(Reading time: 11 - 21 minutes)

11. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

வர்கள் கிளம்பி ஒரு பெரிய ஹோடேல்க்கு போனார்கள், அங்கே ஏற்கெனவே டேபிள் புக் செய்து வைத்திருந்தான் சிவா, எல்லோரும் அங்கே புக் செய்து வைத்திருந்த டேபிளில் உட்கார்ந்தனர்.

ராதாவின் பக்கத்தில் சுந்தரம் உட்கார்ந்தார், ராதாவிடம் ‘உனக்கு என்ன வேண்டுமென்று எனக்குத் தெரியும்’ என்றார், அவளுக்கு என்ன பிடிக்குமென்று சொன்னார்

அதைக் கேட்ட அவளுக்கும், அவள் தங்கைகளுக்கும் ஒரே ஆச்சர்யம், இவருக்கு எப்படி தெரியும் என்று அவள் தங்கைகள் நினைத்தார்கள், ஆனால் ராதா 'அதெப்படி இவ்வளவும் ஞாபகம் வைத்திருகிறீர்கள்?' என்று கேட்டாள்

'அதெப்படி நான் உன்னை மறக்க முடியும் அனு? என் அனு, என் ஒவ்வொரு அணுவிலும் என் அனுதான், அதை எப்படி நான் மறக்க முடியும்?' என்று வெகு நிதானமாக அவளின் தோளில் கை போட்டு அனைத்துக் கொண்டார் சுந்தரம், அவள் கண்ணிலும் நீர் முத்துக்களாக உருண்டது .

'இன்னொரு விஷயம் தெரியுமா?' என்று சுந்தரம் கேட்க,

ராதா, 'என்ன?' என்று வினவ, சுந்தரமோ ' ஆனந்தனுக்கும் இதேதான் பிடிக்கும், உனக்கு என்ன என்ன பிடிக்குமோ அதேதான் அவனுக்கும்' என்று உணர்ச்சி மிக்க ஒரு கர்வம் இருந்தால் போல் இருந்தது அவர் கூறியபோது.

ராதாவும் மிகப் பெருமையாக 'அப்படியா, இதை நீங்கள் சொல்லவில்லையே?’ என்று கேட்டாள்.

இரு, 'சந்தர்பம் வரும்போதெல்லாம் அவனைப் பற்றி ஒவ்வொன்றாக, உனக்கு நான் சொல்கிறேன்' என்றார் சுந்தரம்

ராதா,அவரையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்

ரஞ்சனி, ரம்யாவிடம், 'என்ன நடக்கிறது? அக்காவைக் கல்யாணம் பண்ணப் போகிறவர் இவர் பையன் போலிருக்கிறது, ஆனால் இவர் ரொம்ப அக்காவை லுக்கு விடறார், தோளில் கை போடறார், அக்காவுக்கு என்ன பிடிக்குமென்று சொல்கிறார், ஒரு பக்கம் பார்த்தால் அக்காவோட லுக்கு கூட லவ்ஸ் மாதிரி இருக்கு பாரேன், அவங்க ரெண்டு பேரும் எப்படி பார்துங்கறாங்க பாரேன், பெரிசு சம்ம லுக்கு விடறார் ' என்றாள்

அதற்கு ரம்யாவோ 'வாயை மூடுடி, அக்கா காதில் விழப் போகுது, அதுவும் நீ பேசறது சரியில்லை, உன்னோட காலேஜ் பாஷையெல்லாம் நம் வீட்டு மனுஷங்களுக்கு உபயோகிக்காதே.' என்று திட்டினாள். ஆனால் அவளுக்கும், உள்ளுக்குள், அக்காவுக்கு யாரோடு கல்யாணம் என்று கொஞ்சம் உறுத்தலாய் இருந்தது

அவர்கள் ஆர்டர் கொடுத்த ஐடெம் எல்லாம் வந்தது, சாப்பிட ஆரம்பித்தார்கள், ரஞ்சன சொன்னாள் ' ரொம்ப தேங்க்ஸ் அங்கிள், நாங்க இந்த மாதிரி ஹோடல்க்கெல்லாம் வந்தது இல்லை, இந்த மாதிரி என்று இல்லை, சாதாரண ஹோடல்க்கு கூட போனதில்லை'

அதைக் கேட்ட சுந்தரம், ' இனி அடிக்கடி இந்த மாதிரி வெளியே போய் சாப்பிடலாம், அப்பப்போ வெளியே ஊருக்கெல்லாம் போகலாம்' என்று சொன்னார்.

'உங்க அப்பாவிற்கு என்ன உடம்பு சொல்? நான் ஸ்பெஷலிஸ்ட் ஏற்பாடு செய்கிறேன்' என்று கேட்டார் ராதாவிடம்

'அவருக்கு ஹார்ட் ப்ராப்லெம்' என்று ராதா கூறினாள்

போனை எடுத்து தன்னுடைய ஹாஸ்பிடலுக்கு வரும் ஸ்பெஷலிஸ்டை கூப்பிட்டார், அவர் லைனில் வந்தவுடன் விஷயத்தைச் சொன்னார்,' நாளைக்கு எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வேணுமே' என்றார் சுந்தரம்

'நாளைக்கு பதினோரு மணிக்கு, சரி நம்ம ஹாஸ்பிடல்ல தானே இருப்பீங்க?'' என்று கேட்டார் சுந்தரம்

‘சரி நான் வர ட்ரை பண்ணறேன், நான் வரமுடியலேன்னா, என் செக்ரட்டரி சிவாவை அனுப்பி வைக்கிறேன்,’ என்று சொன்னவுடன்

டாக்டர் கேட்டார் ' நீங்கள் கூட்டி வர அளவு ரொம்ப க்ளோசா?’ என்று

அதற்கு சுந்தரம் ' ஆமாம், என் அப்பாவைப் போல்' என்று கூறி வைத்து விட்டார் .

‘சரி, நாளைக்கு அப்பாவை நம் ஹாஸ்பிடலுக்கு கூட்டிப்போகனும் சரியா? ‘

ராதா உணர்ச்சியுடன் 'ரொம்ப நன்றி, அவர் உடம்பைப் பற்றி ரொம்பக் கவலையாக இருந்தேன், டாக்டர், அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றார், எங்களிடம் வசதி இல்லை, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்திருந்தேன், அப்பாவுக்கு கடன் வாங்குவது பிடிக்காது, அதனால் இப்படியே இருக்கேன் என்று விட்டார்' என்றாள் கண் கலங்க

மற்ற இரு தங்கைகளும் ‘அக்கா நீ அழாதே, எங்களால் தாங்க முடியாது,’என்று அவர்களும் கண் கலங்கினர்

இப்படி சந்தோஷமாக வெளியே சாப்பிட வந்தது இப்படி அழுதுக்கொண்டு இருப்பதுக்கு இல்லை. அதான் டாக்டரிடம் போகப் போறோமில்ல, எத்தனை செலவானாலும், அப்பாவை சரிப்படுத்தலாம் கவலைப்படாதீர்கள் ' என்றார் சுந்தரம்

மூன்று பேரும் கண்ணைத் துடைத்துக் கொண்டார்கள், அப்போது ரஞ்சனாத்தான் கேட்டாள், 'அங்கிள், நம்ம ஹாஸ்பிடல்ன்னு சொன்னீங்களே அது......’ என்று இழுத்தாள்,

அதற்கு ' ஆமாம், நம் ஹாஸ்பிடல்தான், நம்முடையது'என்றார் சுந்தரம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.