(Reading time: 7 - 14 minutes)

ம்மா ரொம்ப நேரமா உன்ன தேடிட்டு இருக்கா போ போய் என்னனு கேளு... என்று அனுப்பி வைத்தார்.

இருவருக்குமே தெரியும் இது பொய் என்றும்... அதோடு அவர் கூறியதின் மறைமுகம்... அதிக நேரம் இப்படி நின்று பேச வேண்டாமே என்பதும்.

மாலை மயங்கும் வேளை...

விருந்தினர் விடை பெற்று செல்ல... நெருங்கிய சொந்தங்கள் மட்டும் ஒன்றாய் கூடினர் அவையில்.

அவையெங்கும் அமைதி நிலவ...

திவ்யாவின் பாட்டி தான் அந்த அமைதியை கிழித்தார்.

என்ன நாகு எல்லாரயும் ஒன்னா கூட சொல்லிட்டு இப்போ யாருமே பேசாம அமைதியாய் இருக்கீங்க ... என்றவாரு

அம்மா , எப்படி ஆரம்பிக்கனு தான் தெரியல.. ஆனா எல்லாருக்குமே இப்போ ஏன் கூடி இருக்கோம்னு தெரியும்...

சந்தியா- சந்திரன் திருமணம் முடிஞ்ச கையோடு  

இப்போ எழில்- கோமதி ,  சரவணன்- திவ்யா நிச்சயத்தையும் முடிச்சிடலாம்னு பெரியவங்க எல்லாருமே பேசி வச்சாச்சு... அதற்க்கான ஆயத்தம் தான் ... என்று கூறி விட்டு தன் மகளின் முகத்தை பார்த்தார்.

நம்ப முடியவில்லை... அவளால்,

புரியாமல் மற்ற மூவரின் முகம் பார்க்க, அவர்களுக்கும் தன்னை போன்றே எதுவும் தெரியாது  என்பது புரிந்தது.

அவர்களின் அந்த மோன நிலை மீளாது அவர்களை அறைக்குள் அழைத்து சென்று அலங்காரம் செய்து சபையில் அமர்த்தினர்... உறவினர் சிலர்.

மாயை போல் நடந்து முடிந்தது... நிச்சய நிகழ்வு.

சந்தோஷ வானில் சிறகடித்து பறந்தனர் காதல் குயில்கள்.

காதல் கை கூடுன நாள்லயே காதலியோடு நிச்சயதார்த்தம் ... நினைக்கவே சரோவிற்க்கு தித்திப்பாய் இருந்தது.

திவ்யாவின் தந்தை தன்னிடம் வேண்டியதை நிறைவேற்றும் நேரமிது.. என்று பேச தொடங்கினான்.

தன் தந்தையின் அருகில் சென்று நின்று கொண்டவாறு,

அப்பா-அம்மா எனக்கு புடிச்ச பொருள எப்பவுமே எனக்கு நீங்க சர்ப்ரைஸா தருவீங்க... அப்போலாம் நா எவ்வளோ சந்தோஷமா இருந்தேனோ அதவிட அதிக சந்தோஷமா இருக்கு எனக்கு இன்னக்கி... இவ்வளோ ஏன்... இந்த உலகத்துலயே இந்த நிமிஷம் என்ன தவிர யாரும் இவ்வளோ சந்தோஷமா இருக்க மாட்டாங்க... என்று அவர் கையை பிடித்து கொண்டான்.

ஆனால்... என்று இழுக்க,

கல்யாணத்த நாலு வருஷம் தள்ளி போட்டுக்கலாமே... என்று புயலை வீசினான்.

அனைவரும் அதிர்ந்து நோக்க,

தப்பா எடுக்க வேண்டாம், நா முதல்லயே சொன்னது போல தான், எனக்கு வேலைல பர்மணன்ட் லெட்டர் கிடைக்கனு... அதோட நானும் என்னோட ஸ்டேட்டச கொஞ்சம் உயர்த்திகனும்... கல்யணத்துக்கு அப்புறம் வாழ போற வாழ்க்கைகு காதல் மட்டும் போதாது... கொஞ்சம் காசும் வேணும். எல்லாத்துக்கும் மேல திவ்யாவோட படிப்பு முடியனும்... என்று நீள விளக்கம் கூறி திவ்யாவின் தந்தையை நோக்கினான்.

அவர், என்ன சொல்வதென்று புரியாது விழித்தார்.

அவர் திவ்யாவின் படிப்பை முக்கியமாய் கருதி சரவணனிடம் வேண்டியது என்னவோ உண்மை தான்... ஆனால் அது திருமணத்திற்க்கு பின் என்றாலும் சரியே ... என்று சேர்த்து தானே கூறினார். பின் ஏன் இப்படி..

அவர் எண்ண அலைகள் இத்திசையில் ஓட சரவணனின் குரலில் இயல்பு மீண்டார்.

அமிர்தம், எதோ சொல்ல வாயெடுக்க.. அதை தடுத்து... நீ சொல்லுறதை எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமும் செய்யலாம். படிப்பும் கூடனு தானே சொல்லவறீங்க... என்று தானே எடுத்தும் கொடுத்தான்.

அவர் ஆம், என்று தலை அசைக்க 

இல்லமா , எனக்கு இது தான்  சரினு படுது.... நீங்க என்ன சொல்றிங்க அப்பா என்று அவர் பக்கம் திரும்பினான்.

சரிதான்ப்பா... நீ சொல்லுறதுல எனக்கும் சம்மதம்ப்பா... என்று அனைவரையும் நோக்க அனைவருக்குமே சம்மதம் என்பது அவர்களின் முகத்திலிருந்தே தெரிந்தது.

கோமதியின் தந்தை  மட்டும் எழில் அருகினில் சென்று , அவனிடம் ...

உன்னோட விருப்பத்த சொல்லுப்பா... என்றார்.

ஆஹா, மனுஷன் நம்மளையும் ஹீரோனு நினைச்சி வந்து கேக்குறார்... சரி சொல்லுவோம் என்று அன்னிலையிலும் அவன் மனம் எண்ண ...

மாமா, சரோவோட அபிப்ராயம் தான் என்னோட அபிப்ராயமும் கூட... அதனால, மதி படிப்பு முடியுறதுக்குள்ள நானும் என்னோட வேலையில ஒரு நல்ல பொசிஷனுக்கு வந்துருவேன்... என்று அவனும் பச்சை கொடி காட்டினான்

ஆக அனைவருமே திருமணத்தை நான்கு வருடம் கழித்து வைப்பதாய் முடிவு செய்தனர்.

இந்த நான்கு வருடங்களும் ஏன் அதன் பின்னும் இவர்களின் வாழ்வினில் உல்லாசமே

இனி வேறென்ன... இவர்களின் வாழ்வில் ஆனந்தம்.... ஆனந்தமே...

முற்றும்!

Episode # 06

{kunena_discuss:960}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.