(Reading time: 7 - 14 minutes)

"ச்சான்!யாரையாவது லவ் பண்ணேன்டா!"என்று!!அவன் மறுத்த போதும்,அவன் மூளை கொஞ்சம் கொஞ்சமாக சலவை செய்யப்பட்டது.அப்போது தான் அவன் வாழ்வில் வந்தாள் நிர்பயா.ஏதோ ஒரு நிகழ்ச்சியை அவள் தொகுத்த சமயத்தில் தான் அவளை முதன் முறையாக கண்டான் அவன்.அவள் புன்னகை ததும்பிய முகம்,அவன் இதயத்தில் அப்படியே பதிந்தது.

மறுநாளே போய் அவளிடம் தன் விருப்பத்தை கூறினான்.இவளோ அப்போது,பயந்த சுபாவம் கொண்டவள்,அழுதப்படி அங்கிருந்து ஓடிவிட்டாள்.ஆனால்,அவள் விலகலையே விருப்பம் என்று அவனை நம்ப வைத்தனர் நண்பன் என்ற பெயரில் இருந்தவர்கள்!!

அவளும்,அவன் மீதிருந்த அச்சத்தால்,வலுக்கட்டாயமாக அவன் பேச்சுக்கு வெறுப்போடு கட்டுப்பட்டாள்.

"உனக்கு எதாவது பிரச்சனைன்னா!என்கிட்ட சொல்லு!நான் பார்த்துக்கிறேன்!"-அவன் உரிமை எடுக்கும் போதெல்லாம் கண்ணீர் திரண்டு விடும் அவள் விழிகளில்!!

ஒருநாள் அவன் பொதுத்தேர்வை முடித்த சமயத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,

"உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்!"என்றாள்.

"என்ன அம்மூ சொல்லு!"

"தப்பா எடுத்துக்காதீங்க!எனக்கு என்கிட்ட நீ பழகுற விதத்துல விருப்பமில்லை!"

"புரியலை.."

"நான் நிறைய படிக்கணும்!எனக்கு கனவுகள் இருக்கு!"

"நான் நீ அதெல்லாம் பூர்த்தி பண்ண வேணாம்னு சொல்லலையே செல்லம்!"

"இல்லை...நீங்க எதுக்காக என்னை லவ் பண்றீங்க?"

"என்ன கேள்வி இது?அதான் அடிக்கடி சொல்வேனே!மறந்துட்டியா?"

"இல்லை...நான் எப்படி சொல்வேன்??நீங்க யாருன்னு யோசித்து பாருங்க!!எல்லாரிடமும் கெட்ட பெயர் எடுத்திருக்கீங்க!யாருக்கும் உங்களை பிடிக்கலை.."

"இப்போ நீ என்ன சொல்ல வர?"

"எனக்கு நிறைய கனவுகள் இருக்கு!அதை எல்லாம் முடிக்க 8 வருடமாவது ஆகும்!அதுக்கு மேலேயும் நான் உங்களுக்கு வேணும்னா ஒரு கண்டிஷன் இருக்கு!"

"என்ன?"

"நீங்க மாறணும்!உங்களை நீங்க மாற்றிக்கணும்!ஒழுங்கா படிக்கணும்!நாலு பேருக்கு உதவுற நிலைக்கு வரணும்!உங்க அப்பாவால உங்களுக்கு கிடைத்த பெருமையை தூக்கி போட்டு,உங்க அடையாளத்தை நீங்க உருவாக்கணும்!உங்களுக்கு ஒரு தம்பி இருக்கார்னு சொல்லிருக்கீங்க!அவருக்கு நீங்க தான் எல்லாம்!அவருக்கு ஒரு நல்ல அம்மாவா,அப்பாவா,அண்ணனா இருந்து நீங்க வழி நடத்தணும்!இதை எல்லாம் செய்து முடிக்கிற வரைக்கும் என்னை பார்க்காதீங்க,என்கிட்ட பேசாதீங்க!அதுக்கு மேலேயும் இந்த காதல் இப்படியே இருந்தா,திரும்பி வாங்க!அப்போ உங்க கூட வரேன்!"

"............"-அவள் ஒரு ருத்ராட்சத்தை அவனிடம் நீட்டினாள்.

"இதை வைத்துக்கோங்க!இது உங்க கோபத்தை குறைக்கணும்!"-என்று அதை அவன் கையில் திணித்துவிட்டு அவனை திரும்பியும் பார்க்காமல் நடந்தாள்.

"ஏ...!ஊ..ஊ!""-என்று கத்தியப்படி வீட்டிற்கு வந்தவனை அதிர்ச்சியாக பார்த்தான் எட்வர்ட்.

"அண்ணா!"

"ம்??"

"என்னண்ணா?என்னாச்சு?"-ஆனந்தத்தில்,அவனை அணைத்துக் கொண்டான் ஜோசப்.

"என்னாச்சுண்ணா?"

"கிடைத்துட்டா!அவளை பார்த்துட்டேன்!என் அம்மூவை பார்த்துட்டேன்!"

"நான் யாரை பார்க்கவே கூடாதுன்னு நினைத்தேனோ!விதி அவனை மறுபடியும் என் வாழ்க்கையில கொண்டு வந்திருக்கு!"-என்றாள் நிர்பயா.

"இத்தனை வருஷம் யாருக்காக ஏங்கிட்டு இருந்தேனோ!அவ மறுபடியும் என் வாழ்க்கையில வந்துட்டா!"-என்றான் ஜோசப்.

"8 வருஷத்துக்கு முன்னாடி எந்த சக்கரம் என் வாழ்க்கையில சுழல கூடாதுன்னு நான் நிறுத்தினேனோ!அது அதே இடத்துல இருந்து மறுபடியும் சுழல ஆரம்பித்தது!"-என்றாள் நிர்பயா.

"8 வருஷத்துக்கு முன்னாடி நின்ற சக்கரம்,இன்னிக்கு மறுபடியும் அவளால சுழல ஆரம்பித்திருக்கு!"

"அண்ணா!இன்னும் உன் மனசுல அவங்க இருக்காங்களா?"

"அதை எப்படிடா சொல்வேன்??அன்னிக்கு அது மாதிரி அவ சொல்லிட்டு போன போது,அவ மேலே பயங்கர கோபம் வந்தது!மனசுக்குள்ள அப்படி ஒரு வெறுப்பு!!என்னை ஒருத்தி ஒதுக்கிட்டான்னு ஒரு எரிச்சல்!அவளை எதாவது பண்ணணும்னு ஆதங்கம்!!அதே சமயம்,அவ கொடுத்த அந்த ருத்திராட்சம் என் கண்ணுல பட்டது!ஒரு நாள் ஒரே ஒரு நாள்,ஏன் அவ சொன்ன மாதிரி வாழ்ந்து பார்க்க கூடாதுன்னு தோணுச்சு!அந்த ஒரு நாள் என் வாழ்க்கை!என் விதியை திருப்பி போட்டது.அன்னிக்கு என்னையே எனக்கு பிடித்தது!அன்றிலிருந்து இன்னிக்கு வரை எனக்கு அந்த வாழ்க்கையை மாற்றிக்க தைரியம் வரலை!"-அதை கேட்ட எட்வர்ட்டின் முகத்தில் பரவசம்!!

மதங்கள் கடந்த உன்னத பந்தம்!!நான் சில நேரங்களில் வியந்த சிந்தனை ஒன்றே!!எவ்வாறு இறைவனானவன் குறித்த சிலருக்கு மட்டும் குருதியில் ஜாதியை பார்க்கும் உக்தியை கற்று தந்தான்??ஒருவேளை அவர்கள் கண்களுக்கு மட்டும் தன் இனம் இல்லாதவரின் செங்குருதியானது,நீல நிறத்தில் தெரியுமோ??என்றெல்லாம் ஒரு எண்ணம் தோன்றும்!!அது ஏனோ இன்றுவரை அதன் விடை கிட்டவில்லை.நான் அறிந்த வரையில்,இறைவன் மதத்தை படைக்கவில்லை.அவன் படைத்ததெல்லாம் ஒன்றே தனி மனித ஒழுக்கத்தை!!உடனே,அதற்கு சாயம் பூசி,என் இறைவன் இப்படி கூறினான்!!அவனை வணங்குபவர்கள் மட்டுமே வாழ்வில் சிறப்பர்.எஞ்சியவர் நீச்சர் என்று கதை கட்டும் மனிதனின் கற்பனைத்திறனை கண்டு நிச்சயம் இறைவனே அதிசயமுற்றிருப்பார்!!!

விசித்ரமான மனிதர்கள்.... விட்டால்,மரணத்தின் போது மண்ணில் புதைக்கும் ஆறடி நிலத்திலும் இனத்தை பார்ப்பர் போலும்!!!

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.