(Reading time: 3 - 6 minutes)

03. உயிர் ஆதாரமே..!! - ப்ரியா

Uyirin aatharame

ச்சர்யத்துடன் பார்த்த மித்ரனிடம் ஆமாம் என தலையசைத்து மீண்டும் அறைக்குள் அழைத்து சென்றான் வைஷ்ணவ்.

"உங்களுக்கு எப்படி நித்திலா காதலை பத்தி?"

"தெரியும்"

"டைரியை படிச்சுடீங்களா ஏற்கனவே?"

"இல்லை" ஒரு அமைதியான புன்னகை அவனிடம்.

"பின்னே எப்படி?" குழப்ப முடிச்சுகளுடன் அவன் முகம் பார்த்தான் மித்ரன்.

"சொல்றேன்.. அதுக்கு முன்னாடி ப்ளீஸ் வாங்க போங்கன்னு கூப்பிட வேண்டாம்.. பிரெண்ட்ஸ்?"

"ம்ம்ம்ம்ம் பிரெண்ட்ஸ்" கலப்படம் இல்லாத புன்னகையுடன் ஒரு கைகுலுக்கல்.

"நீங்க ஒரு ஆள் கிட்ட பேசினா உங்களுக்கு எல்லாம் புரியும்" என்று கூறிய படி தன் செல்போனை எடுத்து ஒரு நம்பருக்கு தொடர்பு  கொண்டு சற்று நேரம் பேசினான் வைஷ்ணவ்.

பின் போனை மித்ரனிடம் தந்தவன் ஒரு புன்னகையுடனேயே அந்த ஓவியங்களை பார்த்து கொண்டிருந்தான். நள்ளிரவு நேரத்தில் தொடங்கிய அந்த உரையாடல் பின்னிரவு வரை தொடர்ந்தது..!!!

 

மதுரை...

"ஏலேய்.. யாருடா அது அங்கன?"

"...."

"ஏய் குட்டி நீயா.. எங்கடா போற இந்நேரத்துக்கு?"

"......"

"கேட்டுட்டு இருக்கேன் பேசாம போறவ?! அடியேய் உன்னைய தாண்டி"

"ப்ச்"

"கூட யாரு சின்ன குட்டியா? அடியேய் நீயாவது வாயை தொறந்து சொல்லு"

"......"

"என்னடி ரெண்டு பெரும் ஒன்னும் பேசாம வெள்ளனே எங்கனயோ கெளம்பிடீங்க?"

"ஐயோ அம்மாச்சி கொஞ்ச நேரம் வாயை மூடரியா.. கத்தி அம்மாவை எழுப்பிராத" தன் தாய் வழி பாட்டியின் அருகில் வந்து சொன்னால் நேத்ரா.

"அப்போ சொல்லுங்கடி எங்க பயணம் காலைலயே?", பாட்டி.

"அக்கா வரைய போற நான் துணைக்கு போறேன்.. காலையில வைகை ஆத்து கரையில சூப்பரா இருக்கும்ல அதன் அவ வரையணும்னு ஆசைப்பட்ட"

"என்ன கோம்ஸ்.. சவுண்ட் ஓவரா வருது" என்றபடி தன் பேக்கை மாட்டிக் கொண்டு அருகில் வந்து தன் இரு தோல் மீதும் இரு கைகளையும் வைத்து தனக்கு எதிரே சற்றே உயரமாய் நின்றவளை பார்த்தார் கோமதி.

"அடிக்கழுதை உன் தாத்தன் கூட சேர்ந்து உனக்கும் கூடி போச்சுது டி"

"பாத்தியா திட்ற, போ"

"அடியே ராஜாதி என் நித்தி கண்ணு நில்லுடி, சும்மா தானே சீக்கிரமா போயிடு சூதானமா திரும்பி வந்துடுங்க"

"ஹ்ம்ம்ம் நீ ஆனாலும் ரொம்ப ஸ்வீட் கோம்ஸ்.. உம்ம்ம்ம்மா", நித்திலா ஒரு கன்னத்தில் முத்தம் வைக்க,

"நானு, உம்ம்ம்ம்ம்ம்மா" என்று  அவள் தங்கை நேத்ரா மற்றொரு கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

அவசரமாக கிளம்பியவர்களை வழி மறித்த சிவநேசன்.

"ஏலேய் உங்க அம்மாச்சிக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்போ?! அப்போ யார் கார் ஓட்டுறாங்க பாக்கறேன் இருங்க" என கோவம் போல கூற,

"ஐயோ தாத்தா உனக்கு இல்லாமையா?" என்று கோரஸாக கேட்ட பேத்திகள் பாட்டிக்கு கொடுத்ததை தாத்தாவிற்கு கொடுக்க, பெரிய சிரிப்புடன் மீசையை நீவியவாறு,

"உங்க அம்மா எழுந்துக்கறதுக்குள்ள ஓடிடலாம் வாங்க" என்று காரை எடுத்துக் கொண்டு 'எஸ்கேப்' ஆகினர்.

புன்னகையுடன் வழி அனுப்பி விட்டு குளிக்க சென்றார் கோமதி.

அந்த விடிந்தும் விடியாத நேரத்தில் சூரியன் ஒளி கிழக்கில் கீற்றாய் இருக்க, அந்த ஆற்றங்கரையில் தன் தாத்தாவையும் தங்கையையும் நிறுத்தி ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தாள் நித்திலா.

காரின் வெளிச்சத்தின் உதவியில் படம் வரைந்து முடித்தவள், மெல்ல விடியும் அந்த காலை பொழுதாய் முழுதாய் அனுபவித்தாள். தாத்தாவும் நேத்ராவும் வாக்கிங் செல்ல, கொண்டு வந்த பிளாஸ்கில் இருந்து காபியை கப்பில் ஊற்றி கையில் வைத்தவாறு யோசித்துக் கொண்டிருந்தாள்.

அன்று இதே ஆற்றங்கரையில் நடந்தவை.???!!!

உயிர் தேடல் தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1037}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.