(Reading time: 26 - 51 minutes)

ஜெய்யை இங்கு வந்து அட்மிட் செய்துவிட்டு அவள் வெளியே கதறியபடி காத்திருந்த போது, அவனது முதுகை சுற்றி கட்டப்பட்டிருந்த ரத்தம் தோய்ந்த அவளது துப்பட்டாவையும், அவனது உடையையும் கொண்டு வந்து நர்ஸ் அவளிடத்தில் கொடுக்க, அவள் அதைப் பார்த்து அழுதாள்

அந்நேரம் தனது துப்பட்டாவை எடுத்து தன் மேல் போட்டுக்கொள்ள இருந்த சதியை தடுத்த நர்ஸ், தனது பையில் இருந்து, தான் வீட்டிற்கு போட்டுபோவதற்காக வைத்திருந்த சுடிதாரிலுள்ள துப்பட்டாவை எடுத்து கொடுக்க, சதி மறுத்தாள்

பரவாயில்லங்க நீங்க போட்டுக்கோங்கஎன் ஃப்ரெண்ட்டுக்கு இன்னைக்கு நைட் ஷிஃப்ட், சோ அவளோடதை நான் எடுத்து போட்டுட்டு வீட்டுக்கு போயிடுவேன், காலையில கொண்டு வந்து அவளுக்கு நான் கொடுத்துடுவேன்நீங்களும் என்னோடதை அப்போ கொடுத்திடுங்கஓகேயா?...” என்று சொல்லிதோடு மட்டுமல்லாமல் சதியின் கைகளில் தன் துப்பட்டாவை அந்த பெண்ணும் கொடுத்துவிட்டு செல்ல, சதியும் அதனை அணிந்து கொண்டாள்

அதைத்தான் இப்போது பிரசுதி பார்த்து கேட்க, சதிக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை

அது ஒன்னுமில்லம்மாஅந்த துப்பட்டா…” என பேச ஆரம்பித்தவளை அதற்கு மேல் பேச விடாது தடுத்தான் இஷான்

ம்மாநீங்க இப்படி இங்கேயே நின்னுட்டிருந்தா ஜெய்க்கு யாரு சாப்பாடு கொடுப்பா?.. டாக்டர்கிட்ட போய் கேட்டுட்டு அவனுக்கு எது கொடுக்கலாம் என்ன ஏதுன்னு விசாரிக்காம இங்க நின்னு இந்த குட்டிச்சாத்தான் கிட்ட என்ன விசாரணை பண்ணிட்டிருக்கீங்க?..”

அட ஆமா இஷான்நான் மறந்தே போயிட்டேன்…”

ம்ம்சும்மா பேருக்கு தான் ஜெய்க்கு அத்தைன்னு சொல்லிக்க வேண்டியது போலஉண்மையாவே அப்படி எதுவும் உங்களுக்கு நினைப்பில்லையோ…”

இஷானின் வார்த்தைகளில் சட்டென நிமிர்ந்த பிரசுதி அவனை முறைத்துப் பார்த்துவிட்டு,

நீ முதல்ல வழி விடுடாஉங்க அப்பா மாதிரியே குதர்க்கமா பேசிகிட்டுநகருடா…” என்றவர் நேரே மருத்துவரின் அறையை நோக்கிச் செல்ல,

பரவாயில்லை அண்ணாநல்லாவே சமாளிக்குற…” என்ற சதி இஷானின் தோளில் கைவைத்து தட்டிக்கொடுத்தாள்

இப்போ உங்க அண்ணன் சமாளிச்சிட்டார்பட் திரும்ப வந்து அத்தை கேட்கும்போது என்ன சொல்லுவ சதி நீ?...”

அவ வேறென்ன சொல்லுவான்னு நினைக்குற தைஜூ?... அம்மா அம்மா நானும் தைஜூவும் வீட்டுக்கு வந்திட்டிருக்கும்போது ஜெய் அடிபட்டு கிடந்தார்அப்போதான் என் துப்பட்டாவை எடுத்து அவருக்கு அடிபட்ட இடத்துல வச்சி கட்டினேன்தைஜூவையும் இஷானுக்கு தகவல் சொல்ல அனுப்பி வச்சிட்டு, நான் ஜெய்யை கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் வந்துட்டேன்இஷான் தாத்தாவையும் அழைச்சிட்டு வந்துட்டான்…” என சதி போல ஏற்ற இறக்கங்களோடு இஷான் சொல்லி காண்பிக்க, அவனை அடித்தாள் சதி

ஸ்பிசாசேவலிக்குதுநிறுத்து…” என தங்கையின் கையை அடிக்க விடாது பிடித்துக்கொண்டவன்,

உண்மையை சொன்னதுக்கு எதுக்கு குட்டிசாத்தான் என்னை அடிக்குற?..” என கேட்க, அவள் அவனை முறைத்தாள்

நீ சொன்ன விஷயம் சரிதான்ஆனா என்னை மாதிரியே இமிடேட் செய்து சொன்ன பார்த்தீயா அதுக்குத்தான் உனக்கு இந்த அடி…”

பார்த்தீயா உனக்கு பொறாமைஉன்னைவிட அழகா நான் சொல்லிக்காட்டிட்டேன்னு உனக்கு பொறாமைஅதான் என்னை அடிக்குற…”

அவனின் பதிலில் அவளுக்கு மேலும் கோபம் வர, அவன் சிரித்தான்

அவனிடமிருந்து தன் கைகளை உறுவிக்கொண்டவள், “உன்னை என்ன பண்ணுறேன் பாரு…” என அடிக்க கை ஓங்க,

சரிசரிஅப்புறம் ரூம் போட்டு அடிக்கலாம்…” என்றவன், “இந்த துப்பட்டா யாரோடதுநானும் இதை இப்போதான் கவனிக்குறேன்…” என அவன் சீரியஸாக பேச, அவள் அந்த நர்ஸ் செய்த உதவியைப் பற்றி சொல்ல, அவனும் அதைக் கேட்டுக்கொண்டு,

அப்போ இதையும் அம்மாகிட்ட சொல்லிடுஅம்மாஅம்மாநான்….” என சதி மாதிரி பேச ஆரம்பித்தவனை சதியும், தைஜூவும் சேர்ந்து அடித்து துவைத்தனர்

அடிப்பாவிஅவதான் அடிக்குறான்னு பார்த்தா?... நீயுமா?...” என பாவமாக தைஜூவை அவன் பார்க்க, அவள் அடிப்பதை நிறுத்தினாள்

அடப்பாவி அண்ணாஒரு வார்த்தையில அவளை ஆஃப் பண்ணிட்டியே…” என்ற சதி மேலும் அவனை அடிக்க, தைஜூ தடுத்தாள்

பாவம்டிவிட்டுடலாம்வலிக்கப்போகுது…”

இதோ பாருடாசப்போர்ட்டா?...” என தைஜூவை முறைக்க ஆரம்பிப்பது போல் பார்த்தவள் கடைசியில் விழுந்து விழுந்து சிரித்தாள்

நல்லா ஜாடிக்கேத்த மூடிதான்ம்ம்.. எப்பவும் இப்படியே ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பா விட்டுக்கொடுக்காம இருங்க…” என இருவரையும் பார்த்தபடி கைவைத்து சதி வாழ்த்த,

ம்ம்என்ன இருந்தாலும் உன்னைப் போல எல்லாம் இருக்க முடியாதும்மாஎன்ன லவ்ஜெய் அண்ணா மேலம்ம்…” என பூரித்து போனவளாய் சொன்ன தைஜூ,

அண்ணாவும் சீக்கிரமே உன் காதலை புரிஞ்சிப்பார் சதிகவலைப்படாதநீயும் அண்ணாவும் கண்டிப்பா என்னைக்கும் இணைபிரியாம சந்தோஷமா இருப்பீங்க…” என சொல்ல, சதியின் முகத்தில் வெட்கத்துடன் கூடிய புன்னகை ஒட்டிக்கொண்டது அழகாய்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.