Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 14 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It
Author: shaha

07. கல்யாணம் முதல் காதல் வரை - சஹானி 

 

Kalyanam muthal kathal varai

கோபமாக சென்ற கோமதியை எழிலும்... நழுவி சென்ற திவ்யாவை சரோ வும் பின் தொடர...

கோமதி சற்று தொலைவில் போடப்பட்ட இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

ஏய், மதி... இங்க பாரு என்று அவள் கை மேல் இவன் , தன் கை வைக்க அதை தட்டி விட்டு அந்த பக்கம் திரும்பினாள்.

சத்தியமா சொல்றேன்டி...எனக்கு அந்த பொண்ணு யாருனே  தெரியாதுடி... அப்டி இருக்கும் போது நா ஏன் அவ பேரை கேக்க போறேன் சொல்லு... என்றவன் குரல்... விட்டால், வேணா அழுதுடுவேன் என்றிருந்தது.

சட்டென்று சிரித்தாள் கோமதி...

அய்யோ மாமா,  நீ என்ன புரிஞ்சிகிட்டது அவ்ளோ தானா... நா என்ன பாப்பாவா திவ்யா சொன்னத அப்டியே நம்பிடுறதுக்கு... என்று கூறி அவன் கை மேல் கை வைத்தாள். 

அப்புறம் ஏன்டி, கோவமா வந்த....அப்பாவியாய் வினவினான் எழில்.

அதுவா.... நானா வந்து உன் கூட பேசனும் அப்படி கொஞ்சம் தனியா வானு கூப்ட்டா... வருவியா... மாட்ட தானே.... அதான் திவ்யா கோடு போட்ட நா அதுல கார் ஓட்டினேன்.... கொஞ்ச நேரம் உன்ன கலங்க வச்சு பாக்கலாம்னு வந்தா உன் முகமே எனக்கு சிரிப்பு வரவச்சிட்டுப்பா.... என்றாள் மீண்டும் சிரித்தவாறே.

ஏன்டி சொல்ல மாட்ட ....மனுஷன் பயந்தது எனக்கு தானே தெரியும்... என்று தலையை சிலுப்பி கொண்டான்.

அவன் செய்கையில் அழகாய் சிரித்தாள் அவன் மதி... அதன் பிடியில் கட்டுண்டு கிடந்தான்... மன்னவன்.

அப்புறம் மாமா , நேத்து நானும் திவியும் காலேஜ்க்கு அட்மிஷன் போட்டுட்டு வந்துருக்கோம்... அனேகமா அடுத்த மந்த் க்ளாஸ் ஸ்டார்ட் ஆகும்னு நினைக்கிறேன்...

அங்கயும் ஜோடியாதான் போறீங்களாடி காலேஜ் உருப்டாப்ல தான்... என்று கூறி மேலும் சில அடிகளை வாங்கி கொண்டான்...

இப்படியே இவர்களை பேச விட்டு விட்டு நாம் நம் பிரியமான ஜோடியை பார்க்க செல்வோம்.

இப்போ கைய விட போறிங்களா இல்லயா... என்று பல்லை கடித்து கொண்டிருந்தாள் திவ்யா.

அதை சட்டை செய்யாது அங்கும் இங்கும் பார்வையை ஓட விட்டான் சரோ.

நா கேட்டதுகு பதில் சொல்லு விடுறேன் ... என்று தோளை அலட்டினான்.

சரி சரி, சொல்றேன்.... ஆனா கை ரொம்ப வலிக்குது விடுங்க .... என்றாள்..

ஏனோ இவனிடம் மட்டும் தன்னால் வாயாட முடியவில்லை... என்று மானசீகமாய் தலையில் அடித்து கொண்டாள்.

ம்ம்ம்... நம்பி விடுறேன். ஆனா பதில் சொல்லாம ஓட பார்த்த... அப்போ இருக்கு உனக்கு.... என்று அவன் அவள் கையை விடுவிக்க...

அவனிடம் இருந்து விடுபட மனம் இல்லாது... மெதுவாய் தன் பக்கம் அவன் கையை இழுத்தவள்,

அட, இப்படி தான்.... எனக்கு வலிக்குதுனு சொன்னதும்... புடிச்ச கைய விட்டுருவீங்களாக்கும்... ? உங்கள நம்பி எப்படி நா கை கொடுக்குறதாம்....

ஆனா ஒன்னு நா பிடிச்ச இந்த கைய எப்பவுமே விட மாட்டேன் ...எப்பவுமே....பாலா.. நீங்க வலிக்குதுனு சொன்னா கூட... என்று கூறினாள் அவனை நோக்கி கண்ணடித்தவாறே.

அவ்வளவு தான் வானில் பறந்தான் சரவணன் என்கிற பாலசரவணன்.

ஏய் என்.... என் பேரு... உனக்கு எப்படி தெரியும்.. என்றான் புரியாமல்.

என் மாமியார் கிட்ட இருந்து கேட்டு தெரிஞ்சுகிட்டேன். 

அவங்க தான் எனக்கு ஃபுல் சப்போர்ட் தெரியுமா?....

என்ன? ... ஓட்ட வாய் அம்மா ... நா சொன்னதை எல்லாம் ஒலரிடுச்சா...

ஹாஹாஹா.. நல்ல புள்ளை... நல்ல அம்மா ...

நீங்க என் கிட்ட பேசிட்டு... நேரா அவங்கள்ட்ட தான் உங்க விருப்பத்த சொன்னதாவும்... அவங்களுக்கும் ஆரம்பத்துலயே இப்படி ஒரு எண்ணம் இருந்ததையும்.... ஒன்னு விடாம சொல்லிட்டாங்க... அது மட்டும் இல்ல அவங்க புள்ள சரியான அறுந்த வாலாம்... அந்த வால நான் தான் கல்யாணத்துக்கு பிறகு ஒட்ட நறுக்கி வைக்கனும்னு கேட்டுகிட்டாங்க... என்று கூறி சிரித்தாள்.

அப்படியா ... ஆனா உன் அப்பா என் கிட்ட வேற மாதிரில சொன்னாங்க... என்று கூற..

என்ன அப்பா... அப்பாவா? அப்பா என்ன சொன்னாங்க... என்று படபடத்தாள் பயத்தோடு.

அதற்குள்...கெட்டி மேளம் முழங்க ...மங்கள நான், மணமகள் கழுத்தில் மண மகனால் ஏற்றப்பட... பெரியோர் அனைவரும் எழுந்து அட்ஷதை தூவி ஆசிர்வதித்தனர்.

அவற்றுள் சில இந்த காதல் ஜோடிகளின் மீதும் பட்டு தெறித்தது.

அந்த நொடியில் அவன் கண்களுக்கு அவள் தன்னவளாகவே  பட்டாள்... மூளையின் மணி அவள் தந்தை கூறியதையும் .... அதற்கு இவன் வாக்குறுதியையும் நினைவு கொணர்ந்தான்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... இன்று அவர்களுக்கும் திருமண நாள் தான்... ஆமாம் இருவரின் மனமும் ஒன்றாய் இணைந்த இந்த நாள் அவர்களுக்கு... நன்னாள் தானே.

இருவருமே பலவாறு சிந்தித்து... இறுதியில் நிகழ்வலைக்கு திரும்பினர்.

சட்டென்று தந்தையின் முகம் கண் முன் வந்து போக ,

அப்பா...அப்பா  என்ன சொன்னாங்க பாலா... என்றவள் கேள்விக்கு பதில் பின்னிருந்து ஒலித்தது.... தந்தையின் குரலிலேயே

அப்பா , என்னக்கிமா உங்க சந்தோஷத்துக்கு குறுக்க நின்னுருக்கேன்... என்று

பதறி திரும்பியவள்... கண் முன் புன்னகையாய் அவர் முகம்.

 •  Start 
 •  Prev 
 •  1  2 
 •  Next 
 •  End 

About the Author

Shahani

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# RE: தொடர்கதை - கல்யாணம் முதல் காதல் வரை - 07 - சஹானிcaobgtco 2017-07-19 19:09
Very good.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கல்யாணம் முதல் காதல் வரை - 07 - சஹானிsind@12 2017-01-16 01:46
Nalla irunthathu kathai mulukka sirippa adakkave mudiyala enjoy pannen. Big stories ezhuthunga. Plz thank u
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கல்யாணம் முதல் காதல் வரை - 07 - சஹானிTamilthendral 2016-11-15 22:23
Short & sweet series Sahani :clap:
I enjoyed al d updates :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கல்யாணம் முதல் காதல் வரை - 07 - சஹானிmadhumathi9 2016-10-20 11:37
Nice end
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கல்யாணம் முதல் காதல் வரை - 07 - சஹானிDevi 2016-10-20 10:23
Lively final episode .. Sahani (y)
First epi lerndhu . Saro , Divya jodi gala gala.. (y) & Ezhil good friend :clap:
rendu pakka periyavangalum veena scene create pannamal adhe samayam pasangalukku vaazhkkaiyoda mukkiyathaiyum solli .. avangaliye mudivu edukka vachadhu :clap:
Congrats for complete the series (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கல்யாணம் முதல் காதல் வரை - 07 - சஹானிBindu Vinod 2016-10-20 08:54
Short epi endralum lovely final epi Shahani.

Bala Saravanan and Divya nalla jodi. Chinna epi'leyum avanga conversation rasikum padi irunthathu.

அட, இப்படி தான்.... எனக்கு வலிக்குதுனு சொன்னதும்... புடிச்ச கைய விட்டுருவீங்களாக்கும்... ? உங்கள நம்பி எப்படி நா கை கொடுக்குறதாம்....
ஆனா ஒன்னு நா பிடிச்ச இந்த கைய எப்பவுமே விட மாட்டேன் ...எப்பவுமே....பாலா.. நீங்க வலிக்குதுனு சொன்னா கூட
:roll:

Congrats on completing your story and good luck for your future stories :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கல்யாணம் முதல் காதல் வரை - 07 - சஹானிJansi 2016-10-20 07:11
Story mudinjiddaa Sahaani :)

Romba kala kalapana inimayaana todar ...vaaltukal

Innum elutunga (y)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top