(Reading time: 6 - 11 minutes)

"ம்ம்ம்ம்" வைஷ்ணவின் முகத்தில் யோசனை.

அவன் முகம் பாராமல் கடலை பார்த்து கொண்டிருந்தவன் அந்த நாள் ஞாபகத்தில் பேசினான்.

"உனக்கு தெரியுமா மித்ரன் இந்த நித்திலா செம்ம வாலு...."

த்தாம் வகுப்பிற்கான சேர்க்கை படிவம் வாங்க தாயுடன் அந்த பள்ளிக்குள் நுழைந்த நித்திலாவின் ஆர்வமான பார்வை ஸ்கூல் பீப்பிள் லீடரான மித்ரனை கவர்ந்தது. முகத்தில் இருந்த வெகுளி தனமும் சிறு பிள்ளை தனமும் கண்களில் இல்லை!!

தெளிவும் குறும்பு தனமும் நிறைந்திருந்தது. டாப்ஸ் அண்ட் ஸ்கர்ட்டில் இரட்டை பின்னல் தோள் தொட, ஒரு கை அம்மாவின் கைகளுக்குள் இருக்க சுற்றிலும் பார்த்து கொண்டே வந்தவள். இவன் அவளை பார்த்து கொண்டு நிற்கவும் அவள் நின்று இவனை பார்க்க ஒரு ஸ்நேக முறுவல் பூத்தான். பதிலுக்கு சிரிக்கா விட்டாலும் பரவாயில்லை ஆனால் அவள் முறைத்துவிட்டு செல்ல,அவள் காதில் விழும்படி

"மூஞ்சியை பாரு 'பொம்மு'ன்னு" என சொல்லி விட்டான்.

அவ்வளவு தான் வந்ததே கோபம் ஆனால் அங்கு அவள் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

முதல் நாள் அல்லவா? வம்பு செய்தால் வீட்டில் அம்மாவிடம் யார் 'டோஸ்' வாங்குவது.

நாளை பார்த்து கொள்ளலாம் என அவனை திரும்பி அவன் அடையாளங்களை பார்க்க, அவன் சட்டையில் குத்தியிருந்த 'ஸ்கூல் பீர்பால் லீடர்' பேட்ச்சை பார்த்து விட்டாள்.

'உன்னை கவனிச்சுக்கறேன்' என கருவியவள் அதற்கு மேல் அவனை சட்டை செய்யவில்லை.

ஆனால் மாலையில் வீட்டு மாடியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தவள். அந்த தெருமுனையை சைக்கிளில் அவன் கடந்து அந்த தெருவுக்குள் வரவும் கையில் 'மக்' உடன் ஓடி வந்து எட்டி பார்த்தாள். அவர்கள் வீட்டருகே சைக்கிளின் வேகத்தை குறைத்து அவன் எதிர்த்த வீட்டினுள் செல்லப்போவதை பார்த்தவள் தாமதிக்காமல் எட்டி மக்கில் இருந்த நீரை அவன் மேல் ஊற்ற கோபத்துடன் திரும்பியவன்.

அவளை பார்த்து அப்படியே நின்று விட்டான். அவனை பார்த்த கலகலவென சிரித்தவள் புருவத்தை ஏற்றி இறக்க, அவனும் சிரித்து விட்டான்.

"ஹே பொம்மு.. போதுமா?" பலி வாங்கி விட்டாயா? என்பது போல மித்ரன் கேட்க,

"ஓ எஸ்.." என்று சிரித்தாள்.

"வாலு,, பிரெண்ட்ஸ்?" என்று அவன் காற்றில் கை நீட்ட, இவளும் சரி என்பதாய் தலையாட்டி கைகளை குலுக்குவது போல் காற்றில் ஆட்டினாள். அன்று தொடங்கிய நட்பு இந்த ஒன்பது வருடங்களாய் தொடர்கிறது..!! மித்ரன்.. நித்திலாவின் ஒரே மித்ரன்..!! அவள் வாழ்வின் பெரும் அங்கம்..!!

வன் தாங்கள் நண்பர்களான கதையை சொல்லி முடித்திருக்க, ஒரு இனிய நட்பு அவர்களுக்குள் துளிர் விட்டிருந்தது!!

புன்னகையுடன் பார்த்து கொண்டனர்.

"நிலா உன்னை பைத்தியக்காரதனமா காதலிக்கிறா வைஷ்ணவ்.."

"தெரியும்.."

"தெரியுமா?!"

மித்ரன் ஆச்சர்யமாய் அவனை பார்க்க, அமைதியாய் புன்னகைத்தான் வைஷ்ணவ்!

உயிர் தேடல் தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1037}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.