவள் சிரித்துக் கொண்டே "உங்கள் பையனை பெற்றுகொடுத்தேன் அதற்கு என்ன பேர் என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்" என்றாள் ரொம்ப மெதுவாக.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

“ரொம்ப கஷ்பட்டாயா உன் முகமே சொல்கிறது நீ எவ்வளவு கஷ்டப்பட்டாய் என்று" என்றான், அதற்க்கு அவள் "இது கஷ்டமா? இது ஆனந்தம், என் அருமையான கணவனுக்கு என் அன்பு பரிசு, இவன், நம் அன்பிற்கும், காதலுக்கும் ஆனந்த பரிசு, இந்த நேரம் ஒரு ஆனந்தமான நேரம்” என்று சொல்லி “நம் மகனுக்கு ஆனந்தன் என்று பெயர் வைக்கலாமா?" என்றாள்.

சுந்தரம் கண் கலங்கி ‘என்னை விட உனக்குத்தான் உரிமை அதிகம் ஏன் தெரியுமா அவன் உன் வயிற்றில் வந்ததிலிருந்து இன்று வரை நீ பட்ட கஷ்டம் எவ்வளவோ" என்றான் சுந்தரம்.

“நீ சொன்ன பெயரையே வைத்துவிடு இப்பவே அவன் காதில் இரண்டு பேரும் சேர்ந்து சொல்லுவோம்" என்றான்.

தலை குனிந்து இருவரும் ஆனந்தன் என்று குழந்தையின் காதில் சொன்னார்கள். பிறகு மறுபடியும் அவள் உதட்டில் ஒரு முத்தம் வைத்து ‘நான் வெளியே இருக்கேன் உன்னை வார்டில் கூட்டி வரும்போது பார்கிறேன்’ என்றான் சுந்தரம். இருவர் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீருடன் சுந்தரம் வெளியே போனார்.

அங்கு அனுவின் அம்மா, அப்பாவிடம் விஷயத்தை சொன்னார். ‘தன் மகனுக்கு அனுவே ஆனந்தன் என்று பெயர் வைத்துவிட்டாள்’ என்றான்.

சிறிது நேரத்தில் அங்கு ஒரே பரபரப்பாக இருந்தது. என்னவென்று புரியவில்லை, சுந்தரத்தை டாக்டர் வரச்சொன்னார், உள்ளே சென்று பார்த்தால் அனுவிற்கு தூக்கி தூக்கி போடுகிறது அவனால் அதைப பார்க்க முடியவில்லை அங்கிருந்த ஒரு ஆயாவைக் கூட்டு வெளியே இருக்கும் அனுவின் பெற்றோர்களை உள்ளே வரச்சொன்னார்.

அனுவின் பெற்றோர் உள்ளே வந்து பார்த்து பயந்து விட்டனர். "என்ன ஆகிவிட்டது என் ராஜாத்திக்கு" என்று கேட்டனர். தெரியவில்லை திடீரென்று பல்ஸ் இறங்கிவிட்டது, ஜன்னி கண்டு விட்டது என்று என்னனவோ சொன்னார்கள், மணி ஆறரை இருக்கும் அவள் இறந்து விட்டாள், என்று சொன்னார்கள்

சுந்தரம் பேசவில்லை, அழவில்லை ஒன்றும் தோன்றாமல் வெளியே வந்து உட்கார்ந்தான், அனுவின் அம்மாவும், அப்பாவும் அழுதார்கள் அப்பா சென்று தன் மகனுக்கு போன் செய்தார், வெங்கடேசனும் அவன் மனைவியும் வந்தார்கள், எங்களிடம் ஏன் ராத்திரியே போன் செய்து சொல்லவில்லை என்றான் வெங்கடேசன்.

இது எதுவுமே தெரியாத நிலையில் உட்கார்ந்திருந்தான் சுந்தரம். வெங்கடேசன் அவன் கையை பிடித்து “என்ன இப்படி ஆயிடுத்தே மாப்பிள்ளை” என்று அழுதான் இது எதுவுமே சுந்தரத்திற்கு உனரவில்லை. தன் நிலை மறந்து உட்கார்ந்திருந்தான்.

கண்ணிலிருந்து அருவியாய் கண்ணீர் கொட்டிககொண்டிருந்தது.

நர்ஸ் வந்து குழந்தையை சுந்தரத்திடம் கொடுக்க வந்தாள் ஆனால் சுந்தரமோ தன் நிலையிலேயே இல்லை உடனே அனுவின் அம்மாவும்,அண்ணியும் குழந்தையை வாங்கிக்கொண்டார்கள். அண்ணிதான், தன் கையில் வைத்துகொண்டாள்.

ஆஸ்பத்திரியில் பேப்பரில் கையெழுத்து வாங்க வந்திருந்தார்கள், எதுவுமே பேசாமல் கையெழுத்து போட்டான் சுந்தரம்.

கார் டிரைவர், ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் வந்திருங்கினான், அங்கு நடந்தது என்ன என்று தெரிந்ததும், ஐயோ, என்று ஒரு குரல் அழுது பின் கிளம்புகிற நேரத்தில் அனுவை ஆம்புலன்சிலே கொண்டுபோகலாம் என்றார்கள். ஆனால் சுந்தரமோ இல்லை அவள் என்னுடன் காரில்தான் வரவேண்டுமென்றான், வெங்கடேசனோ இல்லை மாப்பிள்ளை பாடியை ஆம்புலன்சில் தான் எதுத்துப் போக வேண்டும் என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.