(Reading time: 6 - 11 minutes)

02. உயிர் ஆதாரமே..!! - ப்ரியா

Uyirin aatharame

ர்வமாக அந்த டைரியின் முதல் பக்கத்தை படிக்க துவங்கியவன் அருகில் காலடி ஓசை கேட்கவும் நிமிர்ந்து பார்த்தான். கோபத்துடன் வந்து கொண்டிருந்தான் அவன். மித்ரன்!!

"அந்த டைரியை கொடு வைஷ்ணவ்"  அவன் குரலில் அத்தனை அழுத்தம். மறைமுக உத்தரவு.

ஒரு குழப்பத்தின் நடுவே சிறு பயம் வைஷ்ணவ் முகத்தில். அவனை அறியாமலே திறந்திருந்த டைரியை அப்படியே மார்போடு அனைத்துக் கொண்டான். கொடுக்க மாட்டேன் என்ற பொருள் அதில்!!

"இது பொது இடம்ன்னு பார்க்கிறேன் இல்லைன்னா அவ்வளவு தான்.. அது என் பொம்மு டைரி கொடுத்திரு"

"மிஸ்டர் மித்ரன், ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்.."

அவனை கை உயர்த்தி அடக்கினான் மித்ரன்.

"ம்ம்ம்... போதும் நீ சொன்னது எல்லாம்.. நீ போதும்ங்கிற அளவு என் பொம்மு கிட்ட சொல்லிட்ட இனி அப்படி எதுவும் என்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அண்ட் யு சி மிஸ்டர் நான் ஒன்னும் பொம்மு இல்ல நீ சொல்றதை கேட்டுட்டு உன் பின்னாடி வர.."

இடைவெட்டினான் வைஷ்ணவ்,

"அதுக்கு இல்லை மித்ரன் ப்ளீஸ் நான் சொல்றதை.."

"வில் யு சட் அப் அண்ட் கிவ் தட் டைரி?"

ஒரு வினாடி அவன் கண்களை நேராக பார்த்தவன் திரும்பி கடலைப் பார்த்தவன் இடம் வலமாக தலையசைத்தான்.

"ஹ்ம்ம் ம்ம்ம்.. கொடுக்க மாட்டேன்.. நான்.. நான் இந்த டைரியை படிக்கணும்"

"எதுக்கு? எதுக்குன்னு கேட்கிறேன்? என் நிலாக்கு நீ பண்னின வரை பத்தாத? அதுனால எங்க அத்தை இப்போ ஹாஸ்ப்பிட்டல்ல இருக்காங்களே? அது பத்தாத?"

"ப்ளீஸ் மித்ரன் நான் ஏற்கனவே குற்ற உணர்ச்சில நொந்து போயிருக்கேன்.. தப்பு என்மேல இல்லைன்னு நான் சொல்ல வரலை.. அதுனாலே தானே என் பிரென்ட் அபியை பெங்களூர்ல இருந்து வர வெச்சேன்.. இப்போ அவ கைராசியினால உங்க அத்தை குணமாகிட்டு தானே வர்றங்க?"

"நீ செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் பண்ற.. பண்ணி தானே டா ஆகணும்"

அவன் ஒருமையில் இருந்து மரியாதையின்மைக்கு தாவியதை உணர்ந்த போதும் அது வைஷ்ணவை உறுத்தவில்லை. அவன் சொல்வதிலும் உண்மை அடங்கியிருக்கிறது.

"சாரி.."

"சட் அப்.. நீயும் உன் மன்னிப்பும்.. உங்கிட்ட என்ன எனக்கு வெட்டி பேச்சு அந்த டைரியை கொடு"

"ஒரே ஒரு நிமிஷம் என்கூட ரூமுக்கு வாங்க உங்களுக்காக ஒன்னு நான் காட்டணும்.. ப்ளீஸ் அதை மட்டும் பாருங்க.. நீங்க என் நிலைல இருந்தாலும் இதை தான் பண்ணி இருப்பீங்கன்னு புரியும் ப்ளீஸ் ப்ளீஸ்..."

அவன் ஆழ்ந்த குரலின் கெஞ்சல் முகத்தில் இருந்த மன்றாடல் மித்ரனை சற்றே அமைதி படுத்தியது.

"ம்ம்ம்ம்" என்று அவன் வந்த திசை நோக்கி கைகளை காட்ட, வைஷ்ணவ் முன்னே நடந்தான்.

ரூமை அடைந்ததும் இருவருக்கும் பழச்சாறை ஆர்டர் செய்தவன். தான் லேப்டாப் இருக்கும் பையை திறந்து அதில் இருந்து இன்னொரு பொருளை எடுத்து அவன் கைகளில் வைத்தான். அதை பிரித்து பார்க்குமாறு சைகை செய்தான்.

லேப்டாப்பிலும் தான் 'சேவ்' செய்து வைத்திருந்த சிலவற்றை காட்டினான்.

அதற்குள் பழச்சாறு வந்திருக்க அதில் ஒன்றை அவனிடம் வைத்துவிட்டு ஒன்றை எடுத்து கொண்டு அந்த அறையின் பால்கனியில் நின்று கொண்டான்.

பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்க, அவன் அருகில் வந்து நின்று கடலை வெறித்த மித்ரன் சில நேர மௌனத்திற்கு பிறகு கேட்டான்.

"இதெல்லாம்.."

"உண்மை"

"ம்ம்ம்.. அவளை நானும் திட்டி இருக்கேன் ஆனா உன்னை பார்த்ததும் கொஞ்சம் குழப்பம் இருந்தாலும் இது..?!!!"

"எனக்கும் அப்படி தான்.. இப்போ சொல்லு என் நிலைமையில நீ இருந்தால்?"

"ம்ம்ம் தெரியலை"

"இதுவா பதில்?"

"பதில் தெரியலை.. சில நேரத்துல விதி நம்மை வெல்லும் போது வாழ்க்கை புதிர் போடும் போது விடை தெரியாமல் பயணிக்க வேண்டி இருக்கு"

"இதை தான் நானும் செய்தேன் மித்ரன்"

"புரியுது.. ஆனாலும் நீ அவ்வளவு தூரம் பண்ணி இருக்க வேண்டாம்"

"என்ன செய்ய சொல்ற.. விடு"

"ம்ம்ம்ம் நான் வேணும்னா நித்திலா கிட்ட..."

"இல்லை வேண்டாம்.."

"ம்ம்ம்"

"உன் நிலா பொம்மு இல்லையா மித்ரன்? முதல் தடவை நித்திலான்னு நீ கூப்பிடறதை கேட்கிறேன்"

இவ்வளவு நேரம் இருந்த கடினம் மாறி அவன் முகத்தில் மென்மை!!

"அது அவளை நான் ஸ்கூல்ல முதன் முதலா பாத்தப்போ கூப்பிட்டது.. அப்படியே பழகிடுச்சு.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.